***புதிய பொங்கல் அரட்டை 5 ***

எனது நன்பீஸ் இங்கே வாங்கோ" பேசலாம் "

காலை வணக்கம். யாழி சூப்பர் கணக்குபிள்ளை நீங்க.
ஜெய் கலாட்டா கிச்சன் ராணி வாழ்த்துகள்
ஸ்ரீ என்னப்பா உங்கள பிடிக்கவே முடியல ரொம்ப பிசியோ

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரொம்ப ஜாலியா போச்சு ஸ்ரீ. நிறைய சர்க்கரை பொங்கல் சப்பிட்டேன். ஞாயிற்றுகிழமை தான் செம சாப்பாடு ஸ்ரீ மீன், இறால், சிக்கன், மட்டன், முட்டை, ஒரு பிடி பிடிச்சாச்சுபா. எங்கள் வீட்டில் செய்ய மாட்டோம் ப்ரண்ட் வீட்டிற்கு போனேனா அங்க தான் சாப்பிட்டேன்.

அச்சசோ மஞ்சு நான் கலாட்டா கிச்சன் ராணி இல்லை இளவரசி யங் கியூட் இளவரசி;-)

கோவை இப்ப எப்படிங்க இருக்கு. பொங்கல் அன்னிக்கு கலர் கோலம் போட்டு அசத்தினீங்களா?

Don't Worry Be Happy.

ஜெய் ஏன் எதுவும் சொதப்பிட்டீங்களா என்ன ஆச்சுபா. வீட்டில் எல்லாருக்கும் புது புது சாப்பாடு கிடைச்சிருக்கும்.

மஞ்சு வாங்க பேசி ரொம்ப நாள் ஆகுது. அம்மா எப்படி இருக்காங்க. பொங்கல் நல்ல முறையில் போச்சா? ப்ரேம் எப்படி இருக்காரு? ரொம்ப கம்மி நாட்கள் தான் இருக்கு. இனி முழு கவனத்தையும் அவன் மேலே வச்சிடுங்க மஞ்சு.

ஜெயா போட்டி வச்சாங்க பா ஆனா நான் கலந்துக்கல

மஞ்சு பிடிக்க முடியாம எல்லாம் இல்ல பா நான் வரும்போது நீங்க இல்ல நீங்க வரும் போது நான் இல்ல அதானே வழக்கம்

யாழி சம கட்டு தான் சேம் டிஷ் எங்க அத்த வீட்லயும் சண்டே ஸ்பெஷல் ஆச்சு பா சாப்ட்டு இன்னும் தூக்கம் வருது

அன்புடன்
ஸ்ரீ

ரொம்ப பாஸிட்டாவாதான் இருந்தது;-௦) எல்லா சமயலுமே அசத்தலா இருந்துச்சுபா. அதிலேயும் சாலட் எல்லாம் சான்சே இல்ல ரொம்ப அசத்தலா இருந்துச்சுபா. எல்லாருக்குமே கொண்டாட்டம்தான். நான் என்ன பண்னினாலும் டேஸ்ட் பாக்கும்போது சஹானாக்கும் ஒரு விரல்ல எடுத்து வைச்சுடுவேன் உடனே அவ நல்லாயிருக்கு அப்படிங்கற மாதிரி தலைய ஆட்டுவா;-) தினமும் என்ன பண்றது என்ன பண்றதுன்னு அவருக்கு ஃபோன் போட்டு தொல்லை கொடுப்பேன். இந்த தடவை அவருக்கு எல்லாமே சர்ப்ரைஸா இருந்தது;-) எல்லா டிஸ்ஸூம் ரொம்ப நல்லா இருந்ததா சொன்னாரு;-)

சொதப்பல் எல்லாம் ஒன்னுமே இல்லை. நீங்கதான் நான் கிச்சன் கலாட்டால எழுதினத சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். இன்னொரு தடவை படிச்சு பாருங்கபா;-) என்னோட சமையல் இல்லைங்கறதுனால கூடுதல் மகிழ்ச்சியோட காணப்பட்டாருன்னுதான் எழுதியிருக்கேன்;-))

Don't Worry Be Happy.

ஜெய்

என் அம்மா அழகா ரங்கோலி போடுவாங்க. பொங்கலுக்கு அம்மா தான் போட்டாங்க. நான் கலர் பண்ணினேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஆனா போட்டி எல்லாம் பாத்து ரசிச்சீங்களா.

எங்க ஊரு பக்கம் கோலப்போட்டி வைப்பாங்க. ஒவ்வொரு வீதிக்கும் ஒரு இளைஞர் மன்றம் இருக்கும் அவங்கதான் வைப்பாங்க. ஒரே கலாட்டாவா இருக்கும்;-)
நாங்க கலந்துகிட்டது இல்ல ஆனா நடு ஜாமத்தில கோலம் போடுவோம்;-)

அப்புறம் காலைல கோயிலுக்கு போயிட்டு வரும்போது எல்லார் கோலத்தையும் பாக்கறதுக்காக ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வருவோம்;-)

Don't Worry Be Happy.

hello sree i am a new member .. can u able to join me also.. in aratai

அன்பு கோழிகளுக்கு காலை வணக்கம். எல்லாரும் எப்படியிருக்கீங்க பா? ஜெய், ஒரு குட்டி பாப்பாகிட்ட உங்க சமையலை டேஸ்ட் பண்ண கொடுத்து இப்படியா பயமுறுத்துவீங்க? வளர்ற புள்ள, பாவம் விட்டுடுங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்