மசக்கை பாடு படுத்துகிறது.....

ஹாய் பிரண்ட்ஸ் எனக்கு இப்பொழுது 53 நாட்கள் ஆகிறது கருதரித்து,வாந்தியும் குமட்டலும் படுத்துகிறது,சாப்பாட்டை பார்த்தாலே வாந்தி வருகிறது,பழங்கள்,ஜூஸ் எதுவும் பிடிக்கவில்லை,சாப்பாட்டை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது,இது எனக்கு 2 வது குழந்தை,முதல் குழந்தை சிசேரியன்,முதல் குழந்தைக்கும் இப்படித்தான் 5 வது மாதம் வரை இருந்தது,இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா?முதல் குழந்தை போல் இதற்கும் 5 மாதம் வரை இருக்குமா? யாராவது பதில் கூறுங்கள் தோழிகளே.

மஞ்சு மசக்கைக்கு பயந்து சாப்பிடாம இருந்து உடம்பை கெடுத்துக்காதீங்கப்பா. எனக்கும் 2 குழந்தைகளுக்கும் இப்படி தான் இருந்தது. தண்ணீர் குடித்தாலும் வாமிட் பண்ணுவேன். அப்புறம் ஹெல்த் வீக் ஆகிடுச்சுனு ஹாஸ்பிடல் போய் ட்ரிப்ஸ் போட்டாங்க. எப்படியாவது சமாளித்து இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுங்கப்பா. உங்களுக்கு மனசுக்கு பிடித்தமான உணவுகளையெ சாப்பிடுங்க. அதிகம் மோர் சேர்த்து கொள்ளுங்கள். நான் பெரும்பாலும் சாதம் மோருடன் சேர்த்து நன்கு கடைந்து குடிப்பேன். கொஞ்சம் புளிப்பு சுவை இருந்தால் அதிகம் ஒமட்டல் தெரியாது. முடிந்த வரை தினமும் தலைக்கு குளித்து விடுங்கள். அது உடல் சோர்வை நீக்கும். இன்னும் எனக்கு தெரிந்ததை பிறகு சொல்கிறேன். அழகான குழந்தையை நீங்கள் நலமாக பெற்றெடுக்க எனது வாழ்த்துக்கள்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

நெல்லிக்காய் வாங்கி வைத்துக்கங்க
அதை வேகவைத்து தேன் சேர்த்து வைத்து கொண்டு , அப்பா வாயில் வைத்து கொள்ளுஙக்ள்.

ஆல் பகோடா என்று விற்கும் அதை வாங்கி வைத்து கொண்டு அப்ப அப்ப்ப சாப்பிடுங்கள்.
நெல்லிகாயில் உப்பு பச்சமிளகாய் போட்டு ஊறவைத்தும், சாப்பிடலாம்.
அறுசுவையில் நிறைய வலது புற லேபிலில் கர்பிணி பெண்கலுக்கு என்று இருக்கு பாருஙக்ல் அதை பார்த்து அதன் படி செய்து சாப்பிடுஙக்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் மஞ்சு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நிலை போன்று தான் எனது நெருங்கிய தோழி ஒருவரின் நிலைமையும் இருக்கும்.தண்ணீர் கூட குடிக்க முடியாது.எச்சிலை துப்பிக்கிட்டே இருப்பாங்க.மூன்று குழந்தைக்கும் இந்த பாடுதான்.மூன்றாவது குழந்தையின் போது காண்பித்த போது டாக்டர் சொன்ன டிப்ஸை சொல்கிறேன்.முயன்று பாருங்கள்.
சாப்பாடு சாப்பிட பிடிக்கவில்லை என்றால் வறுத்த முந்திரி,பாதாம்,வேர்க்கடலை இதெல்லாம் இருக்கு பாருங்க இதை வாங்கிவைத்துக்கொண்டு சும்மா ஒண்ணு ஒண்ணா போகும்போதும்,வரும்போதும்,வேலை பார்க்கும் போதும் ன்னு மெதுவா சாப்பிட்டுக்கிட்டே இருக்க சொன்னாங்க.இது நல்லா அவங்களுக்கு வொர்கவ்ட் ஆச்சு.நல்லா வாந்தி குமட்டல் குறைஞ்சது.என் தோழிக்கு சந்தோஷமாக தாங்கல.... கொஞ்சம் உடம்பு ஃப்ரஷ்ஷாகவும் இருப்பதாக சொல்வாங்க.இது போல் சாப்பிடுவது ஐந்து மாதங்கள் வரை தான்.அதன் பின் நிறுத்தி விடலாம்.உங்களுக்கே மாற்ரங்களும் தெரியும்.
இப்படி முடிந்தால் முயற்ச்சி செய்து பாருங்களேன்.உடம்பிற்க்கு தெம்பும் கிடைக்கும்.டாக்டர் சொன்ன அட்வைஸ் படிதான் என் தோழி முயன்றார்.எனவே பயப்படாமல் நீங்கள் ட்ரை பண்ணலாம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பதில் அளித்த மூவருக்கும் ரொம்ப நன்றி.எனக்கும் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை,எச்சிலை துப்பி கொண்டே இருக்கிறேன்.என்னுடைய பெரிய பிரச்சனை என்னவென்றால் நான் வெளி நாட்டில் இருக்கிறேன்,எனக்கு உதவிக்கு யாரும் இல்லை,3 நேரமும் என் கணவர் ஹோட்டலில் தான் வாங்கி தருகிறார்.அவருக்கும் நேரம் இல்லை,காலை 7 மணிக்கு சென்றால் மதியம் சாப்படு வாங்கி குடுத்து விட்டு,இரவு ஹோட்டலில் சாப்பாடு வாங்கி கொண்டு 8 மணிக்கு தான் வருவார்,மதியம் வீடு கூட்டி,பாத்திரம் கழுவி,இரவு அதே போல் எல்ல வேலையையும் செய்து,என் 3 1/2 வயது மகனை காலையில் குளிப்பட்டி,ஸ்கூலுக்கு அனுப்பு வது முதல் கொண்டு அவரே தான் எல்ல வேலைகளையும் செய்கிறார்,அவருக்கு சமைக்க நேரம் கிடையாது,எனக்கு கிச்சனுக்குள் போனாலே ஒரே குமட்டல் தான்,காலையில் தோசை அல்லது இட்லி
மதியம் சோறு,இரவு தோசை அல்லது இட்லி இப்படிய்யே தான் இங்கு கிடைக்கும்,எனக்கு அலுத்து விட்டது,எனக்கு சாப்பாடை பார்த்தால் அழுகையாக வருகிறது,இங்கு உதவிக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்,
அப்சரா நீங்க சொன்ன மாதிரி முந்திரி,வேர்கடலை சாப்பிட்டு பார்க்கிறேன்,ரொம்ப நன்றி,ஆனால் முந்திரி,வேர்கடலை எல்லாம்,வெறும் வாணலியில் வருத்தால் போதுமா இல்லை எண்ணெய் விட்டு வருக்க வேண்டுமா?தயவு செய்து வேறு குறிப்புகள் இருந்தாலும் கூறவும்,அன்புடன் மஞ்சு

ஹாய் பாத்திமா உங்க அன்புக்கு ரொம்ப நன்றி,ஆனால் நான் வெளி நாட்டில் இருக்கிரேன்,இங்கு மோர் கடையில் தான் வாங்க வேண்டும்,அது அவ்வளவாக நன்றாக இருக்காது,மேலும் எனக்கு புளிப்பை பார்த்தாலே பிடிக்க வில்லை குமட்டுகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை

ஹாய் மஞ்ச்,

எனக்கும் இது போல் இருந்தது.
நான் ஏலக்காயை தண்ணியில் அல்லது டீயில் போட்டு குடித்தேன்.
இஞ்சு சாறூ நல்லது.எச்சில் வந்தால் துப்ப கூடாது,இந்தசமயம் நிரயவரும் ஆனால் துப்பாதே.

மஞ்சு நீங்க வெளிநாட்டில் தானே இருக்கீங்க...?
அப்ப ரோஸ்ட்டட் நட்ஸ் கிடைக்குமே அதையே வாங்கி சாப்பிடுங்க.\
முக்கியமாக பாதாம் ரோஸ்ட்டட் சாப்பிடுங்க.சரியா....
நீங்க சொன்ன அத்தனையுமே என் தோழிக்கு இருந்ததுதான்....
அவரும் நான்கு மாதங்கள் வரை மூன்று வேளையும் வெளி சாப்பாடு தான்.
ஆனால் மூன்றாவது குழந்தைக்கு இந்த முறையில் சாப்பிட்டு வந்ததால் முடிந்தவரை வீட்டிலேயே சமைக்கும் அளவுக்கு தேறிவந்தார்.
அதனால் தான் உங்களிடம் உறுதியாக சொல்கிறேன்.
முயன்று பாருங்கள்.உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

டியர் அப்சரா எப்படி இருக்கிங்க?உங்க குறிப்புக்கு ரொம்ப நன்றி,நான் சாப்பிட்டு பார்க்கிறேன்,ஆனால் அப்சரா எனக்கு பாதாம் சுத்தமாக பிடிக்கது,பாதாமை பார்த்தாலே குமட்டும்,நான் பிஸ்தா,முந்திரி,கடலை பருப்பு நன்றாக சாப்பிடுவேன் அது மட்டும் எடுத்து கொண்டால் வாந்தி நிற்குமா?எனக்கு 2வது மாதம் முடியும் நிலையில் உள்ளது இன்னும் 2 மாதங்கள் எப்படி தள்ள போகிறேன் என்று நினைத்தால் ரொம்ப பயமாக உள்ளது அப்சரா.
ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டு இருக்கிறேன்,அப்சரா உங்களுக்கு தெரிந்து யாருக்காவது 2 வது குழந்தைக்கு மசக்கை 2 மாதங்களோடு சரியாயிருக்கிறதா?

hai friend unga pratchanaiku oru solution iruku try panni parunga pudina mixiela potu aratchi adhula lemon sugar potu kuditchi parunga vandhi kumatal yellam sari aidum

anbudan
kavi

Hi Nan ippo rendu masam conseive va irukken. Muthal kulandaikkum enakku romba vomit athigama irunthuchu. Ippavum appadi irukkuma. romba athigama passsikuthu. oru naalaiku ethanai thadavai than sapidrathu. romba tired aga irukku. Padukkanum polavay iruku. tired pgavum, vomit varamalirukkavum enna pandrathu sollungalen.

மேலும் சில பதிவுகள்