****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?

அன்புதோழிகளே - தோழர்களே, பொங்கல் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் கொண்டாடி கரும்பு கடிக்கிறேன் பேர்வழி பற்கள் உடைந்து, பல்செட் உடைந்து மனம் நொந்து போயிருக்கும் இந்த தருணத்திலே உங்கள் மனக்காயத்தை ஆற்றும் விதமாக இந்த பட்டியை தொடங்குகிறேன். இந்த தலைப்பு நம் அன்புத்தோழி பவித்ரா அவர்கள் தந்த தலைப்பு.அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?

பட்டியின்விதிமுறைகள் :-
----------------------
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

அதனால் தோழிகளே - தோழர்களே அனைவரும் வெட்கப்படாம, வேதனைப்படாம, துக்கப்படாம, துயரப்படாம, சங்கடப்படாம, சங்கோஜப்படாம, அச்சப்படாம, அவஸ்தைபடாம வந்து உங்க மனதில் இருக்கும் ஆதங்கங்களை இங்கே வந்து கொட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், நான் அடிக்க மட்டுமே பிறந்து வந்த நடுவர் நீங்கள் எதிர் அணியே திரண்டு வந்தாலும் என் உரிமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்;-)

நடுவரே...

சீரியல்ல எப்படி சிக்கனம் பண்றதுன்னு காட்டிட்டு இருக்காங்க பாத்துட்டு வந்து என் வாதத்தை வைக்கிறேன்..............;-)

இப்போதைக்கு நடுவரை அடிச்சுட்டே சொல்லி ஜகா வாங்கறது இந்த ஜெய்.......!
ஜெய்........!
ஜெய்................

Don't Worry Be Happy.

//ஏங்க புடவை வாங்கும் போதே அதோட பராமரிப்பு டிப்ஸ்களை கேட்டுத் தெரிஞ்சுக்கிற காலம் இது... இப்போ போய் இப்படி சொல்றாங்க..தவிர அப்படியே பழையதாகிப் போனாலும் புடவையை கொடுத்துட்டு அதுல இருக்கிற பட்டுக்கு காசு வாங்கிக்கலாம் நடுவரே!//எதிரணி நம்மை கேணைங்கன்னு நினைச்சு பேசிட்டாங்க ;) நாம எவ்ளோ வெவரமானவங்க. காசு குடுத்து வாங்குன பட்டை போட்டு திரும்ப காசு வாங்குற ஆளுங்களாச்சே :)

//ஏங்க அம்மா பொண்ணுக்கு இடைப்பட்ட அதே ஃபேஷன் வித்தியாசம் மாமனார் மருமகனுக்கும் இருக்குமுங்க..//இது நியாயமான பேச்சு.

//ஆடம்பரமா செலவு செய்யலாம் ஆனா ஊதாரித்தனமாதான் செலவு செய்யக் கூடாது! ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குங்க //எதிரணிக்காரங்க எதையும் வித்தியாசப்படுத்தி பார்க்க மாட்டாங்க. ரொம்ப நல்ல மனசு அவங்களுக்கு :)

//ஆண்கள் சைக்கிள்ள போறாங்களா சிரிப்புதான் வருது நடுவரே! இன்னைக்கு கூலித் தொழில் செய்யுற ஆட்கள் கூட பெரும்பாலும் TVS 50 வைத்து இருக்காங்க//பிச்சையெடுக்கறவங்களே கார்ல தான் வர்றாங்கன்னா பார்த்துக்கோங்களேன் :D

//உபயோகத்துக்கு ஏற்ற பொருட்களை வாங்கிறது தான் பெண்ணோட குணம்.. ஆண்கள் தான் சிக்கனம் பண்றேனு பேர்வழினு தேவையானதில் கோட்டை விட்டு விட்டு பின்னால் முழி பிதுங்குவாங்க.//எல்லா வசதியும் கொண்ட போனை வாங்குறது அட்டாச்டு பாத்ரூம், டாய்லெட் கட்டுற மாதிரிங்க. ஒருத்தர் குளிக்க போகும் போது, இன்னொருத்தர் டாய்லெட் போகனும்னு நின்னா எப்படியிருக்கும்? :))

//நாட்டோட பொருளாதாரம் உயரனும்னா பெண்கள் கையில் வரவு செலவு இருக்கணும்னு தான் நிபுணர்கள் சொல்றாங்க தெரிஞ்சுகுங்க //இதை சொன்னவர் நிச்சயமா ஒரு ஆணா தான் இருப்பார்.

//இந்தக் காலத்திலும்(போஸ்ட் ஆஃபீஸ்,பங்குச் சந்தை,மியூச்சுவல் ஃபண்ட்ஸ்னு) பெண்கள் தான் சிக்கனமா செலவு செய்து சேமிப்பில் அக்கறை காட்டுகிறவர்கள்.//இத்தனையையும் நம்ம பெண்களை நம்பிதானே தொடங்கி வச்சிருக்காங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்த ஆண்கள் இருக்காங்களே ,யப்பா ,யப்பா அவங்களுக்கு பதிலடியா எவ்வளவோ விஷயங்களை ,அடுக்கி சொல்லாலாம் ,அவங்க சிக்கன காரங்க இல்லன்னு சொல்ல, அதை விட்டுட்டு பொய்யை மெய்யாக்க பாக்கறாங்க ,இந்த ஆண்கள் புராணம் பாடுபவங்க,
உதாரணமா ,

எங்க பாசுக்கு(boss) பார்ட்டி வைக்கணும் ,எங்க ப்ரண்ட்ச்க்கு பார்ட்டி வைக்கணும் ,அவங்களுக்கு அவங்களே பார்ட்டி வைச்சுக்காத ஆண்மகன்களை ,இப்ப யாராவது பாக்க முடியுமா ?சொல்லுங்க ,
சீட்டாட்டம் ஆடி குடும்பம் நடுத்தெருவுக்கு போக வழிகோலும் ,எத்தனையோ ஆண்கள் உலா வருகிற கலியுகம் இது ,,,இவங்கல்லாம் சிக்கன காரங்களா ?
சொல்லுங்க....,எதிரணி மற்றும் ,நடுவர் அவர்களே ?
இந்த செல் போன் பில் இருக்கே ,இந்த ஆணுக்கு ஆனே தேவையில்லாத பேச்செல்லாம் பேசி ,மனைவி சம்பாதிக்கும் பணத்தையும் சேர்த்து செலவு பண்ணுகிறார்களே ?இது நியாயமா ?தர்மமா ?

அட நம்ம குடும்ப பொண்ணுங்க ,எதுக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க ,சொல்லுங்க ,விலைவாசி ஒருபுறமிருக்க ,ஆண்கள் சரியாய் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் சேர்ப்பதில்லை ,வீண் செலவுகள் செய்கிறார்கள் ,(மது ,மாது )என ஆண்கள் செலவு செய்வதை ,எல்லாம் பொருத்து ஆளும் பூமாதேவியை போன்ற நம் பெண்களை சிக்கனம் இல்லாதவர்கள் என்ற பட்ட பேர் கொடுக்கிறார்களே ,அதுவும் நம் பெண்களே கூறுவது,பெண்ணினத்திர்க்கே அவமானமாக உள்ளது , உண்மையில் பெரும்பான்மையாக பெண்களே அதிக சிக்கன காரர்கள் ,இதை யார் தலையிலும் அடித்து பொய்யாக்க யாராலும் முடியாது ,என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

இங்க பெண்கள் அதிகமா இருக்கிறதுனால ஆண்கள் பக்கம் பேச பெண்கள் வந்திருப்பது பெண்ணினத்திற்கு அவமானத்தை தேடித் தர இல்லை பெண்கள் பக்கம் என்ன குப்பை அழுக்கு இருக்கு என்பதை எடுத்துக்காட்டுவதாலும், ஆண்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்வதாலும் என்ன தவறு இருக்க போகுது?

நாலு ஆண்கள் வந்து ஆண்கள் பக்கம் இருக்கிறத சொல்ற வரைக்கும் வெயிட்பண்ணி பெண்ணின் பெருமையையே பேசிட்டு இருந்தா பட்டிக்கு யாரும் வரமாட்டாங்க.. அதனால ....... நாங்க தொடர்ந்து இப்படியேதான் பேசுவோம் நடுவரே!

(வனி மன்னிக்கனும்,

நான் பேசினதுல தவறு இருந்தா என் பதிலளிய யாரும் உபயோகப்படுத்தாதீங்க, நான் மாற்றுல வந்து அழிச்சிடறேன்)

Don't Worry Be Happy.

//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், நான் அடிக்க மட்டுமே பிறந்து வந்த நடுவர் நீங்கள் எதிர் அணியே திரண்டு வந்தாலும் என் உரிமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்;-) //ஜெய், இதை என் ஆத்துக்கார் கேட்ட கதறி அலுதுடுவாரு. ஏன்னா, கல்யாணம் ஆன இந்த நாலு வருஷத்துல ஒருநாளும் அவர் அடிச்சதில்ல. சரி, போகட்டும் நீங்க நம்ம ஜெய்தானே, தாராளமா உரிமைய எடுத்துக்குங்க :)

நீங்கள் யாரையும் குறித்து இங்கு பேசவில்லையே. அதனால் தாராளமாக நீங்க விருப்பப்பட்ட அணி பக்கம் பேசலாம். இதுபோன்ற வாதங்களுக்காக தானே பட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//எங்க பாசுக்கு(boss) பார்ட்டி வைக்கணும் ,எங்க ப்ரண்ட்ச்க்கு பார்ட்டி வைக்கணும் ,அவங்களுக்கு அவங்களே பார்ட்டி வைச்சுக்காத ஆண்மகன்களை ,இப்ப யாராவது பாக்க முடியுமா ?சொல்லுங்க //பாஸ் என்னங்க பாசோட பாட்டிக்கே பார்ட்டி வைக்குறவங்க நம்ம ஆளுங்க :)

//இவங்கல்லாம் சிக்கன காரங்களா ?//சிக்கனகாரங்க இல்லீங்க. சிக்கன் காருங்கோ. ஏன்னா தண்ணி அடிக்கும் போது சிக்கன் அறுவத்தி அஞ்சு இல்லாம தண்ணி உள்ள போகாது :)

//பெண்ணினத்திர்க்கே அவமானமாக உள்ளது , உண்மையில் பெரும்பான்மையாக பெண்களே அதிக சிக்கன காரர்கள் ,இதை யார் தலையிலும் அடித்து பொய்யாக்க யாராலும் முடியாது ,என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//நடுவர் தலைல மட்டும் அடிச்சுடாதீங்க. வடிவேலு ஒருபடத்துல அடிவாங்கி நடுமண்டை வீங்கி போனா மாதிரி இருக்கேங்க :( ஏற்கனவே ஒருத்தவங்க அடி அடின்னு அடிச்சுட்டு இருக்காங்க :((கேட்டா உரிமைல அடிக்கிறாங்களாம். எனக்கே இப்பிடின்னா, அவங்க வீட்டு ஆளுங்க நிலைமைய நினைச்சு பாருங்க...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவர் அவர்களே ,உண்மைய உண்மையா அனைவரும் ஆராய்ந்து பாக்கணும் ,நான் சொல்லி இருக்கிற அனைத்தையும் யாராச்சும் ஒருத்தரால பொய் என்று நிரூபிக்க முடியுமா ?இல்ல நான் சொல்லி இருப்பதை பெண்கள் தான் செய்றாங்கன்னு சொல்ல முடியுமா ?முடியாது ,
எந்த ஒரு ஆணும முழுதாக நல்லவர்களும் கிடையாது ,கெட்டவர்களும் கிடையாது ,
எல்லோரும்(நிறைய ஆண்கள் ) பொதுவாக செய்யும் தவறை எடுத்து காட்டி உள்ளேன் ,பெண்கள் அந்த அளவுக்கு தீங்கு விளைவிக்க கூடியவற்றை
செய்து நான் ,பணத்தை அழித்ததாக கேள்வி பட்டதுமில்லை ,அவ்வாறு இனியும் எதுவும் நடக்க போவதுமில்லை ,பின் எந்த விதத்தில் அவர்களை வீண் செலவு செய்பவர்கள் என்று குறை கூற இயலும் ,யாராகினும் ?பட்டிமன்ற பேச்சுக்கு மட்டுமானால் இப்போட்டி (ஆனா?பெண்ணா ?)என்ற சிக்கன போட்டி பொருந்தலாம் ,உண்மையில் பெண்கள் ,எல்லாவற்றையும் தியாகம் செய்யும் தியாக செம்மல்கள் ,பொருள் சேர்க்க நினைக்கும் பெருமைக்காரர்கள் ,குறை ஒன்றும் இல்லை அவர்களிடத்தில் ,நிறையானவர்கள் என்றுமே அவர்கள்
அனைவரும் புரிந்துக் கொள்ளவே ,சொல்கிறேன் ...நான் இதை பெண் சிக்கனம் என்று பாடவில்லை,உள்ள படி உள்ள உண்மையை உலகு அறியவே சொல்கிறேன் ...
குடும்பத்தில் ஒரு ஆண் குடும்ப செலவை ஏற்று செய்தால் ,எப்படி இருக்கும் ,பெண் குடும்ப செலவை பார்த்தல் எப்படி இருக்கும் ?,,
நம் அம்மா நம்மை பேணி காத்து வளர்த்தது சிக்கன முறை கையாளாமலா ?
அல்லது நாம் குடும்பத்தை நடத்தி கொண்டிருப்பது சிக்கனமில்லாமலா ?
ஒவ்வொரு வீட்டிலும் அப்படி தான் ,பெண் சிக்கனம் நடக்கிறது ,இன்றும் பெண்ணே சிக்கனமாக குடும்பம் ஆள்கிறாள் ,எந்த ஆணிடமும் சிக்கனமில்லை
என்பது ,என் பதில் அல்ல ,பெரும்பான்மை சிக்கனம் பெண்ணே என்பது என்பது எனது பதில் ,எனவே ,இப்படி கேள்விக்கும் பெண்ணே ,தான் பதில் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பட்டி தலைவரே நான் உங்க தலயில அடிக்க மாட்டேன் ,தெளிவா நான் சொன்னத படிங்க ,புரியும் ,//
யாராலையும் தலையில அடிச்சு உண்மையை பொய் ஆக்க முடியாதுன்னு தான் சொன்னேன் ,மத்த படி எதுவுமில்லங்கோ ...........நம்புங்கோ

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அன்பு நடுவருக்கும் அருமை தோழிகளுக்கு எனது வணக்கம்.
அந்த காலமானாலும் இந்த காலமானாலும் எந்த காலமானாலும் சிக்கனத்தை கடைபிடிப்பது பெண்களே.நடுவர் அவர்களே எதிரணியினர் எப்பொழுதும் பெண்கள் சேலை வாங்குவது பற்றியே சொல்லி போரடிக்கிரார்கள்.ஆள் பாதி ஆடை பாதி என்பது அவர்களுக்கு தெரியாது போலும்.ஆடை என்பது அத்தியாவசியமான ஓன்று அதை பற்றி என் அணி தோழி சரியாக பதில் கொடுத்க்துள்ளார்.

ஆண்களின் ஊதாரி தனத்தால் பாதிக்க படுவது அந்த குடும்பமே.முதலில் குழந்தைகள் வளர்ப்பு என்று எடுத்துகொண்டால் குழ ந்தைகளை அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து பணத்தின் மதிப்பு தெரியாமல் வளர்ப்பது ஆண்கள்.சிறு வயதிலிருத்து இதே பழக்கமாகும் குழந்தைகள் பெரிதாகும் பொது சிக்கனமாக வாழத்தெரியாமல் அல்லாடுவார்கள்.ஒரு தாய் , தந்தை கொடுக்கும் பணத்தை பல வழிகளில் சேமிப்பது கூட குழந்தைகளுக்குகாக தான்.இதை அந்த குழந்தைகளுக்கு புரிய வைத்து வளர்க்க எந்த தகப்பனு துணை போவதில்லை.தொல்லைக்காட்சி மன்னிக்கவும் தொலைக்காட்சியில் விளம்பரங்களை பார்த்து இது வேண்டும் என கேட்ட மறுநிமிடமே அவர்களுக்கு அதை வாங்கி கொடுக்கும் தந்தைமார்கள் முதலில் மாறவேண்டும்.ஒரு பொருளை வாங்கி கொடுக்கும் முன் அது அந்த குழந்தைகளுக்கு அவசியமா என ஆராய்ந்து கொஞ்ச நாள் விட்டு அவசியமானால் வாங்கி கொடுத்து பாருங்கள் தந்தைமார்களே அப்பொழுது அந்த பொருளின் அருமை அக்குழந்தைகளுக்கு தெரியவரும்.மேலும் சிறு சேமிப்பு பற்றி சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு புரியவைப்பது அக்குழந்தையின் தாயே.சிறு வயதிலேயே ஒரு உண்டியை வாங்கி கொடுத்து அதில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது தாயே.

மார்கெட்டுக்கு போகும் பெண்கள் முதலிலேயே எல்லா காய்கறிகளையும் வாங்கிவிடுவார்களா என்றால் என்றால் இல்லை ஏனென்றால் முதலில் மார்க்கெட்டை ஒரு ரவுண்டு வந்து பின் எந்த கடையில் காய்கறி விலை குறைவாக அதே சமயம் பிரெஷ் ஆகவும் இருக்கோ அந்த கடையில தான் ரெகுலராக வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.இதனால் கொஞ்சம் பணத்தை மிச்சபடுத்துகிரார்கள்.அதே சமயம் என்றாவது இந்த ஆண்களை மார்க்கெட்டு பக்கம் அனுப்பி பாருங்கள் தெரியும் விலை அதிகம் கொடுத்து தான் வாங்கிவருவார்கள்.

சிக்கனத்தை பற்றி பேசும் போதே எனக்கு எங்கள் குடும்பம் தான் நினைவுக்கு வந்தது.என்கணவருக்கு சம்பாதித்தோமா செலவு செய்தோமா என்கிற குணம்.ஆனால் எனக்கோ எதிர்காலத்தை பற்றிய எண்ணம் அதிகம்.அவர் கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்து அவருக்கே வியாபாரத்திற்கு பைனான்ஸ் பண்ணியது உண்டு.இதை எல்லாம் யோசித்து தான் நான் இந்த தலைப்பையே தேர்ந்தெடுத்தேன். எந்த பெண்ணும் தன் குடும்பத்தை சிக்கனமாக வழி நடத்தி முன்னேற்றவே விரும்புவாள்.இன்னும் இருக்க தோழிகளே மீண்டும் வருவேன்.

//,உண்மையில் பெண்கள் ,எல்லாவற்றையும் தியாகம் செய்யும் தியாக செம்மல்கள் ,பொருள் சேர்க்க நினைக்கும் பெருமைக்காரர்கள் ,குறை ஒன்றும் இல்லை அவர்களிடத்தில் ,நிறையானவர்கள் என்றுமே அவர்கள்//பாரதி, இதை நான் எதிரணிக்கு சூசகமா சொன்னேன். அவங்களுக்கு புரியல. இப்ப நேரடியாவே சொல்லிடறேன். பெண்கள் தான் தியாகத்தின் மறுவுருவம். சிக்கனத்தின் சிகரம். போதுங்களா? :)

//அனைவரும் புரிந்துக் கொள்ளவே ,சொல்கிறேன் ...நான் இதை பெண் சிக்கனம் என்று பாடவில்லை,உள்ள படி உள்ள உண்மையை உலகு அறியவே சொல்கிறேன்//இவங்க சொல்றதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறொன்றுமில்லை எதிரணியினரே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்