தொண்டை புற்றுநோய் - தகவல் தேவை

என் தோழி ஒருத்தியின் தந்தைக்கு, "தொண்டையில் புற்றுநோய்" ன்னு டாக்டர் சொல்லி இருக்கிறார். அவரால் சரியாக பேச முடியாமல் தவித்தார், அதனால் டாக்டரிடம் காட்டியதற்கு சாதாரண கட்டி என்று நினைத்து remove செய்தனர். அந்த கட்டியை டெஸ்ட் க்கு அனுப்பி இருந்தனர். இன்று தான் ரிசல்ட் வந்தது. அந்த கட்டி "கேன்சர் கட்டி" என்று சொல்லி விட்டார். என் தோழி மனமுடைந்து விட்டாள். கரண்ட் வைப்பது ஒரு வழி ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க, அப்படி கரண்ட் வைக்க முடியலேன்னா ஆபரேஷன் பண்ணனும் ன்னு சொல்லி இருக்காங்க. அப்படி ஆபரேஷன் பண்ணுனா, பேச்சு வரதுன்னு சொல்லிட்டாங்க.

உங்களுக்கு "தொண்டை புற்றுநோய்" பற்றி தெரிந்து இருந்தா இங்க வந்து சொல்லுங்க. என் தோழி ரொம்ப பயப்படற, என்னால அவ அழுகறத பாக்கவே முடியல. இதற்கு, ஹீமோ தெரபி தரலாமா? தரமுடியாதா?? உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க. ப்ளீஸ்

//இதற்கு, ஹீமோ தெரபி தரலாமா? தரமுடியாதா??//

இந்த கேள்வியை இங்கே சாதாரண உறுப்பினர்களிடம் கேட்டு, அவர்கள் கொடுக்கும் பதிலை உங்கள் தோழிக்கு தெரிவிப்பது எந்த அளவிற்கு நல்லது என்பது எனக்குத் தெரியவில்லை. தர முடியுமா முடியாதா என்பதை மருத்துவர்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதனை பல மருத்துவர்கள் பார்வையிட்டாலும், நீங்கள் கொடுத்திருக்கும் தகவலை மட்டும் வைத்து, யாரும் ஆலோசனை கொடுப்பார்களா என்பது சந்தேகமே. பாதிக்கப்பட்டவரை நேரடியாக பார்த்து, பரிசோதிக்காமல் எந்த வகை நோய்க்கும் எதனையும் பரிந்துரைப்பது கடினம். அது ஆபத்தானதும்கூட..

நீங்கள் தோழி என்று குறிப்பிட்டு இருப்பதால், அவரும் கோவையில்தான் வசிக்கின்றார் என்று நம்புகின்றேன். எப்போது கேன்சர் என்பது உறுதியாகி விட்டதோ, அதன்பிறகு உள்ளூர் மருத்துவர் எவரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம். அவரை நேரடியாக அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே பரிசோதித்து, அங்குள்ள டாக்டர்ஸ் என்ன சொல்கின்றார்கள் என்பதை கேளுங்கள். ** வேறு எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம் ** என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து இதனை தெரிவிக்கின்றேன்.

//சாதாரண கட்டி என்று நினைத்து remove செய்தனர்//

பொதுவாக இது போன்ற கட்டிகளை ஆபரேசன் செய்வதற்கு முன்பு பயாப்ஸி எடுத்து, அது எந்த வகை கட்டி என்பதை முடிவு செய்த பின்னரே ஆபரேசன் செய்ய வேண்டும். பெரும்பாலான உள்ளூர் மருத்துவர்கள் இதனை செய்வதில்லை. கேன்சர் கட்டிகளை முதலில் நீக்கிவிட்டு பிறகு ட்ரீட்மெண்ட் க்கு செல்வதில் பிரச்சனைகள் இருக்கின்றன. கேன்சர் செல்கள் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

உடலில் எந்த பகுதியில் கட்டி இருந்தாலும், ஆபரேசன் செய்து நீக்குவதற்கு முன்னர் பயாப்ஸி செய்வது மிகவும் அவசியம். கட்டிகளுக்கும் கேன்சருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக அடையாறு மருத்துவமனைக்கு போகச் சொல்லுங்கள். நோயின் தீவிரம் எந்த ஸ்டேஜ் என்பதை கண்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல் ட்ரீட்மெண்ட் கொடுப்பார்கள். ஆரம்ப கட்டமாக இருப்பின் இது எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒன்றே.. குரல் பற்றி எல்லாம் இப்போது கவலைக் கொள்ளாமல், உடனடி சிகிச்சைக்கு அவரை அழைத்துச் செல்லச் சொல்லுங்கள். எல்லோரிடமும் ஆலோசனைக் கேட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

ரொம்ப நன்றி அண்ணா, ஆபரேஷன் பண்றக்கு முன்னாடியே "பயாப்ஸி" பண்ண முடியுமா?? இங்க இருக்கற ஹோச்பிட்டல்ல அப்படி பண்ணல அண்ணா, இப்ப அந்த கட்டிய remove பண்ணிட்டாங்க. நானும் அடையார் தான் போக சொன்னேன், எங்க அம்மாக்கு அங்க தான் போனோம். கட்டி "வோகல் கார்டு" அப்படின்னு சொல்ற இடத்துல வந்து இருக்கு, இந்த இடத்துல இருந்து தான் எல்லாருக்கும் பேச்சு வருமாம, அது மொத்தமே 1cm தான் இருக்குமாமா, அதுல ௦.7cm remove பண்ணிட்டாங்க, மீதி ௦.3cm தான் இருக்கு, கரண்ட் வைக்கறது பத்தி இன்னும் முடிவு பண்ணல, வேற எங்கயாவது பரவி இருக்கான்னு ஸ்கேன் பண்ணனும்ன்னு சொல்லி இருக்காங்க.

இங்க பதிவு போட்டதுக்கு காரணம், நம்ம தோழிகள் வீட்டில், தெரிந்தவர்களுக்கு வந்து சரி பண்ணி இருக்கலாம் இல்ல, அதான் கேட்டேன் அண்ணா. உங்கள் கருத்தை பகிர்ந்ததுக்கு நன்றி அண்ணா.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி, அட்மின் சொல்லுவது போல் புற்று நோய் க்கு மட்டும் எந்த ஆலோசனையும் யாரிடமும் கேட்க வேண்டாம்.

வெண்டுமானல் உணவு வகை கள் பற்றி வேண்டு மானால் கேட்கலாம்

எனக்கு தெரிந்து இந்த புற்றுநோய் , எங்க சொந்தஙக்ளில் தெரிந்த இடத்தில் ஆபிஸில் உள்ளவர்கள், குராசரி மேன், மற்றும் பலர் மூலமாக ஒரு 25 பேருக்கு இந்த கேன்சர் வந்து சிலருக்கு சரியானதும் சிலருக்கு ஒன்றூம் பண்ண முடியாத பட்சத்தில் காலமாகியும் இருக்கிறார்கள்.

அடையார் கேன்சர் இன்ஸ்டியுட் போனால் முழுவது அங்கேயே காண்பித்து கொள்ளுஙக்ள்.
இடையில் டாக்டர்களை மாற்றவேண்டாம். .அதுவும் தொண்டை என்றால் காலதாமதிக்காமல் உடனே காண்பிப்பது நல்லது.நானும் இதை நேரில் கண்டதால் சொல்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

நானும் என் தோழியிடம் இதை தான் சொன்னேன், ஆபரேஷன் செய்த டாக்டரிடம் செக் அப் க்கு செல்கிறார்கள். இன்று உடலில் வேறு எங்காவது பரவி இருக்கான்னு ஸ்கேன் பண்ணி பாக்க போறாங்க. பாத்துட்டு வேற ஹோச்பிடல், இல்லேன்னா அடையார் தான் போறாங்க. ட்ரீட்மென்ட் பண்ணி பேச்சு வந்தா போதும்ன்னு இருக்கு மா....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சகோதரியே, என் தந்தைக்கும் இதே போன்ற தொண்டை புற்று நோய் தான். அவருக்கு சாப்பாடு தொண்டையில் இறங்க கஷ்டமாக இருந்தபோது தான் தெரிந்தது அது புற்று நோய் என்று. திருச்சியில் உள்ள மருத்துவரிடம்(G.Viswanathan Cancer Hospital) கான்பித்தோம். அவர்கள் Radiation treatment, அதாவது லேசர் மூலமாக x rays கதிர்களை செலுத்தி புற்று நோய் செல்களை கொல்வது(அதாவது கரன்ட் வைப்பது என்பார்கள். இந்த சிகிச்சை தொடர்ச்சியாக 30 நாட்கள் பண்ணீனார்கள். பிறகு 2-3 மாதம் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. 3 மாதத்திற்கு பிறகு மீண்டும் சாப்பாடு இறங்குதில் சிக்கல் ஏற்ப்பட்டது. மீண்டும் மருத்துவரிடம் காண்பித்தோம். இந்த முறை கண்டிப்பாக operation பண்ணனும் என்று சொல்லி விட்டார்கள். அதனால் பேச்சு வராது என்று விட்டார்கள். என் அப்பாவுக்கும் voice box (vocal card) ல் தான் உள்ளது எங்கிறார்கள்.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எங்கள் அப்பாவுக்கு தைரியம் சொல்லி இருக்கிறோம். இந்த வாரன் அல்லது அடுத்த வாரம் operation இருக்கும். எனவே அடையாரில் கேட்க சொல்லுங்கள். அவர்கள் என சொல்கிறார்களோ அதன்படி அவர்களை பின்பற்ற சொல்லுங்கள். பேச்சு வராது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. வேறு வழியே இல்லாத போது தான் operation பண்ண சொல்கிரார்கள். எனவே மனதை தேற்றிக்கொண்டு தைரியமாக இருக்க சொல்லுங்கள்.

hi,

doctors will send for biopsy test.then they will do operation.

after the operation s over,they hav to take rest and after that,v hav to go

for chemotharapy. in trichy,its better to show in KMC hospital.

reg throat cancer ,i dont know.

reg,
priya.

hi

my mother also had the same (oesophagus cancer).she had her operation and went for chemotherapy treatment

ya, u r rite. The chemotherapy treatment depending upon the stages of cancer. If the first stage, they will give the medicine to control of growth. the 2nd stage is chemotherapy and the third stage is Operation. we had tried chemotherapy for my father also. but it couldn't recover. his throat cancer growth lenght is 8 mm. so next week going to operation in G.V.N at trichy. thats all.

Hi To all,
Yennoda Father-in-law last deepavali ku singapore vanthu erunthaanga.avaruku theedirnu valathupakka kaluthukum kaathukum naduvula(Thaavaangkattai-chin)oru katti onnu vanthathu.climate change aanathunaala avaruku katti vanthuruku nu nichom.but ooruku poi tablets yeduthum sari aagala.then antha katti eruntha idathula konjam sathaya vetti yeduthu test ku anupunom result cancer nu vanthuruku.yengaluku yennna pannane theriyala.becoz avaruku yentha vitha ketta palakamu ella pa.then body fullum two times scan pannom vera yethavathu idathula erukuthaa nu(becoz sometimes vera idathula erunthathuna reflect aagum cancer)but udambula vera yentha idathulayum ella cancer kaana adaiyaalam.pressure sugar yethuvume ella avaruku.yengaluku ore kulappama erukuthu.please ithai pattri details terinjavanga sollunga pa.please

Hi friend

Dont worry.Now cancer is growing like anything.So please dont afraid.
Current vaipathu enpathu radiation kodupathu.
Radiation kodutha andha cancer kattigal surungi vidum .adhan piragu operation thevaya illaya enbathai uruthi seivarghal.first you have to go to cancer centre where they have radi thrapy.Consult to oncologist.no need to afraid.So many advanced therapies came for cancer.he canbe cured or his life can be prolonged.so please dont worry.
we are treating so many patients daily
even small children

மேலும் சில பதிவுகள்