முதல் குழந்தை சிசெரியன்

நான் தற்சமயம் 3 மாதம்.எனக்கு முதல் குழந்தை சிசெரியன்(அதாவது 7 1/2 மாதம்,பனிக்குடம் உடைந்து,வலி இல்லை அதனால்)மிகவும் சிரமப்பட்டுவிட்டேன்.
முதல் குழந்தை புழைத்ததே ரொம்ப வேதனை.எனக்கு இரண்டாவது குழ்ந்தை சுகப்பிரசமாக பிறக்க வாய்ப்பு உள்ளதா?(6 ஆண்டு இடைவேளி)
யாருக்காவது இந்த அனுபவம் இருக்கா? குழ்ப்பத்தில் இருக்கிறேன் உதவுங்கள்
தோழிகளே?

என் அக்காவிற்கு முதல் பிரசவம் சிசெரியன் தான், டாக்டர்கள் குடுத்த நேரத்திற்கு ஒரு மாதம் முன்பே முதல் பையன் பிறந்து விட்டான். அக்காவிற்கும் பனிக்குடம் உடைந்தது விட்டது. பனிக்குடம் உடைந்தாலும், maximum 3 மணிநேரம் வரைக்கும் வெயிட் பண்ணலாம் ன்னு டாக்டர் சொன்னங்க. இருந்தாலும் எங்க அக்காக்கு சிசெரியன் தான் பண்ணுனாங்க.

ரெண்டாவது பிரசவம் நார்மல் ஆக வாய்ப்பு இருக்குன்னு தான் டாக்டர் சொன்னங்க, அப்படி இருந்தும் ரெண்டாவது பையனுக்கும் பனிக்குடம் உடைந்தது விட்டது. இவனும் குடுத்த நேரத்திற்கு ஒரு மாதம் முன்பே பிறந்து விட்டான்.ரெண்டாவது டெலிவரி சிசெரியன் தான் பண்ணுனாங்க. அதனால் எதையும் சரியாக சொல்ல முடியாது, நிறையாபேருக்கு முதல் பிரசவம் சிசெரியன் இருந்து, ரெண்டாவது நார்மல் ஆகறதும் நிறையா இருக்கு. நீங்க மனச குழப்ப வேண்டாம். ரிலாக்ஸ் ஹ இருங்க, உங்களுக்கு நார்மல் டெலிவரி ஆக வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

6 வருட இடைவெளி இருக்குரதால, அதிக வாய்ப்புகள் இருக்கு. கவலை வேண்டாம். இருந்தாலும் உங்க உடல் சூழ்நிலை எப்டி இருக்கு என்பதை பொறுத்து வேறுபடலாம். எனக்கு தெரிந்து நிறைய பேர்க்கு சுக பிரசவம் ஆகி இருக்கு.
ஆரோக்யமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

இரண்டாவது நார்மல் டெலிவரியாக நிறைய சான்ஸ் இருக்கு,அதனால் பயப்படாதீங்க.சவுதியில் எங்க இருக்கீங்க?.இங்க நார்மலுக்கு தான் மேக்சிமம் ட்ரை பண்ணுவாங்க.மனசை போட்டு குழப்பிக்காதீங்க சந்தோஷமா இருங்க.

hi reem,suganthi,anitha உங்கள் அனைவரின் பதிலுக்கும் நன்றி.ரீம் நான் சவுதியில் ஹர்ஜில் உள்ளேன். நீங்கள் எங்கு உள்ளீர்கள் சவுதியில்,நான் டெலிவரிக்கு இந்தியா போய்விடுவேன்.

நாங்க ரியாத்தில் இருக்கிறோம்,நீங்க அல் கர்ஜ்,ரியாத் பக்கத்தில் இருக்கே அங்கேயா இருக்கீங்க??குளிர் அதிகமா இருக்கே,சளி பிடிக்காம பார்த்துக்கோங்க.

ஆமாம்,குளிர் சாஸ்திதான்.எப்படா இந்தியாவுக்கு போகலாம் எனறு இருக்கு.
உங்களுக்கு குழந்தை இருக்கா?விருப்பம் இருந்தால் சொல்லவும்

எனக்கு 2குழந்தைகள்,ஒரு பொண்ணு[4],ஒரு பையன்,[2]இரண்டுமே சவுதியில் டெலிவரி ஆச்சு,இரண்டுமே சிசேரியன்.

வணக்கம் தோழிகளே.
என் மனைவிக்கு முதல் பிரசவம் சிசேரியன். இறடாவது குழ்ந்தை பெற்று கொள்ள எவ்வளுவு இடைவெளி வேண்டும்? இரண்டவது பிரசவம் நார்மல் பிரசவமாகுமா?. அதற்க்கு என்ன வழி? முதல் குழந்தை சிசேரியன் ஆனால் அடுத்து எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ளலாம். தயவு செய்து பதில் கூறுங்கள்.

எந்தங்கைக்கு முதல் பிரசவம் சிசேரியன் அடுத்த பத்தாவது மாதத்தில் இரன்டாவது ததரித்து விட்டது ஆக அடுத்த பத்தவ்து மாத்தில் இரன்டாவது நார்மலாகவே பிறந்தது அடுத்தஒன்ன்1அரை வருடத்தில் மூன்றாவதும் நார்மல்தான் கவலை வேண்டாம் இறைவன் அனைவரையும் காப்பானாக

மேலும் சில பதிவுகள்