முகம் வெள்ளையாக மாற!

முகப்பொலிவுக்கு டிப்ஸ் தாருங்கள்.

ஹாய் ரஷியா உங்களுக்கு முகம் மட்டும் கருத்து காணப்படுகிரதா?

ஆமாம் ஜைனுல்,கழுத்திலிருந்து கலராக இருக்கு,முகம் மட்டும் தான் அப்படி இருக்கு,மேக்கப் போட்டால் இன்னும் கருப்பாக காட்டுகிறது.

Eat healthy

hai rasia
பழ பேஷியல்
முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

எனக்காக உங்க நேரத்தை ஒதுக்கி இவ்வளவு டிப்ஸ்களையும் கொடுத்திருக்கீங்க,அதற்கு உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது,தொடர்ந்து இதை செய்து வருகிறேன் இன்ஷா அல்லாஹ்!ஆனால் பப்பாளி,பூவன் வாழைப்பழம்,குங்குமாதி தைலம்,சந்தனம் போன்ற பொருள்கள் ப்ரான்ஸில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்,இருந்தாலும் மீதிப் பொருள்களை வைத்து செய்து பார்க்கின்றேன்,நீங்க பியூட்டிஷியனா?மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு ஏற்ற மேக்கப் மற்றும் க்ரீம் பற்றி சொல்ல முடியுமா?

Eat healthy

அஸ்ஸலாமு அலைக்கும் ரஷியா நலமா நான் பியூட்டிஷியனெல்லாம் இல்லப்பா ஏதோ எனக்கு தெரிந்ததை நான் எனக்கு செய்வதை உங்களுக்கு சொன்னேன் அவ்வளவுதான் இதற்க்கு போய் நன்றியெல்லாம் எதற்கு தோழி

நட்புடன்
ஜெய்னுல்

எனக்கும் இது தான் ப்ரொப்ளெம்.எனக்கு கடைல என்ன காஸ்மெடிக் செலெக்ட் பண்றதுனு தெரியாம எதாவது வாங்குவேன்.எனக்கும் ஹெல்ப் பன்னுங்க பா.எனக்கு முகத்துல பிம்புல் மார்க்ஸ் இருக்கு

முக பருவிர்கு வெல்லரி மிகவும் நல்லது...வெல்லரி பழத்தை மசித்து முகதில் பொடவும்...பரு குரையும்...

safinamubarak

சலாம் ரஷியா
வைட்டமின் மாத்திரைகளை வாங்கி அதனுள் இருக்கும் எண்ணையை எடுத்து அதனுடன் சிறிது பாதாம்பருப்பு பேஸ்ட். ஆலிவ் ஆயில் கலந்து இரவில் முக சுருக்கங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் ஓரிரு நாட்களிலேயே வியக்கதக்க சிகப்பழகை பெறலாம். இது ஒரு அனுபவ பூர்வமான உண்மை ட்ரைப் பண்ணிபார்த்து விட்டு சொல்லுங்கள்

நட்புடன்
ஜெய்னுல்

நன்றீ safina .நாளைக்கு ட்ர்ய் பண்ணிட்டு ரிசெல்ட் சொல்றேன்

தோழிகளே எனக்கு பச்ச மஞ்சள் உள்ளது அதை எப்படி உபயோகிப்பது என்று சொல்லுங்களேன் ப்ளிஸ்ஸ்

மேலும் சில பதிவுகள்