மிளகு சப்பாத்தி (குழந்தைகளுக்கு)

தேதி: January 8, 2011

பரிமாறும் அளவு: 1 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (8 votes)

 

கோதுமை மாவு - அரை டம்ளர்
வெண்ணீர் - கால் டம்ளர்
நெய் - சிறிது
பொடித்த மிளகு - கால் ஸ்பூன்
பொட்டுகடலை பொடி - ஒரு மேசை கரண்டி
உப்பு - கால் ஸ்பூன்


 

கோதுமை மாவில் உப்பு,நெய்,பொட்டுகடலை பொடி ,பொடித்த மிளகு சேர்த்து கலக்கி, வேண்ணீர் சேர்த்து நன்கு குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கும்.

ஊறியதும் சப்பாத்தியாகவோ அல்லது ரொட்டியாகவோ இட்டு கொடுக்கவும்.


மிளகு சேர்ப்பது குழந்தைகளுக்கு சளிபிடித்து இருந்தால் இபப்டி செய்து கொடுத்தால் நல்லது. பொட்டுகடலை சேர்ப்பதால் சப்பாத்தி நல்ல ஷாப்டாக பஞ்சி போல் வரும், குழ்ந்தைகளுக்கு பிச்சி சாப்பிட இலகுவாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

மிகவும் வித்தியாசமான டிஷ்.முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன்.இதுக்கு என்ன தொட்டு சாப்பிடலாம்.ஒரு சந்தேகம் தோழி மிளகு அதிகம் சாப்பிட்டால் சூடு என்று சொல்றாங்க அப்பிடியா தோழி. மாவு பிசைந்து 10 நிமிடத்திற்குள் போடணுமா அல்லது அரை மணி நேரம் வைக்காலாமா.

Expectation lead to Disappointment

அக்கா செம குறிப்பு

என் மகனுக்கு செய்து கொடுக்கனூம்

மிக்க நன்றிக்கா குறிப்புக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மீனால் சப்பாத்தி நாம் குழைக்கும் விதத்தில் இருக்கு, மைதா என்றால் தால் நல்ல ஊறவைக்கனும்.
அதுவும் இதில் பொட்டுகடலை, வெண்ணீர் நெய் சேருவதால் குழைக்கும் போதே நல்ல ஷாஃப்டாகிடும்.
காலை லஞ்ச் பாக்ஸென் பையனுக்கு செய்வேன், காலை ஊறவைக்க 10 நிமிடம் தான் நேரம் இருக்கும் அதான் 10 நிமிடம் என்று என் நேரத்தை குறிப்பிட்டு இருக்கேன். நீங்க 20 நிமிடம் ஊறவைப்பதா இருந்தால் ஊறவைத்துக்கொள்ளுஙக்ள்
இதே போல் இஞ்சி சப்பாத்தியும் கொடுத்து இருக்கேன் பாருஙக்ள் , .
ஜலீலா

Jaleelakamal

ஆமினா கண்டிப்பா செய்து கொடுங்கள் நல்ல ஷாஃப்டாக இருக்கும்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்கநன்றி.

ஜலீலா

Jaleelakamal

சலாம் ஜலீலா அக்கா,நலமா.
நல்ல குறிப்பு. நானும் என் மகளுக்கு செய்துக் கொடுக்கணும்.நன்றி ,
பஹம்(சுட்ட கோழி)செய்முறை தெரிந்தால் சொல்லுங்களேன்.
மற்றவர்களும் ப்ளீஸ் தெரிந்தால் சொல்லுங்களேன்.

ஹசீன்

salam சிக்கன் பார்பிகிவ் ஏற்கனவே யாரும் சமைக்கலாமில் படத்துடன் கொடுத்துள்ளென் பாருங்கள்,

ஜலீலா

Jaleelakamal