பட்டிமன்றம் - 32 : அழகு என்பது உடலா?? உள்ளமா?

தோழிகளே.... வந்துட்டோம்ல... ;) புது தலைப்போட!!! புது வருடம், புது பட்டிமன்றம்.

//அழகு என்பது உடலா?? உள்ளமா?//

அருமையான இந்த தலைப்பை தந்தவர் நம்ம தோழி திருமதி. ரஃபி. அவருக்கு முதல்ல என் நன்றியை சொல்லிக்கறேன். மனித மனம் தானே அழகு??? மனசு நல்லா இருந்தா அவங்க நம்ம கண்ணுக்கு அழகா தான் தெரிவாங்க. அப்படின்னா நாம ஏன் நம்மை அழகு படுத்தறோம்??? வெளி தோற்றம் அழகா இருக்க ஏன் கஷ்டபாறோம்?? குழப்புதில்ல??? நானும் குழம்பி தான் போயிருக்கேன். உங்க வாதத்தால் தெளியும்'னு நம்பறேன். வழக்கமான பட்டியின் கட்டுப்பாடுகள் (http://www.arusuvai.com/tamil/node/13676) இந்த பட்டிக்கும் உண்டு.

இனி யாரும் தூங்க கூடாது. பட்டிக்கு வரலன்னா வனி அழுதுடுவா... வந்தும் பதிவிடலன்னா பென்ச்'ல ஏத்திடுவா. அதனால் எல்லாரும் வாங்க, பட்டியை வெற்றி பெற செய்யுங்க. :)

நாளைக்கு தலைப்பை சொல்லி நீங்க யோசிக்க இன்னும் 2 நாள் எடுத்து அப்பறம் வந்து வாதாட கூடாதில்ல. அதான் இன்னைக்கே சொல்லிட்டேன்.... இன்னைக்கு முழுக்க யோசிச்சு எந்த அணின்னு முடிவு பண்ணிட்டு நாளைக்கு காலையில் வாதத்தோட வந்துடுங்க. சரியா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புத்தாண்டின் முதல் பட்டி மன்றத்தின் நடுவராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பட்டி மன்றத்தில் எந்த அணியில் வாதிடலாம் என்று யோசித்து பின் வருகிறேன்.

அன்புடன்
THAVAM

புது வருடத்தின் முதல் நடுவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.புத்தாண்டின் முதல் பட்டிமன்றத்தில் பங்கேற்று சிறப்பிக்கவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.

நடுவரே,இன்றைய காலகட்டத்தில் அவசியம் அலசப்பட வேண்டிய ஒரு தலைப்பு.நல்லதொரு தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

எனது அணியை தேர்வு செய்து விரைவில் வாதங்களுடன் வருகிறேன்.

அன்புடன்
நித்திலா

புத்தாண்டின் முதல் பட்டி மன்றத்தின் நடுவராக பொறுப்பேற்றிருக்கும் நடுவருக்கு என் வாழ்த்துக்கள்.
பட்டி மன்றத்தில் எந்த அணியில் வாதிடலாம் என்று யோசித்து வருகிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

புத்தாண்டின் முதல் நடுவருக்கு வாழ்த்துக்கள்(என்னால வாழ்த்த மட்டும்தான் முடியும்)மீண்டும் வாழ்த்துக்கள் வனி

அழகான நடுவருக்கு, என் முதற்கண் வணக்கங்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக. நான் உங்களை இதுவரை பார்த்ததில்லை இருந்தபோதும் உங்கள் மெஹந்தி டிசைன்ல நீங்க போட்டிருந்த அழகு கைல அந்த டிசைனும் எவ்ளோ அழகா இருந்தது. அதை வச்சே உங்க அழகை சொல்லலாம்ல. இப்போது ஓரளவு உங்களுக்கு புரிந்திருக்கும் நான் எந்த பக்கம் வாதாட போகிறேன் என்று. அதே... அதே தான் அழகு என்பது உடல் அழகு தான். அதை பற்றியே பேச போகிறேன். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற நல்ல தலைப்பு.

தலைப்பை தந்த தோழிக்கும்,தலைப்பை தேர்ந்தெடுத்த புது வருடத்தின் புது நடுவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே, இறந்த பிறகும் இன்று வரை அழியாப்புகழ் பெற்ற கிளியோபாட்ரா, மர்லின் மன்றோ இவர்களெல்லாம் அழக்கான உள்ளத்தால் புகழ் பெற்றார்களா? உடல் அழகால் புகழ் பெற்றார்களா? நீங்களே சொல்லுங்க. அட, இன்னைக்கு பட்டி தொட்டி எங்கும் அழகுக்கு யாரை உதாரணம் சொல்லுவாங்க ஐஸ்வர்யா ராயை தானே. யாராவது ஐஸ்வர்யா ராய் கூட பழகி பார்த்து, ஆஹா... ஐஸ்வர்யா நல்ல உள்ளம் பா. அதனால தான் அவங்க அழகுன்னு சொல்றோமா? இல்லையே.

ரோட்ல பசங்க கூட அழகான பொண்ணுங்கள பார்த்து தான் காதல்வயப்படுவாங்களே ஒழிய... நல்ல உள்ளத்தை பார்த்து அல்ல... அப்படியே காதல் வயப்படுபவர்கள் மிகச்சிலரே. இன்றைக்கு கரிச்சான்குச்சி மாதிரி இருக்கும் மாப்பிள்ளைகள் கூட உலகத்தில் உள்ள நடிகையரின் அழகையெல்லாம் போட்டு கலக்கி வச்ச பொண்ணு தான் தனக்கு பொண்டாட்டியா வேணும்னு கங்கணம் கட்டிட்டு கொம்பு ஊன்றும் வரை பொண்ணை தேடிட்டு இருப்பாங்க.

நடுவர் அவர்களே பொய் சொல்லாம சொல்லுங்க, ஒரு துணிகடைக்கு போறீங்க, அங்கே அழகா இருக்க டிரெஸ் எடுப்பீங்களா? அல்லது அதுக்கு பக்கத்துலயே சுமாரான டிசைனோட சூப்பரா உழைக்கும் நல்ல உள்ளம் படைத்த டிரஸ்ஸை எடுப்பீங்களா? அழகானதை தானே செலக்ட் பண்ணுவீங்க. அதே மாதிரி ஒரு பழக்கடைக்கு போய் பளபளன்னு இருக்க ஆப்பிளை எடுப்பீங்களா? அங்கங்கே சொறி வந்த மாதிரி இருக்க ஆப்பிளை எடுப்பீங்களா? பளபளப்புக்கு பின்னாடி இருக்க வில்லங்கம் இங்கே எத்தனை மக்களுக்கு தெரியும்? அவங்களுக்கு தேவை பளிச்சுன்னு அழகா இருக்க பழம். ஆக, பழத்துல கூட அழகான பழமா எடுக்கறாங்கன்னா, இதுலயிருந்தே அழகோட முக்கியத்துவம் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அடுத்த பட்டி திருவிழா ஆரம்பித்தாச்சா???இனி அறுசுவை கழைகட்ட தொடக்கி விடும்.

போட்டிக்களம் விழாக்கோலம் பூண வாழ்த்துகள்.

ஆரம்பித்து வைத்த வனிதாவுக்கும், பங்கெடுத்துக்கொண்டு சிறப்பிக்கவிருக்கும் உறவுகளுக்கும் என் வாழ்த்துகள்.

நாளை எனது வாதங்களுடன் வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்புள்ளம் கொண்ட மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கு எனது அன்பான முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.சந்தேகத்தை கேட்டவுடன் பாசத்தோடும் அக்கறையோடும் பதில் அளிக்கும், நல்லுள்ளங்களைக் கொண்ட அறுசுவை தோழிகளுக்கும் எதிரணியில் வாதாட இருக்கும் தோழிகளுக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு பட்டி மன்ற தலைப்பான " அழகு என்பது உடலா அல்லது உள்ளமா ?? " என்ற தலைப்பின் கீழ் அழகு என்பது உள்ளத்தில் தான் உள்ளது என்று வாதாட வந்துள்ளேன்.

நடுவர் அவர்களே, எதிரணியிலிருந்து முதல் கருத்தை வைத்த சகோதரி கல்பனா அவர்கள் சொன்னார்கள்..."""" இறந்த பிறகும் இன்று வரை அழியாப்புகழ் பெற்ற கிளியோபாட்ரா, மர்லின் மன்றோ இவர்களெல்லாம் அழக்கான உள்ளத்தால் புகழ் பெற்றார்களா?"""" என்னு கேட்டாங்க.....

ஏங்க அப்படின்னா அழகுன்னு புகழ்பெற்றவங்க இவங்க 3 பேரும் தாங்களா ??? அழுகுன்னு புகழ் பெற்றவங்கள விரல் விட்டுத்தான் எண்ணிப்பாக்கனுங்க..... ஆனால் நல்ல உள்ளத்தால் உயர்ந்தவங்கன்னு பாத்தீங்கன்னா ஏகப்பட்ட‌ பேர சொல்லலாங்க.... உதாரணத்துக்கு அன்னை தெரேசாவ எடுத்துக்கோங்க...அவங்க பண்ணின சேவைகள் எத்தனை எத்தனை...சொல்லிட்டே போகலாம்....இவங்க அழகால உயர்ந்தவங்க இல்லை உள்ளத்தால உயர்ந்தவங்க....இப்படி எத்தனை எத்தனையோ பேர் நல்ல உள்ளத்தோடு எவ்வளவோ உதவிகளையும் செய்றாங்க....இங்கதாங்க இருக்கு அழகு...!

உடல் தோல்......... தொய்யாமல் இருக்கும் வரைக்கும் தான் உடல் அழுகு ஆனால் உள்ளம் அப்படி இல்லியே... நாங்க மண்ணுக்குள் போன பிறகும் அந்த உள்ளத்தை பற்றி பேசத்தானே செய்றாங்க.

அப்புறம் ஐஸ்வர்யா ராயைப் பற்றி ஒன்னு சொன்னாங்க நடுவர் அவர்களே.... அழகுன்னு சொன்னா பட்டி தொட்டியெல்லாம் ஐஸ்வர்யா ராயை சொல்லுவாங்களாம்.அவங்க உள்ளத்த பார்க்க மாட்டாங்களாம் எங்கிறாங்க சகோதிரி கல்பனா,.......

கல்பனா அவர்களே,
சரிங்க‌ ஐஸ்வர்யா ராய் அழகுன்னே வச்சுக்குவோம். நாளைக்கு ஒரு புத்தகத்தில் ஐஸ்வர்யாய் பற்றிய ஒரு நியூஸ் வருது....என்னான்னா ஐஸ்வர்யா .... ரொம்ப திமிரு பிடிச்சவ, ஏந்திரன் ல நடிக்கிறப்ப சென்னையில் தங்கனும்னா ரொம்ப விலை கூடின கொட்டல்ல தான் தங்குவேன்னு சொன்னாராம்,டைரக்டர மதிக்கிறது கிடையாது,ரஜினிய மரியாதயில்லாம பேசினா.... இப்படின்னு ஒரு நியூஸ் வருது..... உடனே நீங்க என்ன நினைப்பீங்க .... இவ அழகானவ என்னு நினைப்பீங்களா.....??? இல்லல்ல... ஹும் இப்படித்தாங்க யாரையும் பற்றி தெரியனும்ன்னா அவங்க கூட பழகனுன்னும் இல்ல ....

அன்னை திரேசாவ நாங்க பாத்தது கூட இல்ல ....ஆனா அவங்களப்பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கம்... படிச்சிருக்கம்.... இத வச்சு தானே நாங்க அவங்க புகழ்றோம்.ஆக உள்ள அழகு ரொம்ப முக்கியமுங்க...!

நடுவர் அவர்களே ,கல்பனா அவர்கள் சொன்னார்கள் அழகான பெண்களைப்பார்த்துதான் ஆண்கள் காதல்வயப்படுறாங்க என்று.... இது எவ்வளவு தூரம் உண்மையின்னு நினைக்கிறீங்க...?

இப்படி அழகான பொண்ணுங்களாப்பார்த்து காதல்வயப்பட்டு...ஒரு தலைக்காதலாக வருசக் கணக்காக காத்திருந்து அந்த பொண்ணு தனக்கு பிடிச்ச பையன கல்யாணம் பண்ணிட்டு போக இவங்க தாடி வளர்த்துட்டு திரிவாங்கக.இது தான் நடக்கும்.

மனசும் மனசும் சேர்ந்ததுதான் காதல்ன்னு சொல்றாங்களே அப்படின்னா அது பொய்யா ? அந்த அழகான பொண்ணுக்கும் நல்ல உள்ளம் இருந்தால் தானுங்களே இவங்க காதல் சக்ஸஸ் ஆகும்... இல்லண்ணா இதெல்லாம் கல்யாணத்தில முடியாதே....அப்படி கல்யாணத்தில முடிந்தாலும் இரு உள்ளங்களும் ஒன்று சேரனுமே....அப்படின்னாத்தானே வாழ்க்கை நிலைக்கும்.இங்க உடல் அழக வச்சுக்கிட்டு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம இருந்தால் டைவர்ஸ்ல தான் வந்து முடியும் நடுவர் அவர்களே...!

அடுத்ததாக நடுவர் அவர்களே...துணியப்பத்தி சொன்னாங்க...ஒகேங்க அழகான ஸாரிய பாத்து எடுக்குறீங்க அது உங்க பட்ஜெட் அ பொறுத்தது.10.000 ரூபாய்க்கு ஸாரி எடுக்கனும்ன்னா ரொம்ப நல்ல ஸாரி எடுக்கலாமுங்க ஆனா அந்த ஸாரி ய எடுக்கும் போது....... அது உங்களுக்கு அழுகுன்னும் தெரியுது...... ஆனால் நீங்க சுத்தி முத்தி பாப்பீங்க எங்கயும் டேமேஜ் இருக்கான்னு ... இதெல்லாம் பாத்து தானே எடுக்குறீங்க....டேமேஜ் ஆனா ஸாரின்னா திருப்பி குடுக்குறீங்கள்ள... ஆக நீங்க இங்க அழக மட்டும் நீங்க பாக்க முடியாது இல்லிங்களா...?

கடைசியாக நடுவர் அவர்களே .... சகோதரி கல்பனா அவர்கள் கேட்டிருந்தார்... "ஒரு பழக்கடைக்கு போய் பளபளன்னு இருக்க ஆப்பிளை எடுப்பீங்களா? அங்கங்கே சொறி வந்த மாதிரி இருக்க ஆப்பிளை எடுப்பீங்களா? பளபளப்புக்கு பின்னாடி இருக்க வில்லங்கம் இங்கே எத்தனை மக்களுக்கு தெரியும்? " என்று இப்படி கேட்டு எங்களுடைய அணிக்கே வலுசேர்த்திருக்கின்றார்.எப்படின்னா பளபளப்பில் ஒன்றுமே இல்லை உள்ள இருப்பதில் தான் இருக்கு என்று
தெளிவாக தெரிகிறது அவருக்கு... பளபளக்கும் உடல் அழகு முக்கியமில்லை உள்ளிருக்கும் உள்ளம் நன்றாக இருந்தால் அதுவே தனி அழுகு என்று சொல்லி எனக்கு இந்த பட்டி மன்றத்தில் எனது கருத்தையும் தெரிவிக்க வாய்பளித்த அறுவைக்கும் பட்டி மன்றத்தை வழி நடத்துபவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

சகோதரி கல்பனா நன்றாக எழுதியிருக்கின்றீங்கள்....பாராட்டுக்கள். ;-)

சர்மினி... பட்டிக்கு நீங்க புதுசுன்னு நினைக்கிறேன். எதிர் அணி என்று குறிப்பிட்டால் போதுமானது, பெயரிட்டு வாதாட கூடாது என்பது பட்டியின் விதிமுறை உங்களுடைய பதிவுக்கு கீழ் "மாற்று" என்பதை பயபடுத்தி மாற்றுங்க ப்ளீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தவமணி, நித்திலா, சுவர்ணா, பாத்திமா, யோகராணி.... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. சீக்கிரம் வாங்க வாதத்தோட... ;) எல்லாரும் ஒரே அணி பக்கம் வாதாடினா தீர்ப்பு சொல்ல சுலபமா இருக்கும் :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்