மிக்ஸ்டு ஃப்ரூட் அல்வா

தேதி: December 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மாம்பழம் - 1
2. பப்பாளி - 1/4
3. பேரீட்சம் பழம் - 5
4. வாழைப்பழம் - 1
5. சர்க்கரை - தேவைக்கு


 

பழங்களை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய பழத்தில் சிறிதை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதம் உள்ளதை மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.
அடித்த கூழை பாத்திரத்தில் கொட்டி, எடுத்து வைத்த துண்டுகளையும் சேர்த்து கை விடாமல் கிளரவும்.
கலவை பச்சை வாசம் போனதும் சர்க்கரை சேர்த்து கிளரவும்.
முதலில் நீர்க்கும், கொஞ்சம் நேரத்தில் கெட்டியாகி அல்வா பதம் வந்ததும் எடுக்கவும்.


சாப்பிடும்போது அல்வாவுடன் பழ துண்டுகளும் கிடைக்கும், சுவையாக இருக்கும். இதை ப்ரெட்டுடன் ஜாம் ஆகவும் பயன்படுத்தலாம். விரும்பிய பழங்கள் சேர்க்கலாம். கொய்யா சேர்க்கும் முன் விதையும் எடுக்கவும். ஆப்பிள் வேக வைத்து சேர்க்கவும். திராட்சையும் விதை, தோல் நீக்கவும். சப்போட்டா கூட சேர்க்கலாம். விரும்பினால் கடைசியில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த அல்வாவிற்க்கு நெய் சேர்க்க வேண்டாமா?

கட்டாயம் கிடையாது, பிசுபிசுப்பு இருக்கும், வழு வழுன்னு வர வைக்க நெய் விருப்பம் போல சேர்க்கலாம். நான் நெய் சேர்க்காம செய்ய முடிஞ்சதை எல்லாம் சேர்க்காம இருக்க பார்ப்பேன்.. அவ்வளவு தான். :) இது ஜாம் போலவும் பயன்படுத்துவது என்பதால் நெய் சேர்க்காமல் தந்திருக்கேன். அடிக்க கூழ் பதம் வராத பழங்கள் அதிகமிருந்தால் பால் சேர்த்து அடிக்கலாம். நன்றாக வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி, செய்து பார்த்துட்டு நாளைக்கு சொல்றேன்

தேன்க்யூ ;) எக்ஸாம்னு சொன்ன மாதிரி ஒரு பதட்டம்... ரிஸல்ட் நாளைக்காச்சே... காத்திருப்போம், பாஸ் பண்ணிடனும் கடவுளே!!!

நல்லா வந்துட்டா அப்படியே ஒரு அழகான படத்தையும் எடுத்து இங்குட்டு சேர்த்துப்போடுங்க வாணி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஐயையோ இப்போ எனக்கு பீதியாயிடுச்சே, நல்லா பண்ணணுமேன்னு , சரி முயற்ச்சித்துத்தான் பார்ப்போம்

வனி, நேற்று இரவு அல்வா செய்தேன், நல்ல ருசியாக இருந்தது. நெய் இல்லாமலே ருசியா என்று ஆச்சரியம்,அத்துடன் சர்க்கரை சேர்க்கவே இல்லை. படம் எடுத்தேன், இன்னும் அப்லோட் பண்ணாததினால் இப்போ அனுப்ப முடியவில்லை அவசரமா வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.வருவதற்க்கு இரவாகி விடும். மற்ற விவரங்களைக் அப்புறம் குறிப்பிடுகிறேன்.

தேன்க்யூ சோ மச் வாணி :) படிக்கும் போதே அப்பாடா “ஹைய்யா நான் பாஸாயிட்டேன்”னு ஒரே குஷி தான் ;) வேலையை முடிச்சுட்டே வாங்க... டீம் எப்போ சேர்ப்பாங்க, எப்போ பார்க்கலாம் படம்னு காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா