.ரேணுகாவை வாழ்த்தலாம் வாங்க.

அறுசுவை தோழிகள் எல்லோரும் நலமா?
வாங்கப்பா ஒரு முக்கியமான விஷியம்
என்னை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கா? உஙக்ள் ஜலீலாக்கா,.

இந்த பதிவு நம் சமைத்து அசத்தலாம் முதல் பகுதியை செம்மையாக நடத்திய அன்பான் தோழி அதிராவுடன் சேர்ந்து அனைவரும் செய்த குறிப்புக்களை ஒரு வருட காலமாக விரல் நோக எண்ணிய நம்ம் ரேணுகாவிற்காக போட்டது.

வெள்ளி கிழமை காலை 10.57 மணிக்கு அபுதாபியில் நம்ம ரேணுவுக்கு அழகிய, தங்கமான ஆண் குழந்தை பிறந்துள்ளது.( இரண்டாவது குழந்தை)

சிசேரியன் தான் தாயும் சேயும் நலம்.

வாழ்த்து தெரிவிப்பவர்கள் இங்கு தெரிவிக்கலாம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இரண்டு நாள் முன்பே மெசேஜ் வந்தது , பையன் ஊருக்கு போவதால் பிஸியாகிவிட்டேன்.
( ரேணு லேட்டா மெசேஜ் போட்டுட்டேன்னு என்னை பெஞ்சு மேல ஏற்ற கூடாது)

இப்படிக்கு
ஜலீலா

முத்தான ஒரு புத்தாண்டு பரிசை பெற்றேடுததர்க்காக வாழ்த்துக்கள் ரேணுகா. எங்களுடன் இந்த செய்தியை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஜலீலாக்கா.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு ரேணுகா,

மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்! உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்க.

அடிக்கடி நினைச்சுகிட்டேதான் இருந்தேன். மூச்சுத் திணறலாக இருக்குன்னு ஒரு தனி இழை ஓபன் செய்திருந்தீங்க. அதில் பதிவு போட முடியலை. மன்னிக்கவும்.

உடல் நலம் தேறியதும், அறுசுவைக்கு வாங்க. உங்க பதிவைப் பார்த்தால் சந்தோஷப்படுவோம் எல்லோரும்.

அன்பு ஜலீலா,

நல்ல செய்தியை சொன்னதற்கு நன்றி!

உங்க ப்ளாக்ல ஒரு பதிவு போட்டிருந்தேன், பாத்தீங்களா? ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வந்திருக்கும் பேட்டியும் புகைப்படமும் உங்களுடையதுதானா?

அன்புடன்

சீதாலஷ்மி

புத்தாண்டில் புத்தம் புதிதாய் ஒரு பொக்கிஷம் கடவுள் தந்து இருக்கிறார். தாயும் சேயும் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....
இந்த செய்தியை அறுசுவை தோழிகளுக்கு சொன்ன ஜலீலா அம்மாக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் ரேணுகா, நலம் பெற்று வந்ததும் பதில் அளிப்பாங்க,
யாரை மறந்ததாலும் ( என்னையும் மறந்துட்டீஙக்) யாரும் அதிராவையும், ரேணுகாவையும் மறக்க கூடாது.
அதான் ரேணுகாவிற்காக இந்த புது தலைப்பை போட்டேன்.
\
சீதாலக்‌ஷிமி அக்கா , (உங்கள் பதிலை பார்த்தேன்) உடன் கருத்து தெரிவிக்க முடியல. ஆமாம் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வந்தது தான்.
30 குறிப்புகள் போடும் படி கேட்டு இருந்தார்கள்,
கேட்ட நேரம் நோன்பு என்பதால் ரொம்ப பிஸி, ஆகையால் ஒன்றிரண்டு மட்டும் அனுப்பினேன்.
ஜலீலா

Jaleelakamal

ரேணுகா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், குட்டி இளவரசர் எப்படி இருக்கார்? உங்களை இந்த புதுவருடத்தில் சந்தோஷத்தில் மூழ்கடிச்சுட்டாரா? இந்த புதுவருடம் உங்களுக்கு பிள்ளை செல்வத்தை தந்திருக்கிறது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சகஜநிலைக்கு வந்ததும் எங்களுடன் வந்து பேசுங்க காத்திட்டு இருக்கோம்.

ஜலீலா மேடம் ரொம்ப நன்றி இந்த சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்துகிட்டதுக்கு.

ஹாய் ரேணுகா மேடம்
தாய்யும் சேய்யும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.;))

நன்றி ஜலீலா மேடம்.

உன்னை போல பிறரையும் நேசி.

ரேணு கண்ஸீவானதே எனக்கு தெரியாது ரொம்ப சந்தோசம் ரேணு வாழ்த்துகள் ஹை என்னோட கூட்டனி வாங்க கை கோர்த்துக்கலாம்....தெரிவிச்ச அக்காவிற்க்கு நன்றி

அன்புடன்,
மர்ழியா நூஹு

வாழ்த்துகள் ரேணுகா.

Expectation lead to Disappointment

வாழ்த்துக்கள்..

ரேணுகாவிற்கு எங்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்... ;) தாயும் சேயும் நலமென்பதில் மகிழ்ச்சி. ;)தகவலுக்கு நன்றி ஜஜீலா..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரேணு,
உங்களை அறுசுவையில் பார்த்து, பேசியே ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சிட்டு இருந்தேன். கோகுலுக்கு கூட விளையாட குட்டி தம்பி பாப்பா வந்தாச்சா?! ரொம்ப சந்தோஷம் ரேணு!.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் குட்டி செல்லம் எல்லா நலமும் பெற்று சிறந்து வாழ வாழ்த்துகிறேன். உட‌ம்பை பார்த்துக்கோங்க ரேணு. முடியும்போது வந்து குழந்தைக்கு என்ன‌ பெய‌ர் வைத்திருக்கிங்க‌ன்னு சொல்லுங்க‌.

சந்தோஷமான விஷயம் சொன்ன ஜலீலா அக்காக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்