.ரேணுகாவை வாழ்த்தலாம் வாங்க.

அறுசுவை தோழிகள் எல்லோரும் நலமா?
வாங்கப்பா ஒரு முக்கியமான விஷியம்
என்னை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கா? உஙக்ள் ஜலீலாக்கா,.

இந்த பதிவு நம் சமைத்து அசத்தலாம் முதல் பகுதியை செம்மையாக நடத்திய அன்பான் தோழி அதிராவுடன் சேர்ந்து அனைவரும் செய்த குறிப்புக்களை ஒரு வருட காலமாக விரல் நோக எண்ணிய நம்ம் ரேணுகாவிற்காக போட்டது.

வெள்ளி கிழமை காலை 10.57 மணிக்கு அபுதாபியில் நம்ம ரேணுவுக்கு அழகிய, தங்கமான ஆண் குழந்தை பிறந்துள்ளது.( இரண்டாவது குழந்தை)

சிசேரியன் தான் தாயும் சேயும் நலம்.

வாழ்த்து தெரிவிப்பவர்கள் இங்கு தெரிவிக்கலாம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இரண்டு நாள் முன்பே மெசேஜ் வந்தது , பையன் ஊருக்கு போவதால் பிஸியாகிவிட்டேன்.
( ரேணு லேட்டா மெசேஜ் போட்டுட்டேன்னு என்னை பெஞ்சு மேல ஏற்ற கூடாது)

இப்படிக்கு
ஜலீலா

ரேணுகா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாயும்,சேயும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

ஹாய் ரேணுகா நல்லாருக்கீங்களா? உங்களுக்கும் உங்க புதிய குட்டி இளவரசனுக்கும் வாழ்த்துக்கள். எப்படி இருக்காரு? குறும்பா? உடம்பை நல்லாப்பாத்துக்கங்க. ஓகே. அருமையான எதிர்காலம் அமைய என் பிரார்த்தனைகள் என்றும் உண்டு...

ஜலிலாக்கா உங்களை மறக்க முடியுமா? உங்ககிட்ட பேசினதில்லை இருந்தாலும் உங்களை நல்லாத்தெரியும்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ரேணு வாழ்த்துக்கள். குட்டி சார் எப்படி இருக்காங்க.?

வாழ்த்துக்கள் ரேணுகா.தாயும் சேயும் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
நன்றி ஜலீலாக்கா.

அறுசுவை தோழிகள் அனைவரும் நலமா?
எல்லோரிடமும் பேசி ரெம்ப நாளாகி விட்டது.3 மாதம் முன் வீடு மாறினேன்.
நெட் கனெக்ஷன் கட் ஆகிவிட்டது.20நாள் முன்பு தான் நெட் வந்தது.அதனால் என்னால் பதிவு போட முடியாமல் போய்விட்டது.

வாழ்த்து கூறிய ஜலிலா அக்கா, வனிதா, ருக்சனா, யோகராணி, கல்பனா, ரேகா,சுமதி,ரீம்,அப்சரா,கோமதி, லாவண்யா,சீதா அக்கா, சுகந்தி,யாகினி,தேவி,மர்ழியா,மீனல்,ரம்யா,ஸ்ரீ,கோமு அம்முலு,லதா வினி,பாத்திமா அனைத்து தோழிகளுக்கும் நன்றி.

ஒவ்வொருவருக்கும் பதிவு போட ஆசை தான் ஆனால் என்னால் முடியவில்லை.

குட்டி பையன் நலமாக இருக்கான்.பெயர் ராகுல்.சிசேரியன் தான்.3 ஆம் தேதி தான் டேட் கொடுத்தார்கள்.30 ஆம் தேதி அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது.ஸ்கேனில் தண்ணிரின் அளவு கூட இருப்பதாகவும் அதனால் குழந்தைக்கும் வெயிட் ஏறுவதாகவும் தாமதிக்காமல் சிசேரியன் செய்வது நல்லது என்றார்கள்.அதனால் 31 ஆம் தேதி குட்டி பையன் வந்துவிட்டான்.
இரண்டு வாரம் முன் எடுத்த ஸ்கேனில் கூட எல்லாம் நார்மலாக இருந்தது. இரண்டே முக்கால் கிலோ இருப்பதாக சொன்னார்கள்.
இரண்டு வாரத்தில் வெயிட் கூடி உள்ளது.பிறக்கும் போது மூன்றை கிலோ இருந்தார்.

குட்டி பையன் பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் விழித்து கொண்டு இருக்கான்.

கோகுல் ஜாலியாக இருக்கிறார்.தம்பி வந்த குஷியில் உள்ளான்.அவனுக்கு நன்றாக பொழுது போகிறது.முடியும் போது வருகிறேன்.நிச்சயம் வருவேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்