சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள்

வணக்கம் தோழிகளே,
என் சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள். எனக்கு கல்யாணமாகி 9 மாதங்கள் ஆகின்றன. குழந்தைக்காக ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கோம். டாக்டரிடம் சென்று problem என்ன என்பதை கேட்டோம். அவர் சில டெஸ்டுகளை எடுக்க சொன்னார். அவர் சொன்ன படியே எடுத்தேன். அவர் எனக்கு pelvis scan எடுத்தார்கள். அதில் எனக்கு BILATERAL CYSTIC OVARIES இருக்குன்னு சொன்னார்கள். மற்றபடி POD NORMAL, CERVIX NORMAL, MYOMETRIUM NORMAL, அதற்கு மாத்திரைகள் கொடுத்தார்கள். பின்னர் தைராய்டு டெஸ்ட் எடுக்க சொன்னார்கள். அதில் low தைராய்டு இருக்குனு சொன்னார்கள். அதற்கு இப்போது ட்ரீட்மென்ட் எடுக்கதேவை இல்லை என்று சொன்னார்கள். எனோட சந்தேகம் என்னவென்றால் இந்த problem இருக்கும்போது குழந்தை பிறப்பது தாமதம் ஆகுமா? இது மிகபெரிய ப்ரோப்லேம்ma? நான் டாக்டரிடம் கேட்டதற்கு ஒன்றும் problem இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உங்களில் யாருக்கேனும் இந்த problem இருந்து குழந்தை உண்டாகி இருக்கிறதா? எனக்கு ரொம்ப பயமாக உள்ளது. பதில் சொல்லுங்கள் தோழிகளே.

shan43 நீங்க முதலில் கவலையும்,பதட்டமும்,வீணான யோசனைகளையும் கைவிடுங்கள்.முதலில் BILATERAL CYSTIC OVARIES இதனை பற்றி விளக்கம் முதலில் எனக்கு தெரியவில்லை.மன்னிக்கவும்.
ஆனால் தைராய்டு பற்றி கேட்டீர்கள் என்றால் அதனை பற்றி முழு விபரமும் தெரியும்.தைராய்டு லோ என்றால் எனக்கு புரியவில்லை.ஆனாலும் டாக்டர் கவலை வேண்டாம் என்று சொல்லும்போது அது ஒன்றும் அவ்வளவாக பாதிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ளுவோம்.இருப்பினும் சில விளக்கங்களை தருகின்றேன்.
தைராய்டில் மூன்று வகை உள்ளது.அதில் இன்றைய கால கட்டத்தில் நம் பெண்களுக்கு பெரும்பாலும் வருவது இரண்டு விதம்தான்.ஒன்று ஹைப்பர் தைய்ராய்ட்,இன்னொன்று ஹைப்போ தைராய்ட்.ஹைப்பர் தைராய்டு என்றால் நம் தலையில் இருந்து சுரந்து கீழே இறங்கு தன்மை சரியாக வேலை செய்யாமல் குறைந்திருப்பது.(இது எனக்கு கடந்த 4 வருடமாக இருக்கின்றது) அடுத்தது அளவுக்கு அதிகமாக வேலை செய்வது.இந்த ரெண்டுமே இருந்தாலும் கூட குழந்தை உண்டாகி பெற்றுகொள்ள முடியும்.ஏன் என் குடும்பத்திலேயே(எனது அக்கா மகள் இரண்டாம் ரகம்)திருமணமாகி இரண்டு மாதத்திலேயே கருவுற்றுவிட்டாள்.இப்போது எட்டு மாதம்.
எனது கணவரின் நண்பரின் மனைவிக்கு முதல் ரகம்.அவர் இந்த பிராப்ளம் வந்தபின்னே மூன்று பிள்ளையை பெற்று விட்டார்.இதை விட உங்களுக்கு அதிகம் விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
குழந்தை உண்டாக எல்லாம் சரியாக இருந்தும் காலதாமதமாகுவது... நமது உடல் எந்த அளவிற்க்கு தயாராக இருக்கின்றது என்பதை பொறுத்துதான்.நிச்சயம் நாம் தயாராக இருக்கும் நேரம் தள்ளி போகின்றதே என்று பயம் ஏற்படுவதும்,கவலை உண்டாகுவதும் எல்லோருக்கும் உள்ளதுதான்.ஆனால் அதே நேரம் நம்பிக்கையுடன் இருப்பது மிக அவசியம்.
என்னை கேட்டால் இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு உடம்பில் சத்து மிகவும் குறைந்து விடுகின்றது.படிப்பதில் கவனம் செலுத்த போய் அதிகம் சத்துள்ளவற்றை சாப்பிடாமல் இருந்து விடுவதுதான் பிற்காலத்தில் பாதிக்கின்றது.
எனவே முதலில் உங்கள் உடல் நிலையை நன்கு கவனித்து சத்துள்ளவற்றை சாப்பிட்டு கொண்டு நம்பிக்கையுடன் இருங்கள்.நாம் குழந்தையை சுமக்கவும்,அதன் பின் பெற்றெடுக்க கூடிய வலிமையும்,அதை வளர்க்க கூடிய அளவிற்க்கும் நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள கடவுள் தந்த அவகாசமாக எடுத்து கொள்வோமே...கடவுள் நீங்கள் நினைத்து கூட பார்க்காத நேரத்தில் நற்செய்தியை பெறசெய்வார். சரியா...... மனதை சந்தோஷமாக வைத்து கொண்டு கணவரோடு நேரத்தை கழியுங்கள்.அதை விட ஒரு பெரிய சந்தோஷம் வேறுஇல்லை.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

i was having bilateral cystic ovaries .docter told me to reduce some weight for this.other than no problem.i got pregant after one year of marriage.dont worry you dont have any problem to get pregant.keep trying .you can try using ovulation kit .it helps to know your ovulation days.wish u to get pregant soon.take care.

HAVE A GOOD DAY

நன்றி அப்சரா, உங்கள் பதில் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. வீட்டில் அம்மா உடன் இருந்திருந்தாலும் இதை பற்றில்லாம் யோசிக்க கூட மாட்டேன். நான் என் கணவருடன் கத்தாரில் தனியாக வசிக்கிறேன். இங்கே எனக்கு நண்பர்களும் கிடையாது. தனியாக இருக்கும் போது மனம் தேவை இல்லாத பயத்தை உண்டாக்குகிறது. நீங்கள் சொன்ன தகவல் எனக்கு இருந்த பயத்தை குறைத்து உள்ளது. ரொம்ப ரொம்ப நன்றி அப்சரா. என்னையும் உங்கள் தோழிகளில் ஒருவராக ஏற்றுகொள்ளுங்கள்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

உங்கள் பதிலுக்கு நன்றி.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

ஹாய் தோழி shan43 எப்படி இருக்கீங்க?
நன்றி எல்லாம் எதுக்கு சொல்றீங்க?நான் சொன்னது உங்களை உண்மையிலேயே ஆறுதல் படுத்தி இருந்துச்சுன்னா அதுவே எனக்கு போதும்.
நம்மை போன்ற வெளிநாட்டில் வாழும் தோழிகளுக்கு இப்படி ஒருத்தருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி கொள்ள வேண்டியதுதான்.தனிமையை தவிர்த்து கொள்ள ஏதேனும் ஒன்றில் கவனத்தை செலுத்துங்கள்.நானும் ஆரம்ப காலங்களில் துபாய் வந்த புதிதில் அப்படிதான் இருந்தேன்.நான் இருக்கும் பிள்டிங்கில் தமிழ் சேனல் கூட இல்லை.அழுகையாக வரும்.ஆனால் என்னவர் பிரண்ட்ஸ் மனைவிகள் தான் எனக்கு கிடைத்த பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.... அவங்கள்ட்ட ஃபோனில் பேசி நேரத்தை கழிப்பேன்.அப்பல்லாம் இந்த மாதிரி நெட் விபரம் கூட தெரியாது.
இப்ப பத்து வருடங்கள் கடந்தாச்சு.... மூன்று பிள்ளையும் ஆச்சு.இப்ப கொஞ்சம் எக்ஸ்ட்ரா நேரம் கிடைச்சா நல்ல இருக்குமேன்னு தோணுதுன்னா பார்த்துக்கங்களேன்..... அப்ப இந்த மாதிரி அருசுவை இல்லாம போச்சேன்னு இப்ப நினைக்கிறேன்....
நீங்களும் எங்களை போன்று பழகிவிடுவீர்கள்.இங்கு இருக்கும் அனைவருமே உங்களுக்கு தோழி தான்.நான் உங்களை தோழியாக ஏற்றுகொண்டேன்.என் மெயில் ஐடி கூட எனது குறிப்பான பராசாப்பம் பகுதியில் உள்ளது.முடிந்தால் மெயில் செய்யுங்கள்.உங்கள் ஐடியை நான் சேர்த்து கொள்கிறேன்.இல்லை உங்கள் ஐடியை தாருங்கள்.நாம் அடிக்கடி பேசி கொள்ள ஏதுவாக இருக்கும்.(விருப்பமிருந்தால்....)சரியா..... மனசை சந்தோஷமாக வச்சிக்கங்க..... உங்கள் பொழுதுகளை நல்லவிதமாக செலவழிக்கலாம்....
மீண்டும் சந்திப்போம்...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்