which is the best

i am stay in dubai. my daughter 10th std this year complete. i think after study india is good .extra class and tutions. some body told uae study also good i am confusion which is the good. another question her cbse but tamil nadu kovai cbse school 1or 2 only. state board or matri school which is the best.help me friends .

எல்லாம் உங்க மகளை பொறுத்து..சூப்பரா படிக்கிற பிள்ளை என்றால் அல்லது ஒரு குறிக்கோளோடு இன்ன ஆளாக வரவேண்டும் என்ற எண்ணம் உள்ள குழந்தை என்றால் நம் ஊருக்கு திரும்புவதே சிறந்தது என்று சொல்வேன்.
நம் ஊரில் நல்ல நல்ல பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளது முக்கியமாக கோவையில்.
அல்லது சுமாராக படிக்கும் குழந்தை பெரிசா இன்னதாகனும்னு இல்லாம எதையாவது படிக்கலாம் என்றால் குடும்பம் ஒன்றாக இருக்கும் ஒரு விஷயத்தையும் கொண்டு பார்த்தால் துபாய் நாலேஜ் வில்லேஜில் படிக்க வைக்கலாம்...
என்ன இங்கு படிக்கும் பிள்ளைகளும் பொறுப்பும்,பக்குவமும் அவ்வளவா வருவதே இல்லை..நம் ஊர் பிள்ளைகள் உஷாராக இருக்கும்..
கலாச்சாரத்தையும் வைத்து பார்த்தால் இங்கு பிள்ளைகள் வெள்ளைகாரங்க கலாச்சாரத்தின் மேல் மோகம் கொண்டிருக்காங்க.இதையெல்லாம் யோசித்து தீர்மானிக்கலாம்

ஹாய் தோழி சுஜா...,உங்கள் குடும்ப சூழ்நிலைகளை கொண்டே முடிவை எடுக்கவும்.
ஊரில் படிப்பது நன்றுதான். இங்கே படித்தாலும் நன்றுதான்.என்னை பொருத்தவரை இந்த துபாயிலேயே நல்லபடியாக படித்து வேலைக்கு செல்லும் நபர்களை பார்க்கிறேன்.நீங்கள் யோசிக்க வேண்டியதெல்லாம் நாம் சேர்த்திருக்கும் ஸ்கூல் நமக்கு உகந்ததாக உள்ளதா...?நம்மால் மேல் படிப்புக்கு தொடர்ந்து இங்கே செலவழிக்க முடியுமா...?எனபது மட்டும்தான்.மற்றபடி உங்களுக்கே தெரிந்திருக்கும் உங்கள் குழந்தைகள் இங்கே இவ்வளவு வருடங்கள் படித்ததில் எவ்வளவு இம்ப்ரூவ்மெண்ட் உள்ளது...எந்த அளவிற்க்கு நாலேஜ் உள்ளது என்பதெல்லாம்.அதுவும் இல்லாமல் இதில் உங்கள் குழந்தையின் விருப்பம் என்பது மிக மிக முக்கியம்.அவளுக்கு எதில் விருப்பம் என்று விசாரியுங்கள்.உங்களை விட்டு தனியாக அங்கே ஹாஸ்டலில் தங்கி படிக்கும் படி இருந்தால் அதற்க்கு அவள் தயாராக இருக்கின்றாளா...?இங்கே இத்தனை வருடம் இருந்து விட்டு அங்கே எல்லாம் மாறுபடுவதில் அவளுக்கு எந்த அளவிற்க்கு விருப்பம் என்று பேசி தெரிந்து கொள்ளுங்கள்.எனவே இவை எல்லாவற்றையும் யோசித்து செயல் படுவது நல்லது.

தாளிக்கா.... உங்கள் கருத்து போல் எனக்கு இருந்து வந்தது உண்மையே...ஆனால் இங்கேயும் ஒழுக்கங்களோடும் நல்ல படிப்பையும் கொடுத்து வளர்க்க முடியும் என்பதை கண்கூடாக பார்த்தும் விட்டேன்.எனக்கு தெரிந்தவர்களிலேயெ...ஒருவர் அவரது இரண்டு பெண்களையும் இங்கேயேதான் படிக்க வைத்து கொண்டிருக்கின்றார்.மூத்த பெண் C.A முடித்து விட்டு ஏர்போர்ட்டில்(administrater officer) மிகவும் நல்ல பொருப்பில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள்.திருமணமும் ஆகி இரண்டு குழந்தையும் உள்ளது.கடந்த ஒரு வருடங்களாக தான் எனக்கு அவர்கள் பழக்கம்.அந்த பெண் கொஞ்சம் கூட அலட்டல்கள் இல்லாமல் மேக்கப் எதுவுமே இல்லாமல் புர்க்காவுடன் நல்லபடியாக சென்று கொண்டிருக்கின்றாள்.(இதற்க்கிடையில் அரபி பெண்களுக்கு மத்தியில் தான் வேலை செய்கிறாள்.)தன் சம்பாதியத்தில் தன் பிள்ளைகளுக்கும் நல்ல படிப்பை தந்து கொண்டிருக்கின்றாள்.அவளது தங்கையும் அதே போல் படித்து கொண்டிருக்கின்றாள்.நல்ல பெண்கள்.நான் மிகவும் வியப்புற்றேன்.அவரிடம் பேசி எப்படி இவர்களால் இங்கேயே படிக்க வைக்க முடிந்தது என்பதையும் தெரிந்தும் கொண்டேன்.அப்போதுதான் எனது தவறான எண்ணத்தை மாற்றி கொண்டேன்.
நாம் எங்கே இருப்பினும் நம்மால் முடிந்தால் நல்ல ஒழுக்கங்களுடன் வளர்த்து ஆளாக்க முடியும் என்று.
நம் ஊர்களில் மட்டும் தவறுகள் ஏதும் நடக்கவில்லையா என்ன?அவ்வளவு தவறுகள் நாளுக்கு நாள் அதிகமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றது.கலாச்சார சீரழிவு இங்கு இருந்தால் தான் என்பதில் இல்லை.நம் ஊர்களிலும் நிறையவே நடக்கின்றது.எனவே தான் தாளிக்கா நான் சொல்கிறேன்.தவறாக இருப்பின் என்னை மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்.
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

thank u friends.sorry for replay late. My daughter like in environment engineering . Which collage dubai or India .

helping to my friends

thank u my friends. how r u ? late for my replay sorry.......

helping to my friends

மேலும் சில பதிவுகள்