ஓவுலேசன் என்றால் என்ன?.

ஓவுலேசன் என்றால் என்ன?.அதன் பயன் என்ன?.அதை எப்படி டெஸ்ட் பன்னனும்?. சொல்லுங்கள் தோழீஸ்.

ஹாய் இனியா,

கருமுட்டை வெளிவரும் நாளைதான் ஓவலேசன் என்று சொல்லுவார்கள். இதை ultrasound scan மூலம் கண்டுபிடிப்பார்க்ள். நாம் ஈரமாக உணர்ந்தால் ஓவலேசன் period என்று தெரிந்துகொள்ளலாம் (or) அடிவயிற்றில் லேசாக வலி இருக்கும். அன்று intercourse வைத்து கொண்டால் கரு உண்டாகும்.

நன்றி ப்ரியா.விளக்கமாக சொன்னீர்கள்.ஆனால் எல்லோருக்கும் கருமுட்டை உருவாக நீங்கள் சொன்னதுபோல் அந்த அறிகுறி தெரியுமா?

எல்லாருக்கும் வலி தெரியாது. சிலபேருக்கு 3 or 4 days white discharge இருக்கும்.

also see http://www.arusuvai.com/tamil/node/17500

நன்றி ப்ரியா.இன்றுதான் அறுசுவையை பார்க்க முடிந்தது.(நெட்வொர்க் சரியாககிடைக்க மாட்டுக்குது)

தோழிகளே வணக்கம் ...எனக்கு பி.சி.ஒ ப்ராப்ளம் இருக்கிறது ..(மாதவிலக்கான முதல் நாளிலிருந்து(D1 to now )நீர்கட்டிகள் குறையவும் ,கரு உருவாகவும் மாத்திரைகள் மருத்துவர் தந்ததை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் ..பின்னர் எனக்கு மாதவிலக்கு ஆன பன்னிரெண்டாவது நாள் ,மருத்துவர் என்னை ஸ்கேன் செய்ய சொல்லி வரசொல்லவே ,அவரை சந்தித்தேன் (புதன்கிழமை ) அன்று .அப்போது கருமுட்டை உருவாகவே இல்லை என்று என் மருத்துவர் ஸ்கேன் செய்து கூறினார் .பின் அன்று ஒரு மாத்திரை(EVALON(Estriol tablet ) எழுதி கொடுத்து அதை போட சொல்லி இருக்கிறார் D18 வரை,அன்று வரவும் சொல்லி இருக்கிறார் .. ...12 வது நாள் முட்டை உருவாகாமல் கூட இருக்குமா ?அப்போது நீர்க்கட்டிகள் இருப்பதையும் எனக்கு ஸ்கேனில் காட்டினார் ..இதனால் என் சந்தேகம் என்னவென்றால் கருமுட்டை பிந்தைய நாட்களில் உருவாக சாத்தியம் இருக்கிறதா ?இது ஏதேனும் பெரிய ப்ராப்ளமா ?தெரிந்தவர்கள் விளக்குங்களேன் தோழிகளே .எனக்கு கொஞ்சம் ஆலோசனை கூறுங்களேன் ..தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் பாரதி கவலைபட வேண்டாம் பா பீசீஓ இருந்தால் ஓவலேசன் சரியா இருக்காது என்பதே எனக்கு மருத்துவர் கூரியது கரு முட்டை வளர்ச்சி அடையாமல் இருப்பதும் இதனால் தான் சினைப்பைய்யை சிஸ் சூழ்ந்து கொள்வதால் இப்படி ஆகின்ரது என் என் மருத்துவர் கூரினார் நீங்கள் பயப்பட வேண்டாம் நார்மலா இருப்பவர்களுக்கு கரு நன்கு வளந்து தானே வந்து கரு உருவாகும் ஆனால் பீசீஓடி இருப்பவர்களுக்கு இது சாத்தியமில்லை அதனால் மாத்திரை மூலம் கருமுட்டை உருவாக செய்து வளர்ச்சி அடைய வைத்து அதை ஸ்கேன் மூலம் உருதி செய்து முட்டை வெளிவர ஊசி அல்லது மாத்திரை கொடுத்து வெளிக்கொண்டுவந்து அன்று மருத்துவர் சொல்வது போல் நடந்தால் கரு உருவாக சாத்தியம் ஆனால் அதனால் நீங்க பயப்பட வேண்டாம் தோழி பாரதி வேரு ஏதாவது சந்தேகம் இருந்தால் மெயிலில் வரவும்

அன்புடன்
ஸ்ரீ

THANK U SRI I COME TO UR MAIL ..MEET U OK

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் ஸ்ரீ எனக்கும் பிசிஓ இருக்கு.ஆனால் எனக்கு கருமுட்டை 18வது நாள் உண்டாகிறது.கருமுட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக டாக்டர் கூறினார்.ஆனால் நான் இன்னும் உண்டகாவில்லை.எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே...

எனக்கு கருமுட்டை உருவாக tablet கொடுத்திருக்காங்க,periods ஆன 3 வது நாள் இருந்து tablet 5 நாள் வர சாப்பிட சொன்னாங்க.3 மாதம் கழிச்சு வரசொல்லி இருக்காங்க.2 மாதம் முடிஞ்சது,pregnent ஆகல,irregular period ஆ இருக்கு,எனக்கு என்ன doubt-னா, எனக்குperiods cycle 32 நாள்,doctor கொடுக்குற tablet-னால ஓவலேசன் (period cycle)28daysla நடக்குமா? 32 daysla(periodcycle) நடக்குமா?(9-16)

தங்களின் வருத்தம் புரிகிரது ஆனால் சில விஷயங்களை இங்கே வெளிப்படயாக பேச முடியாது அதனால் தாங்கள் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு விள்ளக்கம் தருகிரேன் சீக்கிரம் தங்களின் கைய்யில் குழந்தை தவழ வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்