குழந்தை உணவு உதவி செய்ங்க

என் குழந்தைக்கு 1 வயது ஆகிறது.அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்

பருப்பு சாதம் , கேரட் வேக வைத்தது , உருளைகிழங்கு வேக வைத்தது , இட்லி , ஜூஸ் , ஆப்பிள் வேக வைத்தது,சூப் , சப்பாத்தி பாலில் ஊறவைத்து , பொங்கல் , பால் குடுக்கலாம் . மற்றது நமது தோழிகளும் சொல்வார்கள்

உருளைகிழங்கை வேகவைத்து மசித்து கொடுங்கள் நல்ல வளர்ச்சி உண்டாகும். முளைகட்டிய பயிறு கஞ்சி தரலாம்( ) காலை உணவாக கஞ்சிய தரவும். 1 இட்லி,1 ஊத்தப்பம்,பாலில் பிய்த்து போட்ட சப்பாத்தி (மென்மையாக இருக்கும்) 12 மணி போல் ஆரஞ்சு ஜூஸ் தரவும். குழந்தைக்கு நல்ல பசி எடுக்கும்,நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும். மதியம் பருப்பில் 1 சி.வெங்காயம்,1 வெள்ளைபூண்டு,துளி சீரகம்,1 துண்டு கேரட் போட்டு வேக வைத்து நன்கு மசித்து துளி நெய் விட்டு சாதத்துடன் கலந்து தரலாம். ஆனால் ஒன்று தோழி ஆர்வக்கோளாறினால் குழந்தை குண்டாக வேண்டும் என்று எதையுமே அதிகப்படியாக திணிக்க வேண்டாம்.(பாவம் குழந்தைகள் சொல்லத்தெரியாது அழுகத்தான் தெரியும்)

அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவைத்து கொடுக்கலாம். அதனுடன் துருவிய கேரட் , பீட்ருட் அல்லது பாலக்கீரை சேர்த்து கொடுக்கலாம். சாதம் தயிர் சேர்த்து கொடுக்கலாம்.

Expectation lead to Disappointment

11 மாத குழந்தைக்கு இரவில் என்ன சாப்பாடு குடுக்கலாம் ...? தோளிகளின் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.

நன்றி.

ஹாய் சர்மினி..

எனது குழந்தைக்கும் இப்போதுதான் ஒரு வயது.குழந்தைகள் ஒரு வயதை நெருங்கும் போது படிப்படியாக அவர்களுக்கு எமது உணவுப்பழக்க வழக்கங்களை அறிமுகப்படத்தலாம் என்று எனது midwife கூறியிருந்தா.அதனால் எனது குழந்தைக்கு இரவில் பொதுவாக நாங்கள் சாப்பிடும் உணவையே காரம், அதிக எண்ணெய் தவிர்த்து கொடுக்கிறேன். குறிப்பாக spagetti,pasta போன்ற உணவுவகைகளை நன்கு மசித்து கொடுக்கலாம்.அவ்வாறான உணவை குழந்தை விரும்பியுண்ணாதபட்சத்தில் brei கொடுக்கலாம்.குறிப்பாக nestle தயாரிப்பான vollcorn brei mit fruchte, cerelac, banana mit griess brei போன்றவற்றையே நான் கொடுக்கிறேன்.

குழந்தைகளுக்கான இரவு உணவை சற்று வேளைக்கு கொடுத்துவிடுவதே நல்லது.அதாவது மாலை 6,7 மணிக்குள்.அதிலும் சமிபாட்டுக்கு இலகுவான உணவு சிறந்தது.பிறகு வேண்டுமானால் நித்திரைக்குச் செல்லுமுன் வழக்கமாக நீங்கள் கொடுக்கும் பால் அல்லது தாய்ப்பால் கொடுக்கலாம்.

எனது குழந்தைக்கு நான் கொடுப்பதையே உங்களுக்கும் கூறியிருக்கிறேன்.முயற்சி செய்துபாருங்கள்.

நானும் சுவிசில்தான் வசிக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனையில்லாவிட்டால் நீங்கள் சுவிசில் எங்கு வசிக்கிறீர்கள் என்று கூறுங்கள்..

மீண்டும் சந்திப்போம்...

நன்றி அன்சிகா ,

நான் இரவில் Brei தான் குடுக்கிறனான். ஒரு முறை இடியாப்பம் செஇது குடுத்து பார்த்தேன்.என் பொண்ணு அப்படியே துப்புற ... அப்புறம் நீங்கள் சொல்லும் Corn & Früchte Brei தான் குடுக்கிறேன்.

நான் சுவிஸில் Aargau Kantonla என்ற இடத்தில் இருக்கேன்.... நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் .... ?

உங்களுக்கும் பெண் குழந்தையா? என்ன பெயர்? குழந்தைக்கு இடியப்பம் பிடிக்காததன் காரணம் தெரியவில்லை.சிலவேளை அவவுக்கு விழுங்க கடினமாக இருந்திருக்கலாம்.உங்கள் குழந்தைக்கு பல் முளைத்துவிட்டதா? இல்லையென்றாலும் அவர்களுக்கு மென்று விழுங்க கஸ்டமாகவிருக்கும் brei சாப்பிடுவாவாக இருந்தால் சிறிது காலம் பொறுத்து நமது உணவுகளை பழக்கப்படுத்துங்கள்...

நான் kanton schwyz இல் இருக்கிறேன்.அறுசுவை தளம் மூலமாக உங்களை அறியக்கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..

ஆமா அன்சிகா, எனக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும்,பையனுக்கு 8 வயது, பொண்ணுக்கு இந்த மாதம் தான் 1 வயது ஆகின்றது. பெயர் ஸ்டெவிகா (Stevika).ம்ம்ம் நீங்கள் சொல்லறத போல இருக்கலாம்.ஏன்னா பல் இந்த வாரம் தான் தெரிஞ்சுது.... இப்பதான் கொஞ்சமா வெளிய தெரியுது.இவ்வளவு பல்லக் காணாமேன்னு ஏங்கிட்டு இருந்தன்.இப்பத்தான் பல் வந்திருக்கு.பல் இல்லாம இருந்ததனால் தான் இடியாப்பம் சாப்பிடலியோ தெரியல..... ஆகா... நீங்க தூரமா இருக்கீங்க போல...எனிவே உங்களை அறுசுவை மூலம் சந்தித்ததில் எனக்கும் சந்தோசம்.உங்க பொண்ணு எப்படி இருக்கா ?? இப்ப நடக்கிறாவா...'

ஹாய் தோழிகளே...
எல்லோரும் நலமா??? எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்...எனக்கு 1 1/4 வயசுல குட்டி பையன் இருக்கான். அவன் நல்ல சுறுசுறுப்பா தான் இருக்கான்..ஆனா எதுமே சரியாய் சாப்பிட மாட்டேன்கறான்...பால் அவனுக்கு முதல்ல ஒத்துக்கல... அதனால ஒரு வருசத்துக்கு அப்றோம் தான் கொடுக்க ஆரம்பித்தோம்..அனா குடிக்க மட்டேன்கறான்... தாய் பால் கொடுத்துட்டு இருக்கேன்... ஆனா தாய் பால் குடிகரதுனால தான் சாப்ட மட்டேன்கரானு சொல்லராங்க...இப்போ வெயிட் எட்டரை கிலோ தான் இருக்கான்.. ப்ளீஸ் என்ன பண்ணறதுன்னு சொல்லி ஹெல்ப் பண்ணுங்க...

SaranyaBoopathi

வணக்கம் சரண்யா.
தாய்ப்பால் குடிக்கும் சில குழந்தைகள் வேறு பல் குடிப்பது கஷ்டம் தான். என் பெண்ணும் இப்படி தான். இப்போ தான் கொஞ்சம் குடிக்க ஆரம்பித்து இருக்கா ( மித்ராக்கு 20 மாதம்). அதனால் கவலை படாதீர்கள். சிறிதளவு பாலை கஞ்சி அல்லது பால் சாதமாக கொடுக்கலாம்.
குழந்தை எடை பற்றி கவலை படாதீர்கள். வளர்ச்சி சதவிகிதம் சரியாக இருந்தால் ( There is a Groth Chart Available in Net also. ) மற்றும் சுறுசுறுப்பாக இருந்தாலே போதும். சில குழநதைகள் ஆரம்பம் முதலே 25 சதவிகித வளர்ச்சி மட்டுமே கொண்டு இருப்பார்கள்.

அன்புடன்
வீணா

அன்புடன் தோழி
வீணா

மேலும் சில பதிவுகள்