****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?

அன்புதோழிகளே - தோழர்களே, பொங்கல் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் கொண்டாடி கரும்பு கடிக்கிறேன் பேர்வழி பற்கள் உடைந்து, பல்செட் உடைந்து மனம் நொந்து போயிருக்கும் இந்த தருணத்திலே உங்கள் மனக்காயத்தை ஆற்றும் விதமாக இந்த பட்டியை தொடங்குகிறேன். இந்த தலைப்பு நம் அன்புத்தோழி பவித்ரா அவர்கள் தந்த தலைப்பு.அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

அதனால் தோழிகளே - தோழர்களே அனைவரும் வெட்கப்படாம, வேதனைப்படாம, துக்கப்படாம, துயரப்படாம, சங்கடப்படாம, சங்கோஜப்படாம, அச்சப்படாம, அவஸ்தைபடாம வந்து உங்க மனதில் இருக்கும் ஆதங்கங்களை இங்கே வந்து கொட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

..//இளவரசி, நான் நடுவரா வரேன்னு சொன்னவுடனே எடுத்த முடிவா இது? ;))//
அடடா,நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க..
.நீங்க நடுவருன்னா உங்க எதிர்தாக்குதல் இருக்காதுன்னு தைரியமா பேச வரலாம்...வரணும்....:-)
நல்லா வாதாடுற நம்ம தோழிகள் யார் வரும்போதும் அப்பா ,நம்மள தாக்குற லிஸ்ட்ல ஒருத்தர் குறைஞ்சுருச்சுன்னு ஹேப்பியா இருக்கும் :-)

இரண்டு குழந்தைகளுக்காக ஸ்கூல் முடிஞ்சு வந்தா ஹெவி ஹோம்வொர்க்,கிராப்ட்வொர்க்,கல்சுரல் ப்ராக்டிஸ்ன்னு எல்லாம் ஓண்ணு சேர்ந்து
டைம் கிடைக்கல..அதுதான் காரணம்..

உங்க தலைமையில் வாதாடுவது உண்மையில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம்..
அடுத்த பட்டியில நேரம் கிடைச்சா,அப்புறம் உங்க எதிரணி தாக்குதல் பலமா இருக்காதுன்னா பேசறேன் :-)

நித்தி உங்க அன்பான பாராட்டுக்கு எப்படி நன்றி சொல்ல ..இந்தாங்க ஐஸ்க்ரீம்
இனிமே பட்டியில சமத்தா என்னை ரொம்ப அடிக்காம இருக்கணும் அதுக்குத்தான் இந்த ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......க்ரீம்ம்....:)

நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//நன்கு அனுபவித்து,உணர்ந்து தீர்மானமாக பேசும் உங்கள் பேச்சு எனக்கு பிடிக்கும்.உங்கள் வாதங்களை நான் மிகவும் ஆழ்ந்து படிப்பேன். ரசிப்பேன். உங்களை போன்று திறமையாக பேச எனக்கெல்லாம் சத்தியமாக வராது பா :)//

ஹையா எனக்கும் கூட ரசிகை கிடைச்சிடாங்க, ஜாலி ஜாலி. உங்களின் இந்த வரிகளால் நான் ரொம்ப குஷியாயிட்டேன் கல்ப்ஸ். ஆனால், உங்களை போல வார்த்தைகளை எங்க எப்படி உபயோகிக்கனும், எப்படி நகைச்சுவையை பேச்சுல சேர்க்கணும் போன்ற திறமை சுட்டு போட்டாலும் எனக்கு வராது பா.

நித்தி, உடம்பு சரியாயிடுச்சி பா. நீங்க கவலையை விடுங்க, அடுத்த பட்டியில், நீங்களும் நானும் எதிர் எதிரணியில் இருந்துகிட்டு புழுதி பறக்குற அளவுக்கு உருண்டு பிரண்டு சண்டை போட்டுடுவோம் ஓகேவா ஹஹஹ ஹஹ ஹ :) (இது மாயா பஜார் ரங்காராவ் சிரிப்பு)

இதுவும் கடந்து போகும்.

//நீங்க நடுவருன்னா உங்க எதிர்தாக்குதல் இருக்காதுன்னு தைரியமா பேச வரலாம்...வரணும்....:-)//இதுல இவ்ளோ விஷயம் அடங்கியிருக்கா ? தெரியாம போச்சே... ஆனா பட்டியில் நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதே.. அப்படியொரு கேள்விகளா தானே நீங்க கேப்பீங்க :)நடுவர் சீட்ல உக்கார்ந்தாலாவது உங்ககிட்ட இருந்து தப்பிக்கலாம்னு தான் அங்கே ஒளிஞ்சிக்கறது ;) நீங்க என்னடானா இப்படி சொல்றீங்க :)

இளவரசி, உங்கள் அழகான வாதங்களை இந்த பட்டி இழந்தது உண்மைதான். நான் உங்களையெல்லாம் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.

அடுத்தபட்டியிலாவது பங்கேற்க முயற்சி செய்யுங்கள். இது அன்பான வேண்டுகோள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நாட்டாமை இப்படி கவுத்துப்புட்டீங்களே. சரி என்ன தான் இருந்தாலும் பெண்கள் நம்ம கட்சியாச்சேனு உங்களை சும்மா விடறேன். கடைசி கட்ட வாதம் பதிவு பண்ணனும் தான் நினைச்சேன் கல்ப்ஸ், முடியலை. எப்பவும் போல இந்த பட்டியிலும் கலக்கிட்டீங்க கல்ப்ஸ். வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்