தக்காளி ரசம்

தேதி: January 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

1. துவரம் பருப்பு வேக வைத்து வடித்த நீர் - 1 கப்
2. 2 தக்காளி அடித்து நீர் கலந்து - 2 கப்
3. ரசப்பொடி - 2 தேக்கரண்டி
4. உப்பு
5. நெய் - 1 மேஜைக்கரண்டி
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 2
9. கறிவேப்பிலை
10. கொத்தமல்லி
11. எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி


 

துவரம் பருப்பு வேக வைத்த நீருடன், தக்காளி மசித்த நீர், ரசப்பொடி, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து வைக்கவும்.
பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் கலந்த நீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் எடுத்து எலுமிச்சை சாறு மீதம் உள்ள நெய் சேர்த்தால் சுவையான ரசம் தயார்.


விரும்பினால் தாளிக்கும்போது பெருங்காயமும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எனக்கு ரசம் என்றால் ரொம்ப பிடிக்கும் .எபோழுதும் எண்ணெய் விட்டு செய்வதுதான் வழக்கம் ,இப்பொது நெய் விட்டு செய்ய சொல்றீங்க
இதை செய்து பார்த்துவிட்டு மறுபடியும் வருகிறேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. பொதுவாவே ரசம் தாளிக்க நெய் சேர்த்தா வாசம் நல்லா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா