இறால் கொழுக்கட்டை

தேதி: January 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

அரிசி மாவு - ஒரு கப்
வறுத்த இறால் - 1 /4 கிலோ
தேங்காய் பால் - 1 1 /2 கப்
முட்டை - 2
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று
எண்ணெய், நெய் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு


 

வெங்காயத்தை நீளவாக்கிலும் மிளகாயை பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், மிளகாய், இறால், உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இறக்கி வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, 2 முட்டை, வதக்கிய வெங்காய கலவை, தேங்காய் பால் சேர்த்து கலக்க வேண்டும்.(இட்லி மாவு பதத்தில், பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்)
ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் நெய்யை ஊற்றி சூடு வந்ததும் மாவு கலவையை அதில் ஊற்ற வேண்டும்.
பாத்திரத்தை மூடி தீயை மிதமாக வைத்து 20 நிமிடம் வேக விட வேண்டும்.
படத்தில் இருப்பது போல் அடி நன்றாக சிவந்து வரும். (வெந்து விட்டதா என்பதை, ஒரு கத்தியை வைத்து குத்திப்பார்த்தல் கத்தியில் மாவு ஒட்டாமல் வரும்)
வெந்தவுடன் தலைகீழாக கவிழ்த்து துண்டுகளாக போட்டு சாப்பிடவும். சுவையான இறால் கொழுக்கட்டை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

லிலு
அசதுரிங்க இம் வாழ்த்துக்கள் பார்கவ easya இருக்கு மேடம்

ஹசீனா... சுவையான குறிப்பு. புதுசா இருக்கு. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல குறிப்பு லுலு. இப்ப தான் இதை கேள்விபடுறேன் ;)

அடுப்பில் மாவை வைக்கும் போது சிறுதீயில் வைத்தாலுமே அடியில் அடிபிடிக்காமல் வருமா? ஒட்டாமல் வருமா? சந்தேகத்தைதெளிவுபடுத்தவும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என் தோழி ,பரங்கிபேட்டைகாரவங்க,இதே மாதிரி தான் செய்வாங்க,ஆனால் ஆவியில் வேக வைக்காமல்,தோசைகல்லில் அடை மாதிரி ஊற்றுவாங்க.நல்லாயிருக்கும்.வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா...,நலமா?
இறால் கொழுக்கட்டை பார்க்கும் போதே செம டேஸ்ட்டாக இருக்கும்னு தெரியுது.
செய்முறைகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கு.
ரீம் சொல்றாமாதிரி என் தோழியும் அடையாக செய்வதாகதான் சொல்லியிருக்காங்க.
இதுவும் செய்வதற்க்கு சுலபமாகவும்,கல்ர்ஃபுல்லாக இருக்கு பா....
இறால் இப்போதைக்கு வாங்கும் ஐடியா இல்லை.
வாங்கும்போது இதை நிச்சயம் செய்து பார்க்காமல் விடபோவதும் இல்லை.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ஹசீனா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும் குழுவினருக்கும் நன்றிகள்.

லதா
தேங்க்ஸ் லோகு லதா.

ஹசீன்

வனி அக்கா நலமா.வாழ்த்துக்கு நன்றி.

ஹசீன்

ஆமினா நெய் ஊற்றுகிறோம் அல்லவா.நெய் நன்கு காய்ந்ததும் மாவை ஊற்ற வேண்டும்.

கண்டிப்பாக அடிபிடிக்காது.செய்துப்பாருங்கள். நன்றி.

ஹசீன்

வித்தியாசமாக இருக்கு ஹசீனா இறால் கொழுக்கட்டை வாழ்த்துக்கள் ..

வாழு, வாழவிடு..

ரீம்,இதை அடைப்போல் தோசைக்கல்லிலும் ஊற்றலாம். வாழ்த்துக்கு நன்றி.

ஹசீன்

வலைக்கும் சலாம்,அப்சரா,நாங்கள் நலம்.நீங்களும் நலம் தானே...

இது செம்ம டேஸ்டா இருக்கும்.பீச் போனால் இதை செய்து எடுத்து போய் சாப்பிடுவோம்.

கண்டிப்பாக செய்துப்பாருங்கள்.வாழ்த்துக்கு நன்றிமா.

ஹசீன்

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ருக்ஸானா.

ஹசீன்

ஹசினா வித்தியாசமான குறிப்பா இருக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

ஹசீன்

சுலபமாக செய்யமுடியும் போல் இருக்கு....நன்றி lulu...
சாப்பிட்ட மாதிரியே இருக்கு....

அன்புடன்

றஹீமா பைஷால்

சலாம் ஹசினா நலமா?இறால் கொழுக்கட்டை சூப்பர் பார்ததும் உடனே சாப்பிடனும்னு தோனுது இது எங்க ஊர் ஸ்பெஷல்மா இது என் அம்மா தான் செய் வாங்க ஆனால் இது கூட பட்டை சோம்பு அரைத்து பொடு வாங்க நான் இதுவரை செய்தது இல்ல செய்து பார்கிரேன் வாழ்த்துக்கள்

ஹசீனா, எப்படியிருக்கீங்க பா? லுலு குட்டி எப்படியிருக்கா? நாம பேசியே நாளாச்சு பா. இறால் கொழுக்கட்டை வித்தியாசமான முறையில் செய்திருக்கீங்க அதே சமயம் செய்முறையும் எளிமையாக உள்ளது. நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சலாம் ரஹீமா,நலமா.

கருத்துக்கு நன்றிமா.

ஹசீன்

வலைக்கும் சலாம்,ஆயிஷா நீங்க நலமா,நாங்கள் நலம்.உடம்பு சரியாகிவிட்டதா?

எங்க ஊர் ஸ்பெஷல்லும் தான்.கண்டிப்பாக செய்துப்பாருங்க.நன்றிமா.

ஹசீன்

ஹாய் கல்ப்ஸ்,நாங்க நல்ல இருக்கிறோம்.நீங்க,குட்டீஸ் எப்படி இருக்கீங்க?எங்க உங்களை காணோம்.

செய்துப்பாருங்கள் கல்ப்ஸ்,குட்டீஸ்க்கும் கொடுங்கள்.நன்றி.

ஹசீன்

சலாம் ஹசினா நலமா இருக்கிங்ளா எனக்கு சரியாகி விட்டது உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றிபா கன்டிப்பாக செய்து பார்கிரேன் நிங்கள் எந்த ஊர்?உங்களுக்கு குழந்தை இருக்க?

வித்தியாசமாக இருக்கு,அருமையான பகிர்வு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.