மெகந்தி டிசைன் - 5

தேதி: January 20, 2011

4
Average: 3.9 (24 votes)

 

மெகந்தி கோன்

 

உள்ளங்கையின் கீழ் படத்தில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும்.
அதன் கீழ் மூன்று இதழ்கள் வரையவும். ஒவ்வொரு இதழிலும் உள்ளே மெல்லியதாக நான்கு கோடு வரைந்து மேலே புள்ளி வைக்கவும். நடுவில் உள்ள இதழ்களிலிருந்து இடதுபக்கம் பார்ப்பது போல் ஒரு சிறிய மாங்காய் டிசைனை வரையவும். உள்ளே சின்ன சின்ன வளைவுகள் வரைந்து நிரப்பவும்.
மாங்காய் டிசைனில் சிறிது இடைவெளிவிட்டு ஒரு கொடிப்போல் வரைந்து ஒரங்களில் இரண்டு இலைகள் வரையவும்.
வரைந்த இரண்டாவது இழைகளுக்கு கீழ் ஒரு கொடி வரைந்து மேலே வரைந்த பூ, மாங்காய் டிசைன், இலைகளை வரைந்துக் கொள்ளவும்.
கடைசியாக வரைந்த இழையின் நுனியில் ஒரு வட்டம் வரைந்து அதனை சுற்றி இழை போன்று ஐந்து இதழ்கள் வரைந்துக் கொள்ளவும். உள்ளே மெல்லிய கோடுகள் போல் வரைந்து நிரப்பவும். இடைவெளியில் கொடிகள் போல் வரைந்து விடவும்.
இப்போது உள்ளங்கையில் ஆறு இதழ்கள் கொண்ட பூவொன்றை வரையவும். உள்ளே டிசைன் செய்துக் கொள்ளவும்.
அந்த பூவின் கீழ் இழைகளும், மாங்காய டிசைனும் வரைந்துக் கொள்ளவும். மாங்காய் டிசைனில் உள்ளே ஒரு புள்ளி, அதை சுற்றி ஒரு வட்டம், அதன் மேல் சிறு சிறு வளைவுகள் வரையவும். அதன் மேல் மீண்டும் ஒரு வட்டம் வரையவும். இதே டிசைனை மீண்டும், மீண்டும் வரைந்து முடிக்கவும்.
மீண்டும் மாங்காய் டிசைனும், இலைகளும் ஆள்காட்டிவிரல் பக்கம் வருவதுப்போல் வரைந்துக் கொள்ளவும். இப்போது நான்கு விரல்களும் சேர்த்து வைத்து வளைவு வளைவாக வரையவும். உள்ளே சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும். சிறிது இடைவெளிவிட்டு இதேப்போல் வளைவுகள் வரையவும்.
மாங்காய் டிசைனில் உள்ளே வரைந்ததுப்போல் விரல்கள் அனைத்திற்கும் வரைந்துக்கொள்ளவும்.
அனைவராலும் எளிதாக வரையக்கூடிய சுலபமான மெகந்தி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் சுகி ரொம்ப அழகா இருக்கு உங்களோட மெகந்தி டிசைன். இப்பதான் சுகந்தியோட திறமையெல்லாம் ஒவ்வொன்னா வெளிவருது சமையல், மெகந்தி என்று. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.

ஹை சுகன் ரொம்ப அழகா இருக்குடா. கலக்குற. முதலில் சமையல் அடுத்து மெஹந்தி அப்பறம் என்னடா. ரொம்ப அழகா போட்டு இருக்க. வாழ்த்துக்கள் சுகன்.

டிசைன் ரொம்ப நல்லா இருக்கு சுகந்தி,சுலபமாகவும் இருக்கு.வாழ்த்துக்கள்!

Eat healthy

சுகி

சகலகலா வல்லினு அறுசுவை சார்பா பட்டம் கொடுக்கின்றோம். இன்னும் என்னெனெ வித்தை வெச்சிருக்க கையில சூப்பரப்பூஊஊஊஊஊஊஊஊஊஊ

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுகி அசத்துரப்பா மெஹந்தி டிசைன் ரொம்ப நல்லாருக்குப்பா வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப அழகா இருக்கு சுகந்தி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

டிசைன் வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்கு ரொம்ப நன்றி. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோசமா இருக்கு. தேங்க்ஸ் டு அறுசுவை....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

முதல் ஆளா வந்து பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி மா, உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி....நீ என்ன சொன்ன்னாலும், உனக்கு ஒரு குறை வெச்சுட்டேன். சீக்கரம் அத நிறைவேத்தறேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

யாழினி - உன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மா
ரசியா - உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மஞ்சுளா - நீங்க கொஞ்சம் ஓவர் ஹா புகழ்றீங்களோ...சரி விடுங்க. உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. சமையல்ல உங்கள மிஞ்ச முடியலையே....சின்ன வருத்தம் தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஸ்வர்ணா -உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி பா
ஆமினா- ரொம்ப நன்றி பா...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

your mehandi desin is very nice. i will try your desin on my wedding aniversary.first time i talk with you. iam happy to talk with you .keep it up. thank you. with regards.g.gomathi.

உங்களோட பதிவு நிறைய இடங்கள்ள பாத்து இருக்கு. இப்ப தான் உங்க கூட பேசறேன், அதுவும் நன்றி சொல்ல....கண்டிப்பா நீங்க உங்க கல்யாண நாளுக்கு போட்டுட்டு சொல்லுங்க... பொறுமையா போடுங்க, ரொம்ப ஈஸி ஹ வரும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் எப்படி இருக்கீங்க? எப்படி இப்படி எல்லாம் அசத்துறீங்க? உங்க மெகந்தியும் சூப்பர் உங்க கையும் ரொம்ப சூப்பரா இருக்கு. உங்க அட்ரஸ் கேட்டேன் அனுப்பவே இல்ல. பணம் வேண்டாமா? ராதாஹரி வேற கேட்டு இருக்காங்க சீக்கரம் அனுப்புங்க. நான் மெகந்தி போட்டு ரொம்ப நாளாச்சு. இதை பார்த்ததும் போடனும் போல இருக்கு எங்க பாப்பாவ வைத்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியல. பாப்பா கொஞ்சம் பெரியவளா இருந்தா நடுவில் உள்ள டிசைனாவது போட்டு விடுவேன்:-)

senbagababu

சுகந்தி மிகவும் அருமையாகவும் எளிதாகவும் உள்ளது மெகந்தி டிசைன். வாழ்த்துக்கள்.

செண்பகா நான் தான் முதல்ல கேட்டேன். அதுனால எனக்கு தான் பணம் அனுப்பனும் சொல்லிட்டேன். அட்ரஸ் இதோ இப்பவே மெயில் பண்ணிவிடுறேன். அண்ணாக்கு ஏரியா எல்லாம் சொல்லிருக்கேன். கரெக்ட் அட்ரஸ் இருந்தா தானே பணம் அனுப்ப வசதியா இருக்கும். 100 ருபாய் நோட்டு ஒரு 10 நோட்டு வச்சு அனுப்புங்க. உங்க கவர் தாராளமா தாங்கும்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

செண்பகா பாப்பா தூங்கும்போது போட்டு பார்க்கலாமே .என் பையன தூங்கும்போதுதான் நானும் மெகந்தி போடுவேன்.அதான் சொன்னேன்பா .

சுகிமா கலக்குரடா நான் இப்போதான் மெகந்தி வாங்கினேன் .நீ டிசைன் சொல்லிட நான் போட்டுட்டு சொல்றேன்.ஆனா உன் அளவுக்கு வராது .ட்ரை பண்றேன் .
ராதாஹரி போதுமா பணம் ???ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகி உங்களோட மெகந்தி டிசைன் பார்த்ததும் பிடித்திருந்தது. கையில் போட்டிருந்த மெகந்தி இப்பதான் மெல்ல மறையது. அப்புறம்தான் உங்களோட மெகந்திய போட்டு பார்க்கனும். என்ன குறை வைச்சிட்டீங்க எனக்கு. எனக்கு ஒன்னும் தோணலையே. யாரும் சமைக்கலாம், கைவினை பகுதில உங்களோட குறிப்பு வருவது சந்தோஷமா இருக்கு. நேரம் கிடைக்கும் போது பொறுமையா செய்து அனுப்புங்க.

எங்கங்க போனிங்க உங்கள எங்க எல்லாம் தேடுறது. இப்போதான் உங்களுக்கு மெயில் அனுப்பிட்டு பார்க்கிறேன், நீங்க எனக்கு பதிவு போட்டு இருக்கீங்க. உங்களுக்கு பணம் இன்னும் வரலையா. பாபுவிட்டு அனுப்ப சொல்லிட்டேனே. வாசலில் போய் பாருங்க. கவர் ஒண்ணு வந்திருக்கும். //100 ருபாய் நோட்டு ஒரு 10 நோட்டு வச்சு அனுப்புங்க. உங்க கவர் தாராளமா தாங்கும்....// 10 போதுமாங்க:-)

senbagababu

அட வாசல்ல தான் சொருகி வச்சிருக்காங்க. நான் தான் பாக்கல..

இருங்க பாத்துட்டு சொல்றேன்.... அச்சச்சோ செண்பகா.. என்ன இது பகல் கொள்ளை. நான் 10 நோட்டு வச்சு அனுப்புங்கனு சொன்னா.. அதுல 1 நோட்டு கூட கண்ணுல தட்டுப்பட மாட்டேங்குது..

கவர மட்டும் அனுப்பி வச்சு இப்படி எல்லாம் ஏமாத்தக்கூடாது ஆமா சொல்லிப்புட்டேன். நவினாக்குட்டி உங்க அப்பாவும் அம்மாவும் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாரு.

செண்பகா மெயில் பண்ணிருக்கேன் உங்களுக்கு டைம் இருந்தா பாருங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீங்க எனக்கு பதிவு போடறது இது தான் முதல் முறை, ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. பாப்பாவ வெச்சுட்டு நீங்க கிராப்ட் வெளுத்து கட்றீங்க... உங்களுக்கு இணை நீங்க மட்டுமே...சீக்கரம் மெஹந்தி லையும் களத்துல குதிங்க.....

நீங்க சொன்ன பின்னாடி தான் நீங்க போட்ட பதிவு பாத்தேன், அடடா இப்பவே அட்ரஸ் அனுப்பறேன். கொஞ்சம் பாத்து அனுப்புங்க.நான் ராதாக்கா மாதிரி 10 நோட்டு எல்லாம் கேட்க்க மாட்டேன். அந்த படத்துல இருந்த நம்பர் கூட ஒரு ரெண்டு ௦,0 சேத்தி, 5 நோட் மட்டும் அனுப்புங்க. அது போதும்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ராதா அக்கா - உங்க பாராட்டு க்கு ரொம்ப நன்றி, உங்களுக்கு செண்பக அண்ணி அனுப்புன கொரியர் வந்துடுச்சா... என்னையும் கொஞ்சம் கவனிங்க...

அஸ்வதா - இது ரொம்ப ஈஸி மா, கண்டிப்பா நீங்க ட்ரை பண்ணுங்க...வாழ்த்துக்கு நன்றி மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்களுக்கு ஒரு குறைன்னு சொன்னது, கிராப்ட் தான் பா. நீங்க அத தான் கேட்டுகிட்டே இருந்தீங்க... அத நான் இன்னும் அனுப்பல. அத தான் அப்படி சொன்னேன் டா. சீக்கரம அதையும் பண்ணி அனுப்பிடறேன்..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி உங்க அண்ணி அனுப்பன கொரியர் வந்துச்சு ஆனா அதுல பணம் தான் இல்ல...

சுகந்தி அது என்ன ராதாக்கா மாதிரி 10 நோட்டு எல்லாம் கேக்க மாட்டேன் 10000 ருபாய் மட்டும் 5 அனுப்ப சொல்லிருக்கீங்க..

உங்க அண்ணி பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்கள்ளாம் விவரமான ஆளு... அந்த ருபாய் நோட்டக்கூட எதாவது சாதா பேப்பர்ல ஜமிக்கி எல்லாம் ஒட்டி அழகான பளிச் பளிச் ருபாய் நோட்டா க்ராஃப்ட் ஒர்க் பண்ணி அனுப்பிடுவோம்ல.. நாங்கள்லாம் வெறும் கொரியர் அனுப்பியே 500 ருபாய் அனுப்பினோம்னு சொல்ற ஆளு. நாங்களாவது 50 000 ருபாய் அனுப்பறதாவது.. யாரப்பாத்து என்ன ஒரு கேள்வி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சுகந்தி உங்க மெகந்தி டிசைன் அழகா இருக்குப்பா வாழ்த்துக்கள்....

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி !!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஒரு சின்ன தப்பு நடந்து போய்டுச்சு, ஒரு 0 செத்திகோங்கன்னு சொல்ரக்கு, ரெண்டுன்னு சொல்லிட்டேன்.....10000 நோட்டுக்கு எங்க போறது? அட்மின் அண்ணா தான் பிரிண்ட் பண்ணனும்...அஹ்ஹா

//ராதாக்கா மாதிரி 10 நோட்டு எல்லாம் கேக்க மாட்டேன் 10000 ருபாய் மட்டும் 5 அனுப்ப சொல்லிருக்கீங்க..//// வேற ஒன்னும் இல்ல, 10 நோட்டு னா நிறைய இருக்குனு நினச்சுபங்க இல்ல, அதான் கம்மியா 5 நோட்டு கேட்டேன். வர வரைக்கும் லாபம் தான!!!

//ருபாய் நோட்டக்கூட எதாவது சாதா பேப்பர்ல ஜமிக்கி எல்லாம் ஒட்டி அழகான பளிச் பளிச் ருபாய் நோட்டா க்ராஃப்ட் ஒர்க் பண்ணி அனுப்பிடுவோம்ல../// நூத்துல ஒரு வார்த்தை.....நானும் இதை ஆமோதிக்கறேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

டிசைன் ரொம்ப நல்லா இருக்கு,சுலபமாகவும் இருக்கு.வாழ்த்துக்கள்

super

உங்கள் டிஸைன் சூப்பரா இருக்கு ...ரொம்ப தெளிவான படங்கள் அருமை ..மேலும் டிஸைன்கள் அனுப்புங்கள் எதிர் பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

கவி, ரித்தின பிரியா
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி....

ருக்சனா - உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. இன்னும் நிறைய டிசைன் கண்டிப்பா அனுப்பறேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

i tried your mehandi desin today. it came out very well. thank you very much .with regards.g.gomathi.

ஆஹா... சுகந்தி.... இத்தனை அழகான கைகள், அதில் எத்தனை அழகான ஹென்னா.....!!!! அசத்திட்டீங்க. ரொம்ப அழகு. சிம்பிள் & சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி பா, உங்க பின்னூட்டம் இப்ப தான் பாத்தேன், நீங்களே பாராடீங்களா?? ரொம்ப சந்தோசம் போங்க
//இத்தனை அழகான கைகள்,////////// முடியல, ஓட்டரக்கு அளவே இல்லையா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

டிசைன் சுப்பர் சுகந்திக்கா. ;)
இங்க என்ன ஆன்லைன் பிஸ்னஸ் நடக்குதா? நடத்துங்க நடத்துங்க. இமா கையை நீட்றதுக்கு நீங்கதான் பணம் கொடுக்கணும். ஃபளைட் டிக்கட் வாங்கணும்ல. ;)

‍- இமா க்றிஸ்

என்னைய போய் அக்கான்னு சொல்லீடீங்களே....
என்ன கொடுமை இமா....
இமா இந்தியா வரும் போது போட்டு விட்டுடலாம்...செலவே இருக்காது இல்ல....உங்க வாழ்த்துக்கு நன்றி மா.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

MAM PICTURE AMASING