தலைக்கு கண்டிஷ்னர் பற்றி

நான் தூத்துக்குடியில் இருக்கிறேன். உங்களுடைய குறிப்புகள் மிகவும் நன்றாக உள்ளது. பயனளிக்கிறது. என்னுடைய தலைமுடி மிகவும் வறண்டும் முடி கட்டாகி சின்ன சின்னதாக சுறுண்டும் இருக்கிறது. உங்களுடைய குறிப்பை பார்த்து டவ் ஷாம்பு, டவ் கண்டிஷ்னர் இரண்டும் வாங்கி இருக்கிறேன். முதலில் கண்டிஷ்னர் போட வேண்டுமா ஷாம்பு போட வேண்டுமா என்பதையும் எவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டுமென்பதைவும் தயவு செய்து தெரிவிக்கவும். குளித்த பின்னர் போடுவதற்கான லோஷன் இங்கே கிடைக்கவில்லை. என்ன செய்வது? சிறிய பாட்டிலில் தண்ணீர் மாதிரி லிவோன் கம்பெனி ப்ராடெக்ட் இருக்கிறது. அதை பயன்படுத்தலாமா?

உங்களுடைய குறிப்புன்னு சொல்லி இருக்கீங்க .யாருடைய குறிப்பு எந்த இழையில் பார்தீங்கபா .அந்த இழையில் கேட்டா அவங்க பதில் சொல்வாங்களே .எங்களுக்கும் அது பயன்படுமே .. இங்க அவங்க பார்த்தாதான் உண்டு.ஏதோ பார்த்ததுமே சொல்லனும்னு தோணிச்சு சொன்னேன் .யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்கப்பா :->

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நீங்க யார் குறிப்புக்கு நன்றி சொல்லி பேசறீங்கன்னு தெரியல.(தேவா or உமா). எப்படியோ அறுசுவை குடும்பத்துக்கு தான நன்றி. இருக்கட்டும்.
நீங்க டவ் ஷாம்பூ உபயோகிப்பது நல்லது தான், மத்த ஷாம்பூ கூட கம்பர் பண்ணும் போது " டவ் " பெஸ்ட். நீங்க தொடர்ந்து உபயோகிக்கலாம். எப்பவுமே ஷாம்பூ போட்டு வாஷ் பண்ணுன பின்னாடி, "கண்டிஷ்னர்" போடணும். நல்லா தலைமுடி மேல் இருந்து கீழாக தலை சீவர மாதிரி தேயிக்கணும். பின்பு, ஒரு ஒரு நிமிடம் கலுச்சு, வாஷ் பண்ணிடுங்க. இது எல்லா கண்டிஷ்னர் க்கும் பொருந்தும்.

லிவான் பத்தி கேடிங்க இல்ல, அது தலைக்கு குளுச்ச பின்னாடி முடி ஈரமா இருக்கும் போது, தலை சீவர மாதிரி மேல் இருந்து தடவுங்க. அப்பறம், முடி காய வெச்சுகோங்க. இது போட்டா முடி ரொம்ப soft ஹ இருக்கும். அனால் இதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு, "கண்டிஷ்னர்" போட்ட உடனே வாஷ் பண்ணிடுவோம், சோ chemicals ரொம்ப பாதிக்காது. லிவான் மாதிரி liquid உஸ் பண்ணுனா, அது நம்ம முடிலையே இருக்கும், சிலருக்கு முடி கொட்ட தொடங்கும். நீங்க பாத்துட்டு உஸ் பண்ணிகொங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

முடியின் வேர் கால்கள்ல படர மாதிரி தேய்க்கணும்னு கூட சொல்வாங்களே .சுகி .என்னன்னு சொல்லுங்க .ஒரு நிமிஷம் வச்சிருக்கணுமா. இல்ல அஞ்சு நிமிஷம் வச்சிருக்கணுமா .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இல்ல டா, வேர் வரைக்கும் தேய்க்கனும்ன்னு இல்ல. மசாஜ் பண்ற மாதிரி பண்ணுனா போதும். 1 -2 mins வெச்ச போதும். 5 mins எல்லாம் வேண்டாம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப நன்றிடா நான் இப்போ ஹிமாலயாதான் .உபயோகிக்கிறேன்.அது ஹெர்பல் அதனாலதான் .
லிவான் சில்கி லோசன் கேள்வி படிருகியா.நான் டிவியில்தான் பார்த்தேன் .அது எதற்காக உபயோகிப்பது.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

போச்சு நன்றி சொல்ல தனி இழையே தொடங்கிடீங்களா!!!இங்க வாங்க நான் இங்க உங்கள தேடிட்டு இருந்தா நீங்க அடுத்த இழைய தொடங்கிட்ட எப்படி ?நாங்க எல்லாம் மேம் இல்ல நண்பி .உங்கள விட சின்ன பொண்ணுங்கதான் .ரைட்டு இங்க வாங்க வாங்க வாங்க நு அன்போட அழைக்கிறேன். அழைக்கிறேன். அழைக்கிறேன்:->இஸ்ஸ் அப்பா எனக்கு நாக்கு வறண்டு போச்சு உங்கள அழைச்சு.நான் தண்ணி குடிச்சிட்டு வரேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கண்டிஷ்னர் முடி வேர் கால்களில் படாமல் முடியில் மட்டும் தேய்த்து வாஷ் பண்ணவேண்டும்.வேர் கால்களில் பட்டால் முடி கொட்டும்.(சுகா இதை நீ சொல்ல வில்லை)மற்றபடி சுகா சொன்ன மாதிரிதான் உபயொகிக்கவேண்டும்.

நானும் டவ் hairfall therapy 6 மாதமாக பயன்படுத்துறேன். இவ்வளவு நாள் நல்லா தான் இருந்துச்சு இப்போ 2 வாரமாக முடிக் கொட்டுகிறது ஏன் என்று தெரியவில்லை இங்க பேசும் போது டவ் ஷாம்பூ நல்லதுனு சொன்னீங்க அதான் இங்க கேட்கறேன். எனக்கு பொடுகும் இருக்கு ஒரு வேளை அதனால் இருக்கலாமா?

சுந்த் இனிமே நீங்க சொன்ன மாதிரி தேய்கிறேன் .நன்றிபா சொன்னதுக்கு :->

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் தோழிகள் அனைவரும் நலமா இறைவன் நலமே நல்கட்டும்.நான் அறுசுவைக்கு புதியவள் உங்களுடன் பழக இதன் முறைகளை சொல்லி தாருங்கள்

மேலும் சில பதிவுகள்