காது குத்தும்போது வலியில்லாமல்

என் மகனுக்கு 2yrs completed.அடுத்த மாதம் பழனியில் காது குத்துகிறோம்.வலிக்காமல் இருக்க எதேனும் மருந்து உண்டா?.தோழிகளே உங்கள் குழந்தைக்கு வலிக்காமல் இருக்க என்ன செய்தீர்கள் என்று சொல்லவும்.

குழ‌ந்தையின் காதில் ம‌றுத்து போகும் ointment ஒன்று தட‌வுவார்க‌ள். இத‌னால் காது குத்தும் போது குழந்தைக்கு வ‌லி தெரியாது. காது குத்திய‌பின் spray ஒன்று அடிப்பார்க‌ள். அது செப்டிக் ஆகாம‌ல் இருக்க‌.
ம‌ருந்து பெய‌ர் என‌க்கு தெரிய‌வில்லை. மெடிக‌ல் ஷாப்பில் கேட்டால் தருவார்க‌ள் என‌ நினைக்கிறேன்.
அன்புட‌ன்,
புவ‌னா.

நான் ஒன்னு சொன்னன தப்பா நினைக்க மாடீங்களே? குழந்தைக காது குத்தும் போது, கொஞ்சமாவது அழுகனும், அந்த அழகே தனி. இப்பதிக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், இந்த மாதிரி சின்ன சின்ன நிகழ்வுகள், வருங்கலத்துல இல்லாம அலுஞ்சே போய்டும். கண்ல தக தக ன்னு தண்ணி வெச்சுட்டு, போட்டோ க்கு போஸ் தர அழகு க்கு கோடி ரூபாய் தந்தாலும் ஈடு இணை ஆகாது. என்ன தான் அறிவியல் வளந்துட்டாலும், இயற்கையான சில அழகுகளை/நிகழ்வுகளை நாமும் அப்படியே விட்டுவிட்டால் மேலும் அழகு கூடும்.....
இது என்னோட பர்சனல் கருத்து. தப்ப நினைக்க வேண்டாம் சுதா

அந்த காலம் மாதிரி, காத்து குத்தறது ரொம்ப வலி எல்லாம் இருக்காது, கொஞ்சமா தான் இருக்கும். எங்க அக்கா பையனுக்கு குத்தினோம், 2 வயசுல தான் நாங்களும் குத்தினோம், அவனுக ரொம்ப எல்லாம் அழுகல. சீக்கரமே உங்க செல்லத்துக்கு காது குத்திட்டு இங்க வந்து சொல்லுங்க. மத்த தோழிகளுக்கும் உபயோகமா இருக்கும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எங்க வீட்டுக்கு சுட்டிக்கு காது குத்தும் போது கூட நான் ரொம்ப பயந்தேன்.. என் காதுகளைப் பொத்திக் கொண்டு.. என்னவோ எனக்கே குத்துவது போல்.. :P

நிஜத்தில் குழந்தைகள் காது குத்துவதற்கு பயந்து அழுவது இல்லை.. குழந்தையின் காது குருத்து மிகவும் மென்மையாக இருப்பதால் ஒரு நொடிப் பொழுதில் காது குத்துவது முடிந்து விடும்.. அதிலும் நாங்கள் எங்கள் அண்ணா குழந்தைக்கு 11 மாதத்திலேயே செய்து விட்டோம். கூட்டத்தையே பார்க்காமல் அன்று திடீரென புதிதாக நிறைய மனிதர்களை பார்த்ததாலும் ஆளாளுக்கு எடுத்து கொஞ்சியதாலும் தான் அவள் அழுதாள்.காது குத்திய நிமிடத்தில் அந்த வலிக்கான சிறு அறிகுறி கூட அவள் முகத்தில் தெரிய வில்லை. ;)

சுற்றி இருக்கும் சுற்றத்தையும் புது மனிதர்களையும் புது சூழ்னிலையையும் பார்த்துதான் பெரும்பாலான குழந்தைகள் அழும்.எனவே அதற்கு குழந்தையை ஓரளவு தயார் செய்து விட்டாலே போதும்.. குழந்தை ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருக்கும் என்பது என் கருத்து :)

மற்றபடி குழந்தைக்கு காது குத்தப் பயன் படுத்தும் ஊசி தூய்மையானதாக இருக்கிறதா என் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

மொட்டை அடிக்கும்போதே ரொம்ப அழுதான்.காது குத்தும்போது நினைத்தால் பயமாக உள்ளது.ஒரு சிலர் மறுத்து போக மருந்து உள்ளது என்று சொன்னார்கள்.ஒரு சிலர் doctor கிட்ட குத்தலாம் என்று சொன்னார்கள்.அதனால்தான் கேட்டேன்.

சரியாக சொன்னீங்க சுகந்தி.... காது குத்தும் போது எப்படியும் குழந்தைங்க அழுகத்தான் செய்வாங்க... ஆனால் அது ஒரு 30 நிமிசத்தில் சரியாயிடும்... அதல்லாம் அப்புறம் மறந்திட்டு விளையாடுவாங்க.... ரொம்ப சின்னதில குத்திறதும் நல்லதுன்னு சொல்லுவாங்க.ஏன்னா சின்னதுல விவரம் தெரியாது... அந்த வலி இருக்கும் போதும் மட்டும் அழுவாங்க அதையே நினைச்சிட்டு இருக்க மாட்டாங்க. இப்ப கொஞ்ச விவரமுன்னா ... சாப்பிட சொன்னாலும் அந்த காதைப் பிடிச்சு காட்டி ரொம்ப வலிக்கிற மாதிரி எல்லாம் ஆக்ட் பன்னுவாங்க அவ்வளவுதான்... கிகி

ஜுவல்லரியில் பண்ணும் GunShot பத்தி சொலலுங்களேன். நல்லதா? எதாவது பாதிப்பு வருமா?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ellorukum hai.. nan nimmi.. ennayum unga chat ku sethu vinggala

ebdi irukinga am good

Be happy

மேலும் சில பதிவுகள்