பொங்கல் மினியேச்சர்

தேதி: January 12, 2011

5
Average: 4.9 (13 votes)

 

மண் பானை - சிறியது
தெர்மாக்கோல் ஷீட்
ஃபேப்பரிக் பெயிண்ட்
ப்ரஷ்
ஸ்டோன்
பையிண்டிங் அட்டை
கத்தரிக்கோல்
கத்தி
காட்டன்
நியூஸ் பேப்பர்
பென்சில்
உருளைவடிவ மெல்லிய குச்சிகள் - 5

 

மண்பானை முழுவதும் ப்ரெளன் நிற பெயிண்ட் அடித்து காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பெயிண்ட் செய்த பானையில் உங்களுக்கு பிடித்தமான டிசைனையோ அல்லது படத்தில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும். வெள்ளைநிற பெயிண்டிற்கு பதிலாக ஃபேர்ல் நிற பெயிண்டை பயன்படுத்தி வளைவுகள் வரையவும்.
பானையில் கழுத்துப்பகுதியில் வளைவு வளைவாக வரைந்தற்கு கீழ் ஸ்டோனை பெவிக்கால் வைத்து ஒட்டவும்.
பையிண்டிங் அட்டையில் கரும்பு போல் வரைந்து அதன் வடிவத்தை கத்தரிக்கோலால் நறுக்கி எடுக்கவும். ஒரு கரும்பை முதலில் வரைந்து வெட்டி எடுத்து விட்டு அதை அட்டையில் எதிர்ப்புறமாக இருப்பதுபோல் வைத்து வரையவும். பிறகு நறுக்கி எடுத்து இரண்டு கரும்பின் இலையிலும் டார்க் பச்சைநிற பெயிண்ட் செய்யவும். பேப்பரிக் பெயிண்டில் டார்க் நீலம், சிவப்பு நிறப்பெயிண்டை ஒன்றாக கலந்தால் கரும்பின் நிறம் கிடைக்கும்.
படத்தில் உள்ளது போல் பையிண்டிங் அட்டையில் இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து வரைந்து நறுக்கி எடுத்து பெயிண்ட் செய்யவும். மஞ்சள் கொத்துக்கு ஆரஞ்சுநிற பெயிண்டை அடிக்கவும். இஞ்சி கொத்துக்கு மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளைநிறம் பெயிண்டை சிறிதளவு எடுத்து ஒன்றாக கலந்து பெயிண்ட் செய்யவும். இலைகளுக்கு டார்க் பச்சைநிற பெயிண்ட் அடித்து இலையின் நடுவே லைட்நிற பச்சைநிற பெயிண்டால் மெல்லிய கோடுபோல் வரைந்து விடவும்.
24 செ.மீ நீளம் x 20 செ,மீ அகலத்தில் சிறிது தடிமனான தெர்மாக்கோல் ஷீட்டை கத்தியால் நறுக்கி எடுத்துக் கொண்டு அதன் மேல் பகுதியில் மட்டும் டார்க் நீலநிற பெயிண்டை அடிக்கவும். 5 செ.மீ அளவில் தெர்மாக்கோலை சதுரவடிவில் மூன்று துண்டுகள் வெட்டவும். அதில் ப்ரெளன் நிற பெயிண்டை சுற்றிலும் அடித்து வைக்கவும்.
பெயிண்ட் செய்த தெர்மாக்கோல் ஷீட்டில் கடைசியின் இரு முனைகளிலும் ஒரு செ.மீ இடைவெளிவிட்டு கரும்பு சொருகும் அளவிற்கு கத்தியால் கீறிவிட்டு அட்டையில் செய்து வைத்திருக்கும் கரும்பை சொருகி வைக்கவும். சொருகிய கரும்பிற்கும் சற்று தள்ளி நடுவே ப்ரெளன்நிற பெயிண்ட் அடித்து வைத்திருக்கும் தெர்மாக்கோல் துண்டுகளை அடுப்பு போல் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டி வைக்கவும். வெள்ளைநிற பெயிண்டால் கோலம் போல் போட்டுக் கொள்ளவும்.
பிறகு அடுப்பின் மேல் டிசைன் செய்து வைத்திருக்கும் பானையை பெவிக்கால் தடவி ஒட்டவும். முன்புறத்தின் இரு முனைகளிலும் இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து சொருகும் அளவிற்கு கத்தியால் கீறிட்டு அதனை சொருகி வைக்கவும். அடுப்பின் உள்ளே விறகு போல் வைப்பதற்கு மெல்லிய உருளைவடிவ குச்சியை வைக்கவும்.
இப்போது வேஸ்ட் நியூஸ் பேப்பரை கசக்கி பந்துப்போல் உருண்டையாகி பானையின் உள்ளே போட்டு விடவும். பானையின் வாய்பகுதி வரைக்கும் நியூஸ் பேப்பர் இருக்க வேண்டும். அதன் மேல் காட்டனை பரப்பி விடவும். சிறிதளவு காட்டனை மெல்லியதாக திரித்து பானையின் மேல் நுரை வழிந்தோடுவதுபோல் அமைக்கவும். அழகான பொங்கல் மினியேச்சர் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பாக்கவே அழகா இருக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

your pongal craft very nice. i wish u happy pongal. i think you are the first person to (cook)pongal in this year.just for a fun. keep it up.with regards .g.gomathi.

ஒரு சின்ன பானையை வைத்து வித்தியாசமான உபயோகம். அவ்வளவு அழகு & நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் அறுசுவை டீம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பிரமாதம், அருமையான வேலைபாடு... வாழ்த்துக்கள் அறுசுவை டீம்....உங்களது வேளையில் நிதானம், ரசனை தெரிகிறது....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கு.
குறிப்பாக பானை அத்தனை அழகு.
அருசுவை டீமுக்கு எனது பாராட்டுக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அறுசுவை டீம் பொங்கல் பானை சூப்பர்...

அறுசுவை டீம் கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

உன்னை போல பிறரையும் நேசி.

ரொம்ப நாள் கழிச்சு அறுசுவைக்கு வந்து பாத்தா கண்ணுக்கு பளிச்னு தெரிஞ்சது இந்த பொங்கல் பானை மினியேச்சர் தான். ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அறுசுவை டீம் சும்மா கலக்குறீங்க போங்க....

பாபுஅண்ணா, செண்பகா, நவினாக்குட்டி மற்றும் அறுசுவை டீம் மற்றும் அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அழகா இருக்கு, பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

நல்லா அழகா இருக்கு, வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

சூப்பர்.நல்ல ஈசியாக புரியும் படி விளக்கியது அருமை.அறுசுவை டீமிற்கு பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இது வரை வெளியான கைவினை பொருட்களில் இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,
அருமை அருமை மிக அருமை.

வாழ்த்துக்கள் ( பாப்பி, பத்மா, ரேவதி, பாபு) இது யார் ஐடியா?
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta