இரு கேள்விக்கு ஒரு பதில்..பகுதி-2

வாங்க தோழிகளே...
இனி இதிலிருந்து உங்கள் கேள்விகளை கேளுங்கள்...
முதலில் ஒரு நகைச்சுவையோடு மகிழ்ச்சியோடு தொடங்குவோம்.....

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.
புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.......

சரி தோழிகளே காட்டுங்கள் உங்கள் மொழி திறமையை..........

சாப்பிட்ட பின்பு இதை வாயில் போடவும் முடியும், வாயிலில் போடவும் முடியும்
கண்டுபிடியுங்க....

God bless us.

1.வெற்றிலை
2.வெற்றிலை(வெற்று இலை,அதாவது சாப்பிட்டு முடித்த இலை)
பதில் சரியா?

சரிதான் தோழி உங்கள் விடை வாழ்த்துக்கள்.....

God bless us.

1. ஒரு திண்பண்டம்
2. உடம்பில் இப்படியாவதால் வலி உண்டாகும்
அது என்ன?
நன்றி ரூபி.மூளைக்கு அருமையான வேலை தருகி
றீர்கள். வாழ்த்துக்கள்.

முறுக்கு

சரியான விடை தோழி. இப்போ பார்போம்.
1.இங்கே தங்கலாம்
2.இதால் அழுகை வரும்.

1.வானவீதிக்கு சொந்தமானது
2.இதால் பிரச்சனைகள் வரும்.
பதில் கூறுங்கள் தோழிஸ்..

காற்று சரியா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மிக்க நன்றி தோழி..லீலா....
விடை
1.அறை
2.கோள்..
சரியா தோழி...

God bless us.

இதற்கு பதில் சொல்லுங்கள்

அளக்கப் பயன்படுவது
அறிவு வளர

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்