****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?

அன்புதோழிகளே - தோழர்களே, பொங்கல் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் கொண்டாடி கரும்பு கடிக்கிறேன் பேர்வழி பற்கள் உடைந்து, பல்செட் உடைந்து மனம் நொந்து போயிருக்கும் இந்த தருணத்திலே உங்கள் மனக்காயத்தை ஆற்றும் விதமாக இந்த பட்டியை தொடங்குகிறேன். இந்த தலைப்பு நம் அன்புத்தோழி பவித்ரா அவர்கள் தந்த தலைப்பு.அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

அதனால் தோழிகளே - தோழர்களே அனைவரும் வெட்கப்படாம, வேதனைப்படாம, துக்கப்படாம, துயரப்படாம, சங்கடப்படாம, சங்கோஜப்படாம, அச்சப்படாம, அவஸ்தைபடாம வந்து உங்க மனதில் இருக்கும் ஆதங்கங்களை இங்கே வந்து கொட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் நடுவர் அவர்களுக்கு வணக்கம்.
நடுவர் அவர்களே இந்த தலைபை பார்த்தயுடன் நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் நினைத்தேன். பெண்களே " சிக்கனத்தின் சிகரம்" என்று.

நடுவரே! நம்மிடம் ஒரு 100 ரூபாய் இருந்தால் அதைவைத்து நாம் என்ன யோசிப்போம். அதில் என்னா பொருள் வாங்குவது,குறைந்த செலவில் குழம்புக்கு தேவையான என்னா காய்கறி வாங்குவது அதில் எவ்வளவு மிச்ச படுத்துவது என்னு யோசிப்போம்.

ஆனால் ஆண்கள் அந்த நூறு ரூபாய் யை எப்படி செலவு செய்வது னு தான் யோசிப்பாங்க.
உதாரணத்துக்கு
நாம் ஒரு பொருள் வாங்கினால் அவர்கள் சொல்லும் விலையில் 10,20 ரூபாய்யோ குறைத்து கேட்போம்.ஆனால் ஆண்கள் கேட்டும் பணத்தைஅப்படியே கொடுத்துவிடுவார்கள். இதில் ஆண்களுக்கு எங்கு இருக்கு சிக்கனம்.

(இப்போது இருக்கும் விலைவாசியில் 100 ரூபாய் க்கு என்ன காய் வாங்குவது னு தானே நினைக்கிரிங்க ஹிஹி)

உன்னை போல பிறரையும் நேசி.

//நாமும் எல்லோரையும் போல நல்ல நிலைமைக்கு வர வேண்டும் ,என்ற எல்லா பெண்ணும் நினைக்கும் ஆசை தான் ..வேறொன்றுமில்லை //மத்தவங்கள மாதிரி முன்னேறனும்னு தான் அடிக்கடி எதிர்வீட்டையும், பக்கத்து வீட்டையும் பார்த்துட்டு இருப்பாங்க. இதை போய் தப்பா நினைச்சுட்டா எப்படிங்க எதிரணியினரே.

//தனது வீட்டில் இல்லாத பொருள் ஒன்று ,அது அனைவருக்கும் பயன்படக்கூடிய விதம் வாங்கி சேர்ப்பது நலமா ?//இவங்க கேக்குறதுல என்ன தப்புங்க. ஏற்கனவே ஒரு செல் இருக்கும் போது, இன்னொன்னு அநாவசியமா எதுக்கு? புது போனை வாங்கினா புது ஆளுங்களா பேச போறாங்க. அதே பழைய மிஸ்டு கால் பல்லவி தான் :)

ஒரு தேர் போன்ற குடும்பத்துக்கு அச்சாணியே பெண்களோட சிக்கனம் தான்னு அதிரடியா பாரதி சொல்லிட்டாங்க. எதிரணி என்ன சொல்ல போறீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுகந்தி, எந்த பக்கம்னு முடிவும் பண்ணிட்டீங்க? பின் ஏன் தயக்கம். வந்து வாதங்களோட வெளுத்து வாங்குங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அஸ்வதா, பாவப்பட்ட ஆண்கள் பக்கம் பேச வந்திருக்கீங்களா? லேட்டா வந்தாலும் ஆண்கள் பக்கம் பலம் கூடிட்டு தாங்க போகுது.

//.இந்த பார்லர் பார்லர்னு ஒன்னு இருக்கே அதுக்காக பொண்ணுங்க செலவு பண்ணுவாங்க பாருங்க அதுக்கே தனி பட்ஜெட் போடணும் வீட்ல???//நான் கூட பார்த்திருக்கேன். ஒரு சில பொண்ணுங்க வேலைக்கு போறதே மேக்கப் சாதனங்களை வாங்கதானாம். என்ன கொடுமை அஸ்சு இது :(

இந்த பொம்பளைங்க பண்ற ரவுசுல மாட்டிட்டு முழிக்கிறது ஆண்கள் தான். எதிரணி இதை கேட்டு சும்மாவா இருக்கீங்க?அஸ்வதா என்ன வார்த்தை சொல்லிட்டாங்க பார்த்தீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மஞ்சு,உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்களும் ஆண்கள் பக்கமா? ம்ம்ம்.... ஆண்கள் அணி வெயிட் கூடிட்டே போகுதே. அதுக்காக நடுவரை போய் மகா கணம்னு சொன்னது ரொம்ப அதிகம்ங்க.. நான் பல்லி மாதிரி இருப்பேன் ;)

//எங்க வீட்டுல எல்லா ரூம்லயும் சி.எஃப்.எல் பல்பும் இருக்கு, டியூப் லைட்டும் இருக்கும். நான் எந்த ரூமுக்கு போனாலும் டியூப் லைட் தான் போடுவேன். என் கணவர் பின்னாடியே வந்து சி.எப்.எல் லைட்ட போடுவார்//மஞ்சு, நீங்க உங்க ஆத்துக்காரர சரியா புரிஞ்சுக்கல பா. அவர் ட்யூப் லைட்டை ஏன் ஆப் பண்ணார்னா, முழுமதி போல ஒளிவீசும் உங்க முக ஒளி இருக்கும்போது எதுக்கு தனியா ட்யூப் லைட் வெளிச்சம்னு நினைச்சிருப்பார் போல :)

//தண்ணீர் தொட்டிக்கு அவர் ஆட்டோமேட்டிக் ஸ்விட்ச் போட்டபோது நானும் என் மாமியாரும் அவர திட்டி தீர்த்தோம்//எதெதுக்கு கூட்டணின்னு வெவஸ்தையே இல்லாம கூட்டா திட்டி தீர்த்திருக்காங்க. பாவங்க உங்க ஹப்பி :(

//ஆண்கள் அப்படியில்ல பேருந்துல அல்லது நண்பர்கள் சேர்ந்து ஒரு வண்டியில மேனேஜ் பண்ணிடுவாங்க//சரியான கஞ்சூஸ் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்ரீமதி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. பட்டியில் சிறப்பாக வாதாட உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். பெண்கள் பக்கம் வாதாட போறீங்களா? எங்கே வாதங்கள்... எங்கே வாதங்கள்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//.இந்த பார்லர் பார்லர்னு ஒன்னு இருக்கே அதுக்காக பொண்ணுங்க செலவு பண்ணுவாங்க பாருங்க அதுக்கே தனி பட்ஜெட் போடணும் வீட்ல?
எனக்கு உண்மையா பார்லர பத்திலாம் தெரியாது ,நான் போனதும் கிடையாது ,நடுவர் அவர்களே ,
ஒரு வேலை இயற்கையா அழகா இல்லாத பெண்கள் வேணும்னா பார்லர்க்கு போய் இருக்கலாம் ,அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் ..நாம் உடனே அது ஒரு சிக்கனமின்மை என்று சொல்லி விட முடியாது ..
//எங்க போறாங்களோ இல்லையோ இந்த பார்லர் போறத மட்டும் மறக்கவே மாட்டாங்க//
இதை கூறுவது எப்படி இருக்கு தெரியுமா ?
ஐந்து இட்டலி சாப்பிட்டுவிட்டு ஆறாவது இட்டிலி சாபிட்டால் ,அது சிக்கனம் ஆகுமா ?என்று கூறுவதை போல உள்ளது ,,,நாம எல்லோரும் பெரும்பாலும் முக பவுடர் வீட்டிலேயே அடிசிப்போம் ,சிலர் பார்லர் போயி தான் அடிசுபாங்க ,அத தப்பு சொல்ல முடியுமா ?
அது அவராவர்களின் விருப்பு வெறுப்பு ,
உபரி பணம் மிகுந்த பணம் படைத்த பெண்டீர் சிலர் இந்த அழகு நிலையம் சென்று அழகுபடுதிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான் .எல்லோரையும் தவறு சொல்ல முடியாது அல்லவா ?

//அங்க போயி பேசியல்,திரடிங்,கட்டிங்,பெடிக்யூர்,மெடிகியூர்.இப்படி இருக்குற அத்தனையும் செய்தாதான் நிம்மதி //
பாவம் இப்படி பண்ற சில பொண்ணுங்களுக்கு நிறைய தன அழகைப் பற்றிய தாழ்வுமனப்பான்மை
இருக்கும்னு நினைக்கிறன் ,பாவம் செஞ்சிட்டு போகட்டும் ..தப்பு ஏதும் இல்லையே ...
பதிலடி கொடுங்கம்மா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

என்ன நடுவரே ???கஞ்சூஸ்நு சொல்லிடீங்க ??சிக்கனமா இருபவங்களை இப்படிதான் கஞ்சூச்னு சொல்வாங்க ..ஹா ஹா ஹா நீங்களே ஆண்கள்தான் சிக்கனமானவங்கன்னு ஒத்துகிடீன்களே ???நீங்க இப்படி சொல்வீங்கன்னு எதிர்பாக்கவே இல்ல ??சரியே இல்ல, நீங்க எதிரணி மாதிரி இப்பவே பேசுறீங்களா என்ன ???எனக்கு புரியவே இல்ல ?நீங்க நடுவரா இல்ல எதிரணியா?என் சந்தேகத்த தீர்த்து வைங்க நடுவரே !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அசத்தல் நடுவர் கல்ப்ஸ்கு வணக்கம் இப்போ வாதாடிக் கொண்டிருக்கும் இரு அணியினருக்கும் வணக்கம் வணக்கம வணக்கம். என்னுடைய வாதம் நிச்சயமாக ஜெயிக்கற கட்சிக்கு தான்பா. அப்போ ஜெயிக்கற கட்சி எது சொல்லவே வேண்டாம் அது பெண்கள் தான் சிக்கனத்தை அதிகம் கடைபிடிப்போர்.

இந்தா கொடுக்கிறேன் ,வாங்கிகோங்க..........நடுவருக்கு வணக்கம் !!!இன்று ஆண்கள் மாட்டிகொண்டு முழிப்பது பெண்களிடம்தான்.வரவும் செலவும் சரியாகவே இருக்கும்.சிலசமயங்களில் வரவையும் மீறி போய் விடுகிறது செலவுகள்.(பெண்கள் செய்யும் செலவுகள்).
நடுவரே வீதிகொரு மளிகை கடை இருக்கோ இல்லையோ பார்லர் இருக்கு.இந்த நடுத்தர குடும்பத்து பொண்ணுகளே அங்கு நிறைய காண முடிகிறது .நன்றாக கவனித்தீர்களானால் நன்றாகவே தெரியும் .இபொழுது யாரும் நீளமாக முடி வைத்துகொள்வதே கிடையாது .அதையும் அந்த பார்லரில் போய்தான் வெட்டி கொள்வார்கள் ,விதவிதமாக (u கட்)(v கட்).முன்பெல்லாம் அம்மாதான் வெட்டிவிடுவார்கள் .இப்போ பார்லரில்.கலிகாலம்டா ..............
நாங்கெல்லாம் வெற்றியா தோல்வியான்னு பார்க்க மாட்டோம் .மெய்யா பொய்யான்னு தான் பாப்போம்.மெய் பக்கம்தான் நிப்போம்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்