*******கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 5********

தோழிகளே
<!--break-->
////தோழிகளே உங்களின் புதிர்க் கேள்விகளை இனி இங்கிருந்து தொடரலாமே ...
வயிற்றுப் பசிக்கு அறுசுவை உணவு வேண்டும் .....
மூளைப் பசிக்கு இந்த அறுசுவை தளத்தின்
மூளையை கசக்குங்க பகுதி தான் வேண்டும் ,,
இனி கேள்விகளை இங்கிருந்து ஆரம்பிங்க தோழிகளே////************

புதிர்:

பாலு ஓர் இனிப்புக் கடைக்குச் சென்று ரூபாய் நூறு மதிப்பிலான மூன்று விதமான இனிப்புகள் வாங்கினான். அந்த இனிப்புகள் முறையே போளி,மைசூர்பாகு,ரசகுல்லா. ஒவ்வொரு இனிப்பு வகையிலும் குறைந்த பட்சம் ஒன்றாவது வாங்கினான்.ஒரு போளியின் விலை 50 பைசா. ஒரு மைசூர்பாகு ரூபாய் மூன்று.ஒரு ரசகுல்லா விலை ரூபாய் பத்து.மூன்று வகையான இனிப்புகளும் சேர்த்து நூறு இனிப்புகள் இருந்தன.

கேள்வி இதுதான்:

நூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு மற்றும் எத்தனை ரசகுல்லாக்கள் இருந்தன?

God bless us.

5 ரசகுல்லா(10 ரூபாய்) = 50

94 போளி(50 பைசா) = 47

1 மைசூர்பாகு(3 ரூபாய்) = 3
---- -----
100 100
--- ----

சரிதான் தோழி உங்கள் விடை வாழ்த்துக்கள்...

அடுத்த புதிர்....

தீப்பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உள்ளன.

சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன.

* 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.

* 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.

* பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின.

எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை என்ன?

God bless us.

1- 22
2- 14
3-12

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

yashkar
///if
123=40001005
234=90162011
345=70483005
456=71154014
then
564=???/////

////ரொம்ப டவுட் இருந்தாலும் try பண்றேன்..கரெக்ட்டா ??? 32045006...////
எவ்வளவு கஷ்டபட்டு விடை(?) கண்டுபிடிச்சேன்... நீங்க சரியா? தவறான்னு? கூட சொல்லல.... நீங்க விடை சொன்னா தான் நானும் சரியா தவறான்னு சொல்லுவேன்.....
///எவ்வளவு நாளு உங்கள தானெ தேடிட்டிருக்கேன்....??? இனிமே விட மாட்டேன்.... பதில் சொல்லுங்க..../////
நாங்கல்லாம் அவ்வளவு சீக்கிரமா மறக்கமாட்டோம்ல....எப்புடி....

God bless us.

Actually even i do not know the answer.. one of my friend asked me.. later one i jus forgot.. u jus say the way u found the answer.. so that i cn confirm with her...

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

மூளையை கசக்க வாங்க........

1. என்னிடம் இரண்டு ரூபாய் தாள்கள் உள்ளன... அவற்றின் கூடுதல் ரூ.150... ஆனால்.......அதில் ஒன்று ஐம்பது ரூபாய் தாள் அல்ல....
அப்படியென்றால் என்னிடம் இருப்பது என்னென்ன ரூபாய் தாள்கள்...

குறிப்பு: ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்...

2. 10989-ஐ 9ஆல் பெருக்கி வரும் எண்ணுக்கும், 21978-ஐ 4 ஆல் பெருக்கி
வரும் எண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

3. ஒரு பள்ளியில் சில குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள் மீதம் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள பற்றாக்குறையாக இருந்தன. அப்படியென்றால் சாக்லெட்டுகள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?

4.கொலைகாரன் ஒருவனுக்கு அரசனால் மரணதண்டணை கொடுக்கப்பட்டது. அவனிடம் வந்த காவலாளிகள் அவன் சாவதற்கு 3 விதமான அறைகளை தேர்வுசெய்யலாம் எனவும், அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடனிருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் எனவும் கூறி அவனை இந்த 3 அறைகளில் ஒன்றை தெரிவுசெய்யும் படி கூறினர்...

அ) ஆயிரக்கணக்கான கொடிய விஷப் பாம்புகளைக் கொண்ட அறை
ஆ) அறைக்குள் நுழைந்தவுடனேயே நுழைபவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிகளுடன் காவலாளிகள் காத்திருக்கும் அறை
இ) 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் நிறைந்த அறை

இந்த கணக்குகளை ஏற்கனவே கேள்விபட்டிருந்தால் விடையை சொல்லாமல் எனக்குத் தெரியும் என்று மட்டும் பதிவிடவும்... யாரும் பதில் சொல்லாத பட்சத்தில் நீங்கள் விடையை சொல்ல அழைக்கப்படுவீர்கள்....

God bless us.

எனக்கு 2, 3, 4 வினா க்கு விடை தெரியும் .. i dont know whether its correct or not.
can i tell the answer?

2) 10989 multiply with 9= 98901
21978 multiply with 4= 87912 subract these two .
ie 98901-87912= 10989 ..ie first number 10989

3) 10 குழந்தைகள் . 35 சாக்லெட்டுகள்

10 multiply with 3= 30 5 remaining.
10 multiply with 4=40 5 needed.

4) இ)5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் நிறைந்த அறை
.... 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் இறந்து விடும் .
அவன் மரணதண்டணை ய்ல் இருந்து தப்பி விடுவான்.
இந்த கணக்குகளை நான் இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்..
சரி யா என்று சொல்லுங்கள் (i m thinking about the first question )

முதல் கேள்விக்கு விடை: உங்களிடம் Rs.2/- ரூபாய் தாள்கள் மட்டுமே உள்ளன

அதாவது இரண்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கை
மொத்தம் 75. அவற்றின் கூடுதல் ரூ.150...

மேலும் சில பதிவுகள்