ஏலம் போகும் விளையாட்டு விரர்களின் நிலை

கடந்த சில வாரங்களில் காய்களின் விலையேற்றம்,அதன் விலையேற்றம்,இதன் விலையேற்றம் என்று மீடியாக்களில் பரபரப்பான விஷயமாக ஓடிக்கொண்டிருந்தது.இந்த நிலையில் இப்போது இரண்டு நாட்களாக மீடியாக்களின் முக்கிய செய்தியாகவும்,முதன்மை செய்தியாகவும் இருப்பது என்ன தெரியுமா தோழிகளே.....? IPL கிரிக்கெட்க்காக டீம் பிரிக்கும் நிகழ்வு.....
அதில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா......? இருங்க.... இப்பதான் விஷயத்திற்க்கு வருகிறேன்...... அங்கே வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறை எப்படி தெரியுமா.....? சந்தையில் மாடை விலை பேசி விற்ப்பது போலாகும். ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு விலைக்கு போகின்றார்...?இதற்க்கு முன் அவரின் விலை என்னவாக இருந்தது..... இப்போது அவரின் விலை ஏறி இருக்கின்றதா.... குறைந்திருக்கின்றதா....?என்று நேரடி ஒளிப்பரப்பாக சீரியஸான டிஸ்கஸ் வேறு....
இது என்னை பொறுத்தவரை மிகவும் கேவலமான விஷயமாக இருந்தது.மனிதனின் நிலையை நினைத்தால் வேதனைபடாமல் இருக்கமுடியுமா....?
உலகில் பல்வேறு விளையாட்டு போட்டிகளிடையே ஏனோ இந்த கிரிக்கெட் விளையாட்டு மட்டும் வியாபார ரீதியில் முன்னிலையாக இருப்பதாக தெரிகின்றது.விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம்,இந்த விளையாட்டில் என்ன செய்தால் எந்த வியாபராத்தில் கைய்யாளலாம் என்று எண்ணும் கூட்டம் ஒரு பக்கம்.இது வருத்தத்திற்குரிய நிலையாக அல்லவா...உள்ளது.(முடியல... வலிக்குது...)
ஏலம் விட்டு விளையாட்டு வீரர்களை அவரவர் பணபலத்தை கொண்டு தேர்ந்தெடுப்பது,ஒரு சிலரை யாரும் தேர்ந்தெடுக்காமல் போவதை சந்தையில் விற்க்காமல் திரும்பி வந்ததை போல் விமர்சிப்பது எனபது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் என்னவோ சந்தையில் பொருட்களை விற்ப்பதும்,விற்க்காததை தூக்கி எரிவதும் போன்ற நிலையாக உள்ளது.
இந்த முறை 75 பேர்கள் விலையானதாகவும்,மீதி 16 பேர் விலை போகவில்லை என்பது ரிப்போர்ட்.இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்றால் கங்குலி,லாரா எல்லாம் இந்த 16 பேர் லிஸ்ட்டில் இருப்பதுதான்.இவர்கள் எல்லாம் இதற்க்கு முன் சாதித்தது இல்லையா....?இந்தியாவிற்க்கு பெருமை தந்தது இல்லையா...?இப்போது சரியாக விளையாடவில்லை என்று எடுத்து கொண்டாலும்,இந்த ஏலம் விடும் நிகழ்ச்சியால் அவர்களை படும் கேவலமாக அசிங்கபடுத்துவது போல் உள்ளது.
இவையெல்லாம் அந்த விளையாட்டு வீரர்களுக்கு வேண்டுமானால் அசிங்கமாக தெரியவில்லை என்றாலும் இந்த கூத்தையெல்லாம் பார்க்கும் நமக்கல்லவா அசிங்கமாக உள்ளது.இது எல்லாவற்றிற்க்கும் பணம் ரீதியான வியாபரம் தானே...?
இந்த எண்ணமும்,ஆதங்கமும் எனக்கு மட்டும்தான் தோன்றுகின்றதா...?இல்லை என்னை போல் பலருக்கு தோன்றுமா என்று தெரியவில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் தோழிகளே.......

என்றும் அன்புடன்,
அப்சரா.

|\\\\\\இவளுக்கு என்னமோ கிரிக்கெட் பைத்தியமோ....///// இல்லை
\\\\\இவளுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை///// என்றோ திட்டாதீர்கள் தோழிகளே.....
நான் ஒன்றும் தீவிர கிரிக்கெட் ரசிகை இல்லை.அதே சமையத்தில் இப்படி நடக்கும் கேவலமான விஷயங்கள் எனக்கு நீண்ட நாட்களாகவே எரிச்சலூட்டுகின்றன்.இதற்க்கு ஏன் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற ஆதங்கமும் உண்டு.அதை தான் இங்கு வந்து புலம்பியிருக்கின்றேன்.(ப்ரேம்ஜீ ஸ்டைல்ல சொல்லணும்னா...\\\ என்ன கொடுமை டா...//// )
இது தவறா...?சரியா..?எனவும் தெரியாது. ஏதோ என் அறிவுக்கு எட்டிய விஷயத்தை சொல்லியிருக்கேன்.அவ்வளவுதானுங்கோ......
இருப்பினும் தோழிகள் வந்து உங்க கருத்தை சொல்லிட்டு போங்க....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

nan enna ninaitheno atti appatiye solivitirkal

எனக்கும் இதேமாதிரி தான் தோணியது,என்னை கேட்டா ஐபிஎலை தடை செஞ்சா நல்லது.ஊழல் தான் அதிகமாகிறது.வீரர்களை இவ்வளவு விலை கொடுத்து வாங்குறாங்களே,இவ்வளவு பணம் எங்க இருந்து வருது??/அவங்க எல்லாரும் கரெக்டா டாக்ஸ் கட்றாங்களா?? இதெல்லாம் யார் பாக்கிறார்கள்.
நம்ம தேசிய விளையாட்டு ஹாக்கி அதை யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க.திரும்ப திரும்ப கிரிக்கெட்டுக்கே செலவழிக்கும் காசை மற்ற விளையாட்டுகளுக்கும் செலவளிக்கலாம்.
இத்தனைக்கும் காலேஜ்டேசில் நான் ரொம்ப கிரிக்கெட் பைத்தியம்.இப்போ இந்த ஊழல்களை &மேட்ச் பிக்சிங் எல்லாம் பார்க்கும் போது கிரிக்கெட்டே வெறுத்திடுச்சு.

அஸ்ஸலாமு அலைக்கும் ரீம்....,நலமா?
என்னடா கிரிக்கெட் பத்தி சொன்னதும் ஒருத்தரையும் காணுமே.... இங்கு நிறைய பேர் அதற்க்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்றே நினைத்தேன்.
பரவாயில்லை இருவர் வந்திருக்கின்றீர்கள்.
கிரிக்கெட் பைத்தியம்//// என்கிறீர்களே... அப்ப நான் சொன்னதற்க்கு கோபம் வரவில்லையே....வெரிகுட்.யாராக இருந்தாலும் இப்ப நடக்கும் கேவலத்திற்க்கு,ச்சீசீ.....என்று முகம் சுளிக்கதானே தோன்றும்.
என்னவரும் ரொம்ப கிரிக்கெட் பைத்தியம்.அதனால்தான் நானும் சில நேரங்களில் கிரிக்கெட்டை பார்ப்பேன்.T20 எனக்கு பிடித்தது.ஆனால் இது போன்ற விலை பேசும் வியாபாரம் பார்க்கும்போது நீங்கள் சொல்வது போல் முற்றிலும் தடை செய்ய யாரும் குரல் கொடுக்க மாட்டார்களா என்றுதான் தோன்றுகின்றது.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எத்தனை கோடிகள் அவர்களுக்கு... இந்தகிரிக்கெட்டில் நிறைய ஊழல்நடக்கிறது .ஆனாலும் யாரும் அதை பார்க்காமல் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.. எல்லாருக்கும் பிடித்த விளையாட்டாக இருக்கிறது கிரிக்கெட்..நாம் மூன்றுபேர் மட்டும் சொன்னால் கேட்கவா போகிறது இந்த உலகம் ..போகட்டும் விடுங்க ...
டோண்ட்வொர்ரி பி ஹேப்பி...

வாழு, வாழவிடு..

அந்த கேவலமான நிகழ்சியை காணும் போது கோபம் தான் வந்தது அப்சரா....

அவனவன் வெங்காய வெல 85 ரூபஔக்கு போச்சேன்னு கவலபட்டுட்டு இருக்காங்க. இவங்க என்னன்னா கோடி கணக்குல ஏகம் என்ற பெயரில் சூதாட்டம் நடத்துறாங்க.....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தங்களின் கருத்து உண்மைதான். அந்த காலத்தில் அடிமைகளையும், பெண்களையும் பொது இடங்களில் ஏலம் விடும் இழிநிலை தற்போது விளையாட்டு வீரர்கள் ஏலம் என்ற புதிய உருவத்தில் வந்துள்ளது. இந்த நிலை அடுத்ததாக பன்னாட்டு அழகிகள் ஏலம் என்று கூட வரலாம். நாம் மீண்டும் அந்த கால பாதிப்புகளில் இருந்து மீளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அன்புடன்
THAVAM

வாங்க ருக்சானா..., ஊழல் நடக்காத இடம்தான் எது?அதையும் தாண்டி ஒரு வித வியாபாரம் தான் இது.இது என்னவோ விளையாட்டு வீரர்களுக்கு பேரை வாங்கி கொடுப்பதாகவும்,பதிப்பு கூடும் நிலை இருப்பதாகவும் ஒரு எண்ணம் பலருக்கு இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு வித கேவலம்தான் ஏற்படுகின்றது.
ஹூம்.... நீங்கள் சொல்வதும் சரிதான் என்ன தான் தவறுன்னு தெரிஞ்சாலும் யாரும் பார்க்காமல் போய்டுவாங்களா என்ன...?(எங்க வீட்டிலேயே ரெண்டு கிரிக்கட் ரசிகர்கள் இருக்கின்றார்களே... கணவரையும்,மகனையும்தான் சொல்றேன்...)
நாம புலம்பி என்ன செய்ய...?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆமின..., அதை ஏன் கேக்குறீங்க....?
அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருளின் விலை நாளுக்கு நாள் ஏறி பயமுறுத்துகிறதே என்று மக்கள் ஒரு பக்கம் இருக்க.... டோனிக்கு போன முறை எந்த விலை இருந்தது...? இப்போது எவ்வளவு கோடி கூடியிருக்கு.....
கங்குலியும்,ஜெயசூர்யாவும் ஏன் விலைபோகவில்லைன்னு.....ஒரு க்ரூப் உட்கார்ந்து சீரியஸா டிஸ்கஸ் செய்வதை பார்க்கணுமே..... வாயில வண்ணம் வண்ணமா வந்துடும் போல இருக்கு..... ஆமினா..... (என்ன வாந்தியான்னு கேக்காதீங்க.... திட்டும் வார்த்தையை சொன்னேன்.)
இதெல்லாம் எங்கு போய் முடியுமோ தெரியல....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வாங்க தவமணி அண்ணா...,என் புலம்பலை கேட்டு இந்த பக்கம் வந்ததற்க்கு மிக்க நன்றி.....
\\\\\ ஏலம் விடும் இழிநிலை ///// சரியான ஒரு எடுத்துகாட்டு சொன்னீங்க.....
அடுத்ததா....சொன்னீங்க பாருங்க..... அதையும் நான் நினைத்து கோபபட்டதுண்டு....
கிரிக்கெட்க்கு அப்புறம் இந்த உலக அழகி,இந்திய அழகி,சென்னை அழகின்னு ஒரு கூட்டம் அலையுது பாருங்க.... அவங்களுக்கு நாளை இந்த நிலமை வருவதற்க்கு ஆச்ச்ர்யம் இல்லை என்பது உண்மைதான்.இந்த நிகழ்ச்சியையும் போராடி தூக்கமாட்டார்களா... என தோன்றுகின்றது.காலம் செல்லும் கோலத்தை வர வர பார்க்கும் போது நிஜமா சொல்றேன் அண்ணா..., பயமாக இருக்கு...... இதெல்லாம் எங்க போய் முடியுமோ.....?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்