என்னுடைய கவலையை தீர்க்க வாருங்கள் தோழிகளே

தோழிகளே......

நான் ரொம்ப குடுத்து வைத்தவள் ...எனக்கு நல்ல அம்மா,அப்பா,சகோதரிகள் ,நல்லகணவர்,மாமியார் ,மாமனார் ,அண்ணி ...இப்படி எலோரும் என் மேல் ரொம்ப பாசமாக இருகிறார்கள் ....ஆனால் நான் என் கணவரிடம் அடிக்கடி சண்டை போட்டு அழுவேன் ..என்ன காரணம் என்று எனக்கும் தெரியாது ...என் கணவற்கும் தெரியாது ....எங்களுக்கு கல்யாணம் ஆகி 9 மாதம் ஆகின்றது ...அவர் என்னிடம் ரொம்ப பொறுமையாக நடந்து கொள்வார்..நிறைய அட்வைஸ் பண்ணுவார் ....என் மேல் ரொம்ப அன்பு வைத்து இருக்கிறார் ....ஆனாலும் சில நேரங்களில் இப்படி சண்டை போட்டு நான் அழுது என்னுடைய குடும்பத்தில் உள்ள எலோரையும் கஷ்ட படுத்துகிறேன்...என்னுடைய கவலை என்னவென்றல் நான் 7 மாத கர்பமாக உள்ளேன் ...நான் சண்டை போட்டு அழுவதால் எனுடைய குழந்தை க்கு ஏதும் பாதிப்பு வருமா ? நாம என்ன நினைகிரமோ அது தான் குழந்தையும் நினைக்கும்.. என்னால் என்னுடைய குழந்தைக்கு எந்த பாதிப்பும் வர கூடாது ....எனுடைய குழந்தை எபோவும் சண்டை போடாமல் ,எந்த விஷயதிரும் அழாமல் இருக்கனும் ...எனுடைய குழந்தை நல்லா இருக்கனும்.. தயவு செய்து சொல்லுங்கள் தோழிகளே ......நான் சண்டை போட்டு அழுததனால் என் குழந்தை க்கு ஒரு பாதிப்பு வராது ல ?plz help me frnz ....

தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.பயப்படாதீங்க குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது.ஆனாலும் குழந்தை உங்களை கவனிச்சுட்டே தான் இருக்கும் அதையும் மறந்துடாதீங்க.சிலருக்கு இந்த சமயங்களில் கணவரை பார்த்தாலே கோபம் வரும்,வயிற்றில் பாரம் அதிகமாகுது இல்லையா,அதனால் நமக்கு கஷ்டமா இருக்கும்,அந்த இயலாமை தான் கோபமாகி சண்டை போட வைக்குது.சின்ன சின்ன வேலைகள் செய்யுங்க,குழந்தையிடம் பேசுங்க.கடவுளை பிரார்திங்க.தலைபிரசவம்,சுகபிரசவமாக வாழ்த்துக்கள்.

உங்கள் மனதில் உள்ள பயம் தான் இப்படி உங்களை கணவரிடம் சண்டை போட செய்கிறது... கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்து
நம் தோற்றமே மாறி விடும்.. அழகு குறைவதால் நம் கணவருக்கு நம் மேல் ஈடுபாடு இல்லாமல் போய் விடுமோ என்று சில நேரம் தோன்றும், இவ்வாரான மனக்குழப்பங்கள் கணவரிடம் சண்டை போட தூண்டும்... கவலை வேண்டாம் தாய்மையில் உள்ள அழகே தனிதான், கணவர்களுக்கும் அது தெரியும்.. மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள், இறைவனிடம் ப்ராத்தனை செய்யுங்கள்.. கவலை வேண்டாம் உங்கள் குழந்தை எந்த பாதிப்பும் இன்றி நல்ல படியாக பிறக்கும்...

வாழ்த்துக்கள். நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன். முதல் குழந்தை எப்படி பெறப்போகின்ரேன் என்று. அடிக்கடி கோபம் வரும். சண்டை போடுவேன். அம்மாதிரியான நேரங்களில் கோபம் வரும் போது தண்ணீர் குடிங்க. கடவுலை பிரார்தியுங்கள். பிடித்த விஷயங்களை செய்யுங்கள். பாட்டு கெளுங்க. புக்ஸ்படிங்க. மனதை எப்போதும் ரிலாக்ஸாவும் சந்தொசமாவும் வெசிகோங்க. கணவருடன் ஜாலியாக வெளியிலா போய்ட்டு வாங்க.சுகப்பிரசவத்தில் குழந்தை பெற வாழ்துக்கள்.

தோழிகள் reem ,deepa .shabanu விற்கு மிக்க நன்றி...nan ini en baby kaga sandai poda maten...engaloda future e engaloda baby than...engaloda babykaga na ini sandai poda maten..alugavum maten....

Hope is necessary in every condition:)

தோழி , அடிகடி கணவருடன் வாக்கிங் செல்லுங்கள். மியூசிக் கேளுங்கள். கோவம் வரும்போது அழகான பேபி photos பாருங்கள். கோவம் பறந்துவிடும்.

god is great

தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்துக்கள். உங்களுக்கே எல்லாம் தெரிந்திருகிறது.....இருந்தாலும் எங்களிடம் கேட்டதனால் சொல்கிறேன். அன்பான கணவர் அருமையான குடும்பம் இன்னும் சில மாதங்களில் ஒரு அழகான குழந்தைக்கு தாய்.....எதற்கு மேல் என்ன வேண்டும் உங்களுக்கு??நீங்கள் இயல்பாகவே எதற்கும் அழும் குணமா இல்லை இப்போ தானா?? இப்போ தான் என்றால்..... சில நேரங்களில் கர்பமாக இருக்கும் போது சிலருக்கு இப்படி depression வரலாம். இது சகஜம். ஏனென்றால் உங்களின் உடலில் உள்ள மாறுதல்கள், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை உங்கள் மனம் ஏற்க மறுக்கிறது. இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு நீங்கள் உங்களை வேறு எதாவது பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தி கொள்வது தான். எப்பொழுதும் தனியாக இருக்காதீர்கள். முடிந்தால் கர்பிணி பெண்களுக்கென்று உள்ள யோகா கிளாசுக்கு சென்று வாருங்கள். அங்குள்ள பெண்களை பார்த்து பேசுவதால் உங்களுக்கு ஒரு தெளிவு ஏற்படலாம். கடவுள் நம்பிக்கை இருந்தால் தினம் கோவிலுக்கு சென்று வாருங்கள். உங்கள் மனதை ஒரு நிலை படுத்தி சம்மணம் போட்டு உட்கார்ந்து கட்டை விரலால் ஆள்காட்டி விரலை பிடித்து தொடைகளின் மேல் உங்கள் கைகளை வைத்துவிட்டு கண்ணை மூடி உங்களின் கவனத்தை உங்களின் குழந்தை மேல் திருப்பி உங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து கற்பனை செய்து பாருங்கள். இந்த எண்ண அலை உங்கள் குழந்தையை சென்றடையும்.

மீண்டும் சொல்கிறேன் இது எல்லாம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் தான் உங்களுக்கு ஏற்படும் எண்ணங்களை ஆள முடியும். உதவிக்கு யோகா செல்லலாம், தியானம் செய்யலாம். இல்லை என்றால் ஒரு சிட்டிங் கவுன்சிலிங் சென்று வாருங்கள்.

நன்றி

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்