தேதி: January 4, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாஸ்மதி அரிசி - ஒரு டம்ளர்
உதிரி கார்ன் - கால் கப் (வெந்தது)
பீன்ஸ் - 4
கேரட் - இரண்டு இன்ச் அளவு
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 1
தேங்காய்பால் - 1/2 டம்ளர்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
தாளிக்க:
பட்டை - ஒரு இன்ச் அளவு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
பிரிஞ்சி இலை(பே லீஃப்) - பாதி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம், பீன்ஸ், கேரட், மல்லி தழை இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை லேசாக கீறி வைத்துக் கொள்ளவும். பின்பு அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.

பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஓரளவு வதங்கியதும் நறுக்கின பீன்ஸ், கேரட், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்பு கார்ன், மல்லி தழையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதன் பின் ஊற வைத்திருக்கும் அரிசியை நன்கு தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி அதில் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

பிறகு தேங்காய் பாலும், ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சுண்டும் நிலை அடையும் சமையத்தில் மூடியை போட்டு மூடி வெய்ட் போட்டு குறைந்த தீயில் ஏழு நிமிடம் வைத்து இறக்கவும்.

ஸ்டீம் போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடிவரை கிளறி விட்டு வைக்கவும். இதை லன்ச் பாக்ஸிற்கு கொடுக்க எளிதாக இருக்கும். வெறுமெனவே சாப்பிட நல்ல மனமாகவும், சுவையாகவும் இருக்கும்.

Comments
அப்சரா..
அஸ்ஸலாமுஅலைக்கும் அப்சரா..பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு கார்ன் புலாவ்.. படங்கள் அருமை.வாழ்த்துக்கள்....
வாழு, வாழவிடு..
அப்சரா
வாவ்,ரொம்ப கலர்புல்லா இருக்கு,டேஸ்டியா இருக்கும் என்று பார்க்கும் போதே தெரியுது.
நன்றி ருக்சானா,
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வ அலைக்கும் சலாம் ருக்சானா...நலமா?
முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்து வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி மா.....
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ரீம்
அஸ்ஸலாமு அலைக்கும் ரீம்.
தங்களுடைய கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
டேஸ்ட்டாகவும்,செய்வதற்க்கு சுலபமாகவும் இருக்கும்.
மிகவும் நன்றி ரீம்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
தங்கை அப்சரா
அஸ்ஸலாமுஅலைக்கும் அப்சரா பாக்கவே சூப்பரா இருக்கு டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி அக்கா..,
வ அலைக்கும் சலாம் அக்கா...,
உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
மிகவும் நன்றி ஃபாத்தி அக்கா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா மேடம், உங்க குறிப்பு
அப்சரா மேடம், உங்க குறிப்பு பார்க்க ரெம்ப அருமையா & easy இருக்கு, செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.
very very nice
very very nice
vazhga valamudan
சலாம் அப்சரா நலமா?கார்ன்
சலாம் அப்சரா நலமா?கார்ன் புலாவ் பார்க்கும் போது கலர் புல்லா இருக்கு நானும் செய்து பார்கிரேன் வாழ்த்துகள் அரிசி எவ்வளவு நேரம் ஊர வைக்கனும்?
அப்சரா
அப்சரா,கார்ன் புலாவ் பார்க்கும்போதே சாப்புடனும் போலே இருக்கு பா ரொம்ப நல்ல இருக்கு.
மிகவும் தெளிவான படங்கள்.
செய்முறை விளக்கமாக உள்ளது. செய்து பார்த்துவிட்டு சொல்லுகின்றேன் சகோதரி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அப்சரா
கார்ன் புலாவ் எளிமையாவும்,பார்க்கவே அருமையாவும் இருக்கு,வாழ்த்துக்கள் அப்சரா.கண்டிப்பா நான் செஞ்சு பாக்கிரேன்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி மனோ,சுதா,.
ஹாய் மனோ தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
செய்து பார்த்துட்டு அவசியம் சொல்லுங்க.
ஹாய் சுதா உங்கள் கருத்துக்கும் மிகவும் நன்றிங்க.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி shaikays ,
வ அலைக்கும் சலாம் shaikays . நான் நலம்.நீங்கள் நலமா?
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிங்க.
அரிசி ஊற வைத்து விட்டு காய்களை நறுக்கி வதக்குங்க.அவ்வளவுதான்.நான் செய்ததும் அப்படிதான்.
ரொம்ப நேரம் ஊறணும்னு அவசியம் இல்லை.செய்து பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா
சூப்பர் அப்சரா சூப்பர். நான் கார்ன் புலாவு செய்வேன் சற்று வித்தியாசமாக. இது நல்லா இருக்கு, கண்டிப்பா ஊருக்கு போனபின் செய்து பார்க்கிறேன். என் மகளுக்கு கார்ன் ரொம்ப விருப்பம். மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி யோகா மேடம்,
ஹாய் யோகராணி மேடம்,எப்படி இருக்கீங்க?
பேசி ரொம்ப நாளாச்சு.
தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
நிச்சயம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
அவசியம் உக்களுக்கு பிடிக்கும்.
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி யோகா மேடம்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி ஸ்வர்ணா,
ஹாய் ஸ்வர்ணா,உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றிங்க.
செய்வது மிகவும் சுலபம் தான்.என் கணவருக்கு கைய்யில் லன்ச் கொடுக்க மிகவும் எளிதாக இருக்கும்.இதன் டேஸ்ட்டும் நன்றாக இருக்கும்.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி வனி,
ஹாய் வனி,தாங்களும்,பிள்ளைகளும் நலமா?
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
என் கணவருக்கு மிகவும் பிடித்ததில் கார்ன்னும் ஒன்று.
எனவே அதை வைத்து வெவ்வேறு விதமாக சில சமையங்களில் செய்து கைய்யில் கொடுத்து அனுப்புகிறேன்.
இந்த முறைபடியும் உங்களுக்கு முடியும் போது செய்து பாருங்க.குழந்தையும் விரும்பி நிச்சயம் சாப்பிடுவாள்.
நன்றி வனி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா
அப்சரா சூப்பர்,கலக்குறீங்க அப்சரா.பார்க்கவே சூப்பரா இருக்கு.
வாழ்த்துகள்.
ஹசீன்
சலாம் அக்கா எப்படி
சலாம் அக்கா எப்படி இருகிக?உங்க கார்ன் புலாவ் நல்ல இருக்கு செய்து சொலுரென். id குடுடதனெ add பான்னவே இல்ல்யயே?
நன்றி ஹசீனா
அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா...நலமா?
தங்களின் கருத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி.
தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிங்க.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
ரினோஸ்
வ அலைக்கும் சலாம் ரினோஸ்.நான் நலமாக உள்ளேன்.
நீங்கள் நலமா?உங்கள் ஐடியை கண்டு அன்றைக்கே மெயில் அனுப்பினேனே...பார்க்கவில்லையா...?இருப்பினும் மீண்டும் அனுப்புகிறேன்.
வந்ததா என்று தெரிவியுங்கள்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மா ரினோஸ்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்ஸ்
அப்ஸ், கார்ன் புலாவ் - பார்க்கும் போதே கலர்புல்லா என்னை சாப்பிடு, என்னை சாப்பிடுன்னு சொல்லுதுப்பா. நல்ல சத்தான, ருசியான குறிப்பு. எங்க வீட்ல ரெண்டு கார்ன் பாட்டில் (வினிகரில் ஊறவைத்தது) வாங்கி வச்சு என்ன பண்றதுன்னு புரியாம காத்துட்டு இருக்கு. ஆத்துக்காருக்கு கார்ன் என்றால் ரொம்ப பிடிக்கும். வினிகரில் ஊறிய கார்ன் புளிப்பா இருக்குமே அந்த புளிப்பு சுவையை எடுக்க எதாவது வழியிருந்தா சொல்லுங்க அப்ஸ். சகலகலாவல்லியா ஆய்ட்டீங்க. ஒரு பக்கம் கதை எழுதறீங்க. ஒரு பக்கம் படு வேகமா சூப்பர் சமையல் குறிப்பா ஓடிட்டு இருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்திட்டே இருங்க :) தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் பா. உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்தை சொல்லிடுங்க.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அப்சரா
நேத்து உங்க receipe தான் செஞ்சு பாத்தேன், எங்க வீட்டு குட்டீஸ் போட்டி போட்டுட்டு சாப்பிட்டு முடுச்சுட்ட்டாங்க, எனக்கு கொஞ்சமாதான் கிடச்சுது, ரொம்ப சூப்பர் ஹ இருந்துச்சு. எங்க அக்கா உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்ல சொன்னங்க.....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நன்றி கல்ப்ஸ்
ஹாய் கல்பனா பத்தாண்டு வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.....
வழக்கம்போல் உங்கள் கருத்து எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
சகலகலாவல்லி எல்லாம் இல்ல கல்ப்ஸ்.
உங்களிடம் இல்லாத திறமையா...என்ன....? நானெல்லாம் சும்மா ஜுஜூபி.....
நான் வினிகரில் ஊறவைத்தவைகளை இதுவரை வாங்கியதே இல்லை பா...
வினிகரில் இருந்து கார்ன் யை எடுத்து ஒரு கழுவி விட்டு சுடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு விட்டு பிறகு சமைத்து பாருங்களேன்.(ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்...)
உங்களுடைய வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கல்ப்ஸ்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி சுகந்தி
ஹாய் சுகந்தி நலமா...?
அடடே...அதுக்குள்ள செய்து பார்த்தீர்களா?
குட்டீஸுக்கெல்லாம் பிடித்திருந்ததா...?அவர்களின் சர்டிஃபிகேட் கிடைத்ததே மிக்க மகிழ்ச்சி எனக்கு சுகந்தி.
அப்புறம் அக்காவிற்க்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.
செய்து பார்த்து விட்டு அதை என்னுடன் வந்து பகிர்ந்து கொண்டதற்க்கு நான் தான் உங்கள் இருவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும்.
மிகவும் நன்றி சுகந்தி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்ஸ்
பார்க்க ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்குப்பா. விருப்பப்பட்டியலில் சேர்த்திட்டேன். பொங்கலுக்கு வீட்டுக்கு போகும் போது ட்ரை பண்ணி பார்க்கிறேன். மிக்க நன்றி அப்ஸ். வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவித்ரா
அப்சரா
கார்ன் புலாவ் செய்தேன் அப்சரா
நன்றாக வந்தது.எல்லோரும் மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.
நன்றியும் வாழ்த்துக்களும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
பவி
ஸாரி பவி உங்க பதிவை இப்பதான் பார்க்கின்றேன்.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி பவி.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
நன்றி யோகா மேடம்,
யோகா மேடம் நலமா..?
செய்து பார்த்து விட்டீர்களா...?
அதை என்னோடு வந்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க...
வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்சரா
உங்க கார்ன் புலாவ் ரியலி சூப்பர்.ரொம்ப நாளா செய்யனும் என்று நினைத்து நேற்று தான் செய்தேன்.எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது.ரொம்ப தாங்க்ஸ்.
Expectation lead to Disappointment
உங்கள் கார்ன் புலாவ் இன்று
உங்கள் கார்ன் புலாவ் இன்று செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என் மகள் மிகவும் விரும்பி உண்டாள்.
நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
masha allah paarkavae omba
masha allah
paarkavae omba alaka irukku