சேமியா கேசரி

தேதி: December 31, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

சேமியா - கால் கிலோ
நெய், சீனி - தேவைக்கேற்ப
பாதாம், முந்திரி, திராட்சை - தலா 5
ஏலம், கிராம்பு - தலா 3
பட்டை - ஒன்று
பால், தண்ணீர் - அரை கப்
பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை மூடி
உப்பு - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும் பாதாம், முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும்.
வறுப்பட்டதும் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பால், தண்ணீர், சிறிதளவு உப்பு, கேசரி பவுடர் அனைத்தையும் கலந்து வைத்துக் கொண்டு சேமியா வறுப்பட்டதும் அதில் ஊற்றிவிட வேண்டும்.
சேமியா நன்கு வெந்ததும் தேவையான அளவு சீனி சேர்த்து கிளற வேண்டும்.
சுருண்டு வரும் போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக பன்னீர் சேர்த்து இறக்க வேண்டும்.
சுவையான சேமியா கேசரி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹசினா சேமியா கேசரி சூப்பர் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா....நலமா?
எல்லாம் நியூ இயர் ஸ்பெஷலாக ஸ்வீட்டை தந்து அசத்துறீங்க.....
இப்ப யார் ஸ்வீட்டை முதலில் சாப்பிடுரதுன்னுதான் தெரியல பா....
நாங்கள் கேசரி பவுடர் சேர்த்து செய்வோம்.நீங்கள் நேச்சுரல் கலரிலேயே செய்திருப்பது நல்லாதான் இருக்கு ஹசீனா...

வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வாழ்த்துக்கள் ஹசீனா எனக்கு ரொம்ப பிடித்த சேமியா கேசரி கலர் சேர்க்காமல் செய்து இருக்கிங்க சூப்பர் ..

வாழு, வாழவிடு..

எனது குறிப்பை வெளியிட்டதர்க்கு அட்மின் அவர்களுக்கு என் நன்றிகள் .நன்றி. .நன்றி.

ஹசீன்

ரொம்ப நன்றி மா.

ஹசீன்

வளைக்கும் சலாம் அப்சரா....

நாங்கள் nalam.neega குட்டீஸ் நலமா?

கேசரி எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.இருபினும் போட்டோ எடுத்து அனுப்பிவிட்டேன்.

வாழ்த்துக்கு நன்றி அப்சரா.

ஹசீன்

ருக்ஸானா,வாழ்த்துக்கு தேங்க்ஸ்.நீங்க விதவிதமா செய்யுறீங்க.great

ஹசீன்

ஹசீனா... வழக்கமான கேசரிய விட இது பார்க்க சூப்பரா இருக்க், குழந்தைகளுக்கும் பிடிக்கும். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹசீனா, நல்ல குறிப்பு. பால் கடைசியில் தான் சேர்ப்போம். அப்புறம் ரோஸ் வாட்டர் சேர்த்த்தில்லை. இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கிறேன். எனக்கு ஸ்வீட்’னா ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

சேமியா கேசரி எங்க வீட்டில் அனைவருக்கும் பேவரிட், அடிக்கடி செய்வது, லஞ்ச் பாக்ஸ் அடிக்கடி செய்வேன், பால் , ரோஸ் வாட்டர் சேர்ப்பதில்லை.
துருவிய தேங்காய் சேர்ப்பேன்.

குறிப்பு நல்ல் இருக்கு
ஜலீலா

Jaleelakamal

வனி அக்கா,வாழ்த்துக்கு நன்றி.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா.செய்து பாருங்க.

`

ஹசீன்

ஹாய் பவி நலமா? செய்துப்பாருங்க.ரோஸ் வாட்டர் சேர்ப்பது குழந்தைகளுக்கு நல்லது.

சாதரணமாக கொடுத்தால் சளிபிடிக்கும்.இப்படி சேர்த்தால் சளியும் பிடிக்காது,உடல் சூடும் தணியும்.

நன்றி பவி.

ஹசீன்

சலாம் ஜலீலா அக்கா.நலமா.

ரொம்ப நன்றி அக்கா.உங்கள் குறிப்புகள் அனைத்தும் படு சூப்பர்.

கப்சா செய்தேன் நல்லா வந்தது.இவ்வளவு குறிப்பு தங்கள் கைவசம் உள்ளதா. மாஷா அல்லா.அறுசுவையின் முன்னணி ஹீரோயின்.நீங்க தான்.

வாழ்த்துக்கள்மா.

ஹசீன்

ஹசினா,சேமியா கேசரி நன்றாக இருக்கிறது. புதுவித டேஸ்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

செய்முறை விளக்கம் ஈசியாகவும் , படங்கள் நன்றாகவும் உள்ளது.செய்து ருசிபார்த்து விட்டு வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சுவையான கேசரி. மிகவும் பிடித்தது. நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ந்ன்ட்ரஹ இருந்தது, என் கனவர் விரும்பி சாப்பிடார். மிஹவும் நன்ட்ரி.