என் 2.8 வயது மகனுக்கு சளி,இருமல்

என் மகனுக்கு 2.8 வயது ஆகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நிறைய மருந்து சாப்பிட்டான். இப்போது கடந்த 1 மாதமாக தொடர்ந்து சளி, இருமல் இருக்குது. நிறைய மருந்து, antibiotic syrup எடுத்தாச்சு. ஆனால் வறட்டு இருமல்,குத்தி குத்தி இருமுவது மட்டும் குறைய வில்லை. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே.ரொம்ப பயமாக இருக்கிறது தோழிகளே. நானும் என் கணவரும் வெளிநாட்டில் எங்கள் குழந்தையுடன் வசிக்கிறோம். குத்தி குத்தி இருமுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இங்குள்ள எல்லா டாக்டரிடமும் காட்டியாச்சு. டாக்டர் பால்,முட்டை,சாக்லேட், milk products,cool drinks, some fruits எதுவும் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். help me friends very urgent.

ஹாய் தோழி மீனாள்...இப்ப பஹ்ரன்லையும் குளிராக இருக்கும்னு நினைக்கிறேன்.
இந்த குளிர் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த இருமல் ,சளியினால் பெரும்பாலும் பாடுபடுகிறார்கள்.அதிலும் வரட்டு இருமல் வந்தால் பெரியவர்களே அந்த கஷ்ட்டபடுவோம்.பாவம்....குழந்தைகள் படும்பாடை பார்த்தால் பாவமாக இருக்கும்.
நீங்கள் ஆண்ட்டிபயாட்டிக் ஏற்கனவே ஒரு டோஸ் எடுத்தாச்சுன்னு சொல்றீங்க இல்லையா...?அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடும்.இந்த குளிரில் இரவு நேரத்தில் வெளியே எங்கு அழைத்து செல்வதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.பழங்களில் திராட்சை,ஆரஞ்சு பழம்,வாழைப்பழம் இவைகளை குளிர் காலம் முடியும் வரை கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.
தேனை காலியிலும் இரவில் படுக்கும் முன்னும் வெறுமெனவோ...அல்லது பாலிலோ கலந்து கொடுத்து வாருங்கள்.அப்புறம் தேன் ஒரு ஸ்பூனுடன் பட்டைதூள் ஒரு பின்ச்சும்,மஞ்சள் தூள் ஒரு பின்ச்சும் நன்கு கலந்து விட்டு குழந்தை கொடுத்து பாருங்கள்.இந்த வரட்டு இருமலுக்கு நன்றாக கேட்க்கும்.என் மகளுக்கு அடிக்கடி சளியும் இருமலுமாக இருப்பாள்.அவளுக்கு உடனடி கை மருந்து இதுதான்.இதை இரவு கொடுத்த பத்து நிமிடத்திற்க்கு பின் இருமல் இல்லாமல் நன்கு தூங்குவாள்.
தண்ணீரை எப்போதும் கொஞ்சம் சூடாகவே (அதாவது குழந்தை பொறுக்குமளவு) குடிக்க கொடுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் தோழி
என் குழந்தைக்கும் 2.9 வயது தான். அவளுக்கும் இப்பொழுது சளி பிடித்திருந்தது. 4 நாட்களாக அவளுக்கு ஓமம் மற்றும் துளசி போட்டு தண்ணீர் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து கொடுத்தேன். சீக்கிரமே சரி ஆகிவிட்டது. நீங்களும் அதே போல் குளிர் காலம் முழுவதும் தண்ணீர் கொடுங்கள் சரி ஆகிவிடும். கவலை வேண்டாம்.

அப்சரா சொல்வதை போல் இரவில் வெளியே போகாதீங்க,என்னதான் ஸ்வெட்டர் ,கேப் எல்லாம் போட்டிருந்தாலும் சில குழந்தைகளுக்கு ஈசியா சளி பிடிக்கும்.நிறைய வெந்நீர் குடுங்க,சாப்பாட்டில் மிளகு சேர்த்துகோங்க,

ரொம்ப நன்றி.இங்கு குளிர் அதிகமாகவே இருக்கிறது.பட்டையை மிக்ஸியில் போட்டுத்தூள் செய்யலாமா.அதை இரவில் படுக்க போகும் போதுதான் கொடுக்கனுமா?இவனுக்கு மூக்கில் கூட ஒழுகுது.drops போட்டும் போகலை. என்ன செய்யலாம் தோழி.

Expectation lead to Disappointment

மிக்க நன்றி. முயற்சி செய்றேன் தோழி.

Expectation lead to Disappointment

மிக்க நன்றி தோழி. உங்களை எப்படி அழைக்கலாம். நீங்கள் சொல்வதை முயற்சி பண்றேன்.

Expectation lead to Disappointment

தோழி மீனாள்,நீங்க பட்டையை மிக்ஸியிலும் தூள் செய்து வைத்து கொள்ளலாம்.
அதில் இது போன்ற இருமல் அதிகம் இருக்கும் நேரங்களில் கொடுக்கலாம்.படுக்கும் முன் ஏன் சொல்கிறேன் என்றால் வறட்டு இருமல் தலையை சாய்த்தால் தானே ரொம்பவும் வருகின்றது.அதற்க்குதான் சொல்கிறேன்.காலையிலும் கொடுக்கலாம்.
மூக்கில் ஒழுகுவது கொஞ்சம் கொஞ்சமாகதான் கேட்க்கும்.மூக்கில் மூச்சு விட இடைஞ்சலாக இருந்தாதான் ட்ராப்ஸ் இட வேண்டும்.
இந்த தேன் மருந்தே கொடுங்கள்.மூக்கை நன்றாக சிந்த பழகி கொடுங்கள்.கொடுத்த மருந்து வேலை செய்வதால் தான் நன்றாக சளி வெளியாகின்றது.அதை நன்கு சிந்த சொல்லி வெளியாக்குங்கள்.
சளி வெளியாகுவது இது போன்று மூக்கின் வழியோ,மோஷன் வழியோ (லூஸ் மோஷன் போல் போகும்.)அல்லது வாந்தி வழியாகவோதான்.எனவே இவை மூன்றில் ஏதும் ஏற்பட்டாலே பயப்பட வேண்டாம்.
வேண்டுமென்றால் வேது பிடிப்பது போல் சுடுதண்ணீரை சிறிய பாத்திரத்தில் நன்கு தள தள வென்று கொதிக்க விட்டு குழந்தையின் முகத்தை அந்த புகைக்கின் நேராக காட்டி அப்படியே ஒத்துங்கள்.குழந்தையின் தலை பாரத்திற்க்கு இதமாக இருக்கும்.(போர்வை போட்டு மூட வேண்டாம் பயப்படுவார்கள் இல்லையா...) உங்கள் மடியில் உட்கார வைத்து இவ்வாறு செய்யுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குளிர் வந்தால் அபப்டி தான் சளியும் ஆரம்பித்துவிடும்.

தினம் சூப் செய்து அதில் மிளகு சேர்த்து கொடுங்கள்/

இஞ்சி சாறு தேன் கலந்து முன்று நாளைக்கு கொடுங்கள், சளிக்கு உடனே கேட்கும்

இரவில் பாலில் குங்குமப்பூ 4 இதழ் உரைத்து அதில் தேன் கலந்து கொடுஙக்ள்,
உஙக்ளிடம் அக்காரா இருந்தால் பொடித்துதேன் கலந்து கொடுங்கள்

ஜலீலா

Jaleelakamal

டாக்டர் சொல்லி இருப்பதுசரிதான், முட்டை, பால், சாக்லேட் எல்லாம் இருமல் சமயத்தில் சாப்பிட்டால் வாந்தி தான் வரும்.
அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு கொடுக்காதீஙக்,

குடிக்க வெது வெதுப்பான வெண்ணீர் கொடுஙக்ள்.
விக்ஸ், ஏதும் தைலம் இருந்தால் முதுகு தண்டு வடம், காது மடலில் இதமாக தடவி விடுங்கள்

ஜலீலா

Jaleelakamal

மிக்க நன்றி தோழி. இஞ்சி சாறு தேன் கலந்து ஒரு ஸ்பூன் கொடுத்தால் போதுமா. என் மகனுக்கு வறட்டு இருமல் , மூக்கு ஒழுகுதல் கூட இருக்கிறது.
தைலம், வீக்ஸ் தேய்த்தால் பயங்கிற அழுகை. என்ன செய்யலாம் தோழி. தூங்க மிகவும் கஷ்ட படுகிறான்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்