ஓட்ஸ் கார்ன் பார்

தேதி: December 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. ஓட்ஸ் - 1/2 கப்
2. கார்ன் ஃப்லேக்ஸ் - 1/2 கப்
3. பாதாம் - 4
4. முந்திரி - 4
5. பிஸ்தா - 4
6. வேர்கடலை - 1/4 கப்
7. பொரி - தேவையான அளவு
8. ஸ்வீட்டன்டு கன்டன்ஸ்டு மில்க் - 100 - 150 கிராம்
9. பொடியாக நறுக்கிய தேங்காய் - 4 தேக்கரண்டி
10. நெய் - 1 தேக்கரண்டி


 

கடலையை வறுத்து தோல் நீக்கவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் வறுக்கவும்.
வறுத்த கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, கார்ன் ஃப்லேக்ஸ் எல்லாம் ஒன்றாக மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.
நான்ஸ்டிக்கில் கன்டன்ஸ்டு மில்க் ஊற்றி தேங்காய் துண்டுகள் சேர்த்து கிளரவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ஓட்ஸ், பொடித்த கலவை சேர்த்து எடுக்கவும்.
வெது வெதுப்பாக இருக்கும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, மேலே பொரியை தூவி அழுத்தி பின் துண்டுகளாக வெட்டவும்.


மேலும் சில குறிப்புகள்