பாலை சுண்டக்காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா. இதன் செய்முறை மிகவும் எளிது. பிரபலமான <a href="http://www.arusuvai.com/tamil/node/98"> ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா செய்முறை</a>, விளக்கப்படங்களுடன் நமது தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அதில் சீனியை தவிர்த்து விடுங்கள்.
சீனி சேர்க்காமல் செய்யப்படும் கோவா ஒரு நாள்தான் தாங்கும். இவ்வாறு செய்யப்படும் கோவா இனிப்பகங்களுக்கு (Sweet stalls) பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றது. கிருஷ்ணகிரி அருகில் உள்ள காவேரிப்பட்டினத்தில்தான் இந்த வகை கோவா அதிகம் தயாரிக்கப்பட்டு, பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றது.
பால் - 2 லிட்டர்
வினிகர் - 40 மில்லி
சீனி - ஒரு கிலோ
மைதா - 4 மேசைக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
பச்சை ஏலக்காய் - 10
பிஸ்தா - 4 தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
பன்னீர் எசன்ஸ் - இரண்டு சொட்டு
நெய் அல்லது எண்ணெய் - பொரிப்பதற்கு
சீனிப்பாகு காய்ச்ச இரண்டரை கப் தண்ணீரில் ஒரு கிலோ சீனியைப் போட்டு கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும்.
பிறகு ஒன்றரை லிட்டர் பாலில் சீனி சேர்க்காமல் கோவா தயாரித்துக் கொள்ளவும்.
கோவா தயாரிக்கும் முறை:
ஒரு கடாயில் பாலை ஊற்றி, நல்ல தீயில் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயின் அளவை முழுவதும் குறைத்து, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை அவ்வபோது கிளறவும். பால் சுண்டி பாதியானவுடன், தொடர்ந்து சீராக விடாமல் கிளறவும். கடாயின் ஓரத்தில் படியும் பால் ஏட்டினை வழித்து விட்டு தொடர்ந்து கிளறவும். கோவா பதத்திற்கு வந்தவுடன் இறக்கி, நன்கு ஆறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள அரை லிட்டர் பாலை கொதிக்க வைக்கவும். கொதி வந்தவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். பிறகு அத்துடன் வினிகர் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பால் திரிந்து தயிராக வரும். பிறகு ஒரு மெல்லியத் துணியில் அதை ஊற்றி, நீரை முழுவதும் வடித்து விடவும். பிறகு அதனை ஒரு தட்டில் கொட்டி, கைகளால் அழுத்திப் பிசைந்து, கட்டியில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும்.
இத்துடன் மைதா, கோவா, ஒரு மேசைக்கரண்டி நீரில் கரைத்த சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மிக மென்மையாகக் கிளறவும். சப்பாத்தி மாவு போல் அழுத்திக் கிளறினால், அதில் உள்ள கொழுப்புச்சத்துக்கள் வெளியேறிவிடும். சுவையும் மாறிவிடும். இப்போது குலோப் ஜாமூன் மாவு தயார். அவற்றை சிறு சிறு உருண்டகளாக சுமார் 20-25 உருண்டைகள் வருமளவிற்கு உருட்டிக் கொள்ளவும்.
பச்சை ஏலக்காயின் மேல் தோல் நீக்கிவிடவும். பிஸ்தாவினை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து எடுத்து, நன்கு ஆறவிட்டு, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.குங்குமப்பூவினை நுணுக்கிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி மைதா மாவுடன் ஏலக்காய் விதைகள், சீவின பிஸ்தா, குங்குமப்பூ, பன்னீர் அனைத்தையும் சேர்த்து ஒன்றாய் கிளறிக்கொள்ளவும்.
உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாய் எடுத்து, வட்டமாய் தட்டி, அதனுள்ளே மைதா, ஏலக்காய், பிஸ்தா கலவை சிறிதினை வைத்து மூடி, உருட்டிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடேறியதும், தீயின் அளவைக் குறைத்து வைத்துவிட்டு, ஒவ்வொரு உருண்டைகளாகப் போட்டு பொரித்து எடுத்து, எண்ணெய்யை நன்கு வடியவிட்டு, காய்த்து வைத்துள்ள சீனிப்பாகில் போடவும். அரை நாள் ஊறிய பிறகு சாப்பிடலாம்.
சர்க்கரை இல்லாத கோவா

golbjamun
gova saimriki mega mega megoum nadri..govavel golbjamun chivathu aapadi
குலோப் ஜாமூன்
பெங்கால் முறை
தேவையானப் பொருட்கள்