தேதி: January 18, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா மாவு - அரை கிலோ
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 1
முட்டை - 3
எலும்பில்லாத கோழி - 4 , 5 துண்டுகள்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். கோழியை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கோழி துண்டுகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும். சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மைதா அல்லது கோதுமை மாவை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிணைந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்

மாவை எடுத்து சப்பாத்திக்கு வளத்துவது போல் ஓரங்கள் மெல்லியதாக செய்துக் கொள்ளவும்.

அதில் ஒரு தேக்கரண்டி வெங்காய கலவையை வைத்து,அதன் மேல் 3 ஸ்பூன் முட்டையை ஊற்றி விடவும்.

படத்தில் உள்ளது போல் முதலில் மேல் கீழ் பக்கங்களை உள்ளே வைத்து மடிக்கவும். பின்னர் இடது வலது பக்கங்களை (முட்டை வெளியே வராமல் இருக்கும்படி மடிக்கவும்.)

இதைப் போலவே மற்ற மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் பரோட்டாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

தீயை மிதமாக வைக்க வேண்டும். அதிகமான தீ இருந்தால் வெளியே பொரிந்து உள்ளே வேகாமல் இருக்கும்.

சுவையான முட்டை பரோட்டா ரெடி.

Comments
ஹசினா
ஹசினா சலாம் நலமா?முட்டை பரோட்டா பார்க்கவே அழகா இருக்குபா வாழ்த்துகள், நானும் இது பொல் செய்வேன் நன்றாக இருக்கும் ஆனால் நான் பரோட்டா பொல் தவாவில் பொட்டு சுடுவேன்,
lulu
ஹாய் உங்க பரோட்டா பார்க்க அழகா இருக்கு...செய்முறையும் சுலபமா இருக்கு வாழ்த்துக்கள்....
ஆயிஷா
அட்மின் அண்ணாவுக்கு நன்றி.
வளைக்கும் சலாம்,ஆயிஷா முதல் ஆளாக வந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றிமா.
ஹசீன்
சுமதி
ஹாய் சுமதி நலமா?
உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிபா .
ஹசீன்
ஹாய் ஹசினா
ஹாய் ஹசினா நல்மா? lulu குட்டி நலமா? உங்க குறிப்ப இப்பதான் முதல் முறையா பாக்குரேன். உங்க முதல் குறிப்பா இல்ல நிறைய கொடுத்து இருக்கிங்களா? வாழ்த்துக்கள்.....
உன்னை போல பிறரையும் நேசி.
தேவி
nalamaa devi நலமா தேவி,பேசியே ரொம்ப நாள் ஆகுதுபா.குட்டிமா நலம்.நான் இதுவரை 5 ,6 குறிப்பு கொடுத்து இருகிறேன்பா.நன்றி தேவி.
ஹசீன்
ஹசீனா..
வித்தியாசமான பரோட்டா ..ம்ம் விதம்விதமா செய்து அசத்துரிங்க வாழ்த்துக்கள் விரைவில் ஸ்டார் வாங்குவதர்க்கு ...நன்றிஹசீனா..
வாழு, வாழவிடு..
ஹசினா
சலாம் ஹசினா வித்தியாசமான பரோட்டா நான் வேறமாதிரி செய்வேண்டா இந்தமாதிரியும் செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்
ஹசீனா
நானும் இந்த முர்தபா கொஞ்சம் வேற மாதிரி செய்வேன்,இதுவும் ஈசியா இருக்கு,சீக்கிரமா செஞ்சு பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
ஹசீனா...,
அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா..,
உங்களுடைய முர்தபா ஸ்டைல் வித்தியாசமாக இருக்கு.
நாங்கள் தவாவில் சுட்டு எடுப்போம்.
நீங்கள் எண்ணெயில் பொறித்து எடுத்திருப்பது மாறுதலாக உள்ளது.
நிச்சயம் டேஸ்ட்டாக இருக்கும் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் ஹசீனா...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
lulu
ஹாசினி, மிகவும் சத்துள்ள முட்டை பரோட்டா அருமையாக இருக்கு.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
G.Amutha
Good
ஹசினா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்ல குறிப்பு பா.... கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ருக்ஸானா
நன்றி ருக்ஸானா.உங்க வாழ்த்துக்கு.நீங்களும் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.
(
ஹசீன்
ஃபாத்திமாம்மா..
வலைக்கும் சலாம் மா.செய்துப்பாருங்கல்மா .
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ஹசீன்
ரீம்
ரீம் நலமா?நீங்களும் செய்து அனுப்புங்களேன்.pls ...
ஸ்வீட்ஸ் நிறைய தெரியும் என நினைக்கிறேன்.எதிர்ப்பார்கிறேன் உங்கள் குறிப்புகளை.
இதையும் செய்துப்பாருங்கள் ரீம்.நன்றி.
ஹசீன்
அப்சரா
வலைக்கும் சலாம் அப்சரா.
இது நல்ல டேஸ்ட்டாக இருக்கும்.செய்துப்ப்பாருங்கள்.
இன்று உங்க பராசாப்பம் தான் செய்யப்போகிர்றேன்.
முடிந்தால் போட்டோ எடுத்து அனுப்புகிறேன்.வாழ்த்துக்கு நன்றி அப்சரா.
ஹசீன்
yogarani
யோகா அம்மா நலமா?
சத்தானது தான்....உங்க வருகைக்கு ரொம்ப நன்றிமா..
ஹசீன்
G.Amutha
அமுதா நலமா.
ரொம்ப தேங்க்ஸ் பா.
ஹசீன்
ஆமினா
வலைக்கும் சலாம்........... ஆமினா
இன்ஷால்லாஹ் கண்டிப்பா செய்துப்பாருங்கள் மா.நன்றி.
ஹசீன்
ஹசீனா
எனக்கும் ஆசையா தான் இருக்கு,ஆனால் போட்டோஸ் எப்படி அட்டாச் பண்ணுவது,மொபைலில் இருந்து லேப்பிக்கு மாற்றவும் தெரியாது.i will try.
ரீம்..
உங்கள் போன் நோக்கியாவாக இருந்தால் நோகியா பிசி ஸ்யூட் என்ற சாஃப்ட்வேர் டவுன்லோட் செய்து கொள்ளவும் பின்னர் சிஸ்டத்துடன் இனைப்பதெர்கெண ஒரு சிறிய கேபிள் ஒன்று இருக்கும் அதை உங்கள் போனில் இனைத்துவிட்டு பின்னர் இமேஜ் ஸ்டோர் பன்னுங்கள் .உங்கள் போட்டோஸ் ஏறிவிடும் பின்னர் நீங்கள் அனுப்பலாம் .சரியா இன்னும் சந்தேகம் வந்தால் கேளுங்கள்.. அடுத்துஎங்களுக்காக சூப்பர் ரெசிப்பிஎல்லாம் அனுப்புங்கள்..
வாழு, வாழவிடு..
ரீம்,
ரீம்,
போட்டோ எடுத்துவிட்டு மெமரி கார்டை எடுத்து, கார்டு ரிடேரில் மெமரி கார்டை போட்டு சிஸ்டத்தில் save செய்து அனுபலாம். ட்ரை பண்ணுங்க.
ஹசீன்
ருக்ஸானா&ஹசீனா
ரொம்ப நன்றி சீக்கிரமே போட்டோஸ் உடன் குறிப்புகள் அனுப்புறேன்.