கேஸ் மற்றும் பெட்ரோல் சிக்கனம் !!!

இன்னைக்கு இருக்கற நிலைமைல, இந்த விஷியத்த பத்தி பேசியே ஆகணும். எப்ப விலை ஏறும்? ன்னு தெரியாது. திடீர் திடீருன்னு ஏத்தறாங்க. நம்மனால அவங்கள கேட்கவா முடியும்.... சரி விஷியாத்துக்கு வரேன். நம்மனால முடுஞ்சது சிக்கனம உபயோக படுத்தறது. எப்படி எல்லாம் உபயோக படுத்துனா, கேஸ் மற்றும் பெட்ரோல் மிச்சம் பிடிக்கலாம், சிக்கனபடுத்தலாம்ன்னு பேசலாம் வாங்க. எல்லாரும் அவங்க அவங்க ஐடியா சொல்லுங்க, அதிக செலவு பண்றவங்களுக்கு உபயோகமா இருக்கும் இல்ல........

இதோ வந்து விட்டன் முதல் பதிவு போட

1. gas leak இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

2. குடிப்பதர்க்கு சுடு தண்ணீர் உபயோகிதால் ஒரு நளைக்கு தேவையான தண்ணீர் சுடவைது thermos பாட்டிலில் ஊற்றி வைக்கவும்

3. fridge இருந்து எடுக்கும் பொருட்கள் defrost செய்து விட்டு உபயோகிக்கவும்

4. மூடி வைத்து சமைக்கவும்

5. உனவுகள் குழைந்து போகாதவாறு சமைக்கவும்

6. சமைக்கும் போது TV பார்ப்பதையும் Phone இல் பேசுவதையும் குறைக்கலாம் இதன்முலம் உண்வு தீயிந்து போவதை தவிர்கலாம் gas மிச்ச படுட்தலம்

7.பாத்திரங்களில் தண்ணீர் இருந்தால் சுத்தமான துணி வைத்து துடைது வைகலாம்

சுகன் இது முன்னாடியே டிஸ்கஸ் பண்ணியாச்சு டா. எடுத்துக் கொடுக்கலாம்னா சாரி எங்க பேசினோம்னு தெரியல.
என்னோட கருத்து கேஸ் உபயோகிக்கிம் போது சமைக்கும் முன் நமக்கு இன்னக்கி என்ன செய்ய போறோம்னு தெரியும் சோ எல்லாத்தையும் முன்கூட்டியே நறுக்கி, கழுவி இப்படி ஆயத்த வேலைகளை செய்துட்டு அப்பறம் கேஸ் பத்தவச்சா அரை மணி நேரம் தான் சமையல் எளிதில் முடிஞ்சிடும் கேஸும் மிச்சம் தானே. மூடி வைத்து சமைக்க கூடிய உணவு வகைகளை மூடி வைத்து சமைத்தால் சீக்கிரம் ஆகிடும். இன்னொரு விஷயம் என்னன்னா எல்லாரும் குக்கர் வச்சிருப்பாங்க ஆனா அதை யாரும் பயன்படுத்துவது இல்லை குக்கரில் சாதம் வைக்கும் போதே வேக வைக்கவேண்டிய காய்களையும் பருப்பையும் வைத்து எடுத்தால் வேலையே முடிந்த மாதிரி தானே.
சில நேரங்களில் கேஸ் அடுப்பின் பர்னர், சிலிண்டரில் இருந்து வரும் டியூப் இப்படிப்பட்டவைகளை 6 மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து அல்லது மாற்ற வேண்டியதை மாற்றி பயன்படுத்தலாம்.

பெட்ரோல் சிக்கனம் முக்கியமானது எல்லோருக்கும் தெரிந்தது டிராபிக்ல நிக்கும் போது வண்டி இன்ஜினை நிறுத்திட்டு நிக்கலாம். அதை ஸ்டார்ட் செய்ய எவ்வளவு நேரம் ஆகிட போகுது ஆனா அத யாரு செய்றாங்க. தெரிந்தே செய்யும் தப்பு இது. நிச்சயம் இதை எல்லாரும் உணரணும் மாறனும். பெரிய சிட்டி அல்லாமல் சிறு நகரங்களில் இருப்பவர்கள் எல்லாம் தேவைக்கு இருசக்கர வாகனங்களையோ அல்லது 4 சக்கர வாகங்களையோ பயன்படுத்தலாம் சும்மா பக்கத்து தெருவிற்கோ அல்லது முனையில் இருக்குற கடைக்கோ நண்பர்கள் வீட்டுக்குலாம் வண்டில தான் போவேன் என்றால் என்ன செய்வது. இதுலாம் அவரவர் அபிப்ராயம் தான் ஆனால் அதுப் போல் செய்வதால் பொட்ரோல் மிச்சம் காசும் மிச்சம் என்பது என் கருத்து.

இல்ல யாழினி, டிராபிக் ல நிக்கும் போது வண்டிய ஆப் பண்ண கூடாதாம, ஏன்னா, மறுபடியும் on பண்ணும் போது அதிகமா பெட்ரோல் எடுக்குமாம். அதான் யாரும் ஆப் பண்றது இல்ல. நானும் முதல்ல ஆப் பண்ணினேன், அப்பறமா சர்வீஸ் சென்ட் ல தான் இத சொன்னங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பிரேக் போடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.எப்படி என்றால் நமக்கு முன்னாடியே குழி இருப்பது தெரியும்போது ஆக்சிலேட்டரைதான் குறைக்கவேண்டுமே தவிர பிரேக் போடக்கூடாது.ஆக்சிலேட்டரைதான் நாம் பெரும்பாலும் உபயோகபடுத்தவேண்டுமே தவிர பிரேக் உபயோகபடுத்தக்கூடாது..பிரேக் உபயோகபடுத்தும்போது அதிகமாக பெட்ரோல் செலவாகிறது.முடிந்த்தவரை 40 லேயே போகவேண்டும் .20 ல் போககூடாது ,குறைவாக போனாலும்,(20 ),அதிகமாக போனாலும் (40ku மேல் )பெட்ரோல் செலவாகும்.அடிக்கடி நாம் செக் பண்ணவேண்டியது பில்டேரைதான்.அது அடைத்து கொண்டால் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை வரும்.எப்பொழுதும் நாம் செப்டியாகவே ஒட்டவேண்டும்.அடிக்கடி வாடேர்செர்விஸ் கொடுக்கவேண்டும்.நாமே கழுவினால் தூசி போகாது.நிறைய உள்ளது இது எல்லாமே அனைவருக்கும் தெரிந்ததுதானே என்ன ????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அப்படியா சுகன் நானும் இதுவரை அப்படி தான் நினைச்சுட்டு இருந்தேன் நிக்கும் போது இன்ஜின் ஆன்ல இருந்தா வேஸ்டா பெட்ரோல் போகுமேனு நினைச்சேன். அப்போ ஆஃப் பண்ண கூடாதாம்பா.

ஹாய் தோழிகளே! நான் வரும் பஸ்சில் இப்படி ஒரு வாசகம் படித்தேன்"டீசல் சிக்கனம் ஓட்டுனர் கைவண்ணம்" அப்படினு. அதனாலதான் சொல்லுரேன் பெட்ரோல் சிக்கனம் உங்க கையில் தான் உள்ளது. சுகி சொல்லுர மாதிரி நாம் ஆப் பண்ணி ஸ்டாட் பண்னும் போது அதிக எரிபொருள் விணாகுகிரது.

சிலர் நினைப்பாங்க ஓரே நேரத்துல 2 ,3 அடுப்பு எரிந்தால் அதிகம் கேஸ் செலவாகும் னு ஆனா எல்லா அடுப்பும் ஓரே நேரத்துல எரிந்தால் கேஸ் அதிகம் வீண் ஆகாது பா. அதனால ஓரே நேரத்துல வேலை எல்லாம் இசியா முடிஞ்சுடும்.அதோடு கேஸ் ம் மிச்சமாகும்.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்