என் பழைய அருசுவை அக்காமார்கள்,ஒரு மாமி,அனைத்து தோழிகளையும் தேடி இந்த இழை!!!

அனைவரும் நலமா?உங்களிடம் பேசி வருடங்கள் மாசங்கள் ஆகின்றது..எனக்கு தெரிஞ்சு இப்பொழுது பழைய உருப்பினர்கள் பலர் இப்பொழுது வருவது இல்லை என நினைக்கிரேன்....புதிய அருசுவையை பார்த்தால் அருசுவை மட்டும் இல்லை தோழிகளும் புதியவர்களே பழைய நண்பிகள் யாரேனும் இருக்கின்றீர்களா? அருசுவையின் புதிய தோழிகள் அனைவரும் நலமா?வாங்க பழகலாம்...முன்பு சமீபத்திய பதிவு என இருக்கும் இப்பொழுது அது இல்லை எனது பழைய பதிவை எங்கே போய் பார்க்க?சொல்லுங்கப்பா மண்டை காயுது...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கு :)

நீங்க சொன்னது எங்களுக்கு தெரியாதுன்னு மட்டும் நினைக்காதீங்க .நீங்க டைப் பண்ணும்போதே எங்களுக்கு தெரிஞ்சுடுமே!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தலைப்பை பார்த்ததும் நினைச்சேன் நீங்களா தான் இருப்பீங்கன்னு. ஆனா முதல்ல இங்க உங்களுக்கு யாரெல்லாம் அக்கா, யாரெல்லாம் தோழிகள்னு சொன்னாதான் நான் வருவேன். இல்லையின்னா வனிதா சொல்றது போல ஒளிஞ்சி நின்னு பார்த்திட்டு போய்டுவேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

முதல் முறையா உங்க கிட்ட இப்ப தான் பேசறேன், நான் அறுசுவை ல உங்க பதிவு நிறையா பாத்து இருக்கேன், படுச்சும் இருக்கேன். நீங்க தான் ரொம்பநாளா காணாம போய்டீங்க, புது அறுசுவைல ////முன்பு சமீபத்திய பதிவு என இருக்கும் இப்பொழுது அது இல்லை எனது பழைய பதிவை எங்கே போய் பார்க்க?//////// இந்த வழி இல்லை, எல்லாரும் இந்த முறை மறுபடியும் வரணும்ன்னு அட்மின் அண்ணா கிட்ட சொல்லி இருக்கோம். சிகரமே வந்து விடும்ன்னு நினைக்கறேன். அது வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் உங்க கிட்ட பேசரது இப்ப தான் முதல் முறை பா நீங்க உங்கள் குடும்பத்தினர் எல்லாரும் எப்படி இருக்கீங்க பா அப்பரம் குட்டீஸ் இருக்காங்க அப்படின்னு சொல்லிருக்கீங்க அவங்க எப்படி இருக்காங்க உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் அதுவும் குட்டீஸ் பாத்துகரது பெரிய வேலை நடுவில் அருசுவை தோழிகளுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி வர பார்க்கவும் நான் அருசுவைக்கு புதியவள்

அன்புடன்
ஸ்ரீ

வாமாம்மா மின்னல் யாரது மர்லியா , வந்தது, அதான் இங்கு துபாய் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது,
நலமா இருக்கீங்கலா? பிள்ளைகள் நலமா?
ஜலீலா

Jaleelakamal

ஹாய் தோழி மர்ழி நான் அறுசுவைன் பழியைய உறுப்பினர் நான் உங்க கூட பேசி இருக்கேன். இப்படி எல்லாம் சொல்ல ஆசை தான் ஆனால் நான் சொல்ல முடியாது. ஏன் தெரியுமா? நாம் அறுசுவைக்கு புதியவள்.ஹிஹிஹி

நீங்க நலமா?

உன்னை போல பிறரையும் நேசி.

கல்பனா எப்படியோப்பா என் பழைய பதிவை படிச்சும் கூட என்னை நல்லாவான்னு சொல்லிபுட்டீங்களே அதர்க்கு ப்ரிய தேங்ஸ்சுங்கோ..
ஹேய் உமா எபப்டி இருக்கீங்க?பையன் நலமா?சமத்தா இல்லை உமா போலவா?அய்யய்யோ என்னத்த சொல்ல என் பையன் குறுப்பு தாங்கலப்பா..நான் ஒவ்வொருத்தங்களையா லிஸ்ட் போடும் அளவுக்கு இவன் பொறுமையா இருக்கவே மாட்டானே! இப்ப கூட பாருங்க கடுப்பாகிட்டே இருக்கான் மடியில உட்கார்ந்து ஓட போறேன்...
அப்பாடா சுகந்தி பாருங்க என் கேள்வுக்கு யாருமே பதில் சொல்லல்ல உங்களை தவிர தேங்ஸ்ப்பா,இல்லைனா அதை இன்னும் தேடிட்டேதான் இருப்பேன் ஆமாம் சுகந்தி பிள்ளை குட்டி காரியா போயிட்டேன் அதான் வர முடியிரதில்லை :D
மிஸஸ் கதிர்,நாங்க எல்லோருமே நலம் நீங்க மற்றும் உங்க குடும்பத்தில் எல்லோரும் நலமா?அப்பப்ப வர முயர்ச்சிக்கிறேன் :)
ஹைய்யோடா அக்கா உங்க பணி தொடருதா சூப்பர் அக்காதான் நீங்க!சென்னை வாங்கக்கா பனி கொட்டுது அடுத்த விசிட் எப்ப?
டியர் தேவி நான் நலம் அம்மணி நலமா?உங்க பதிவை படிச்சு சிரிச்சுட்டேன் வாங்க பழகிக்கலாம் ஹா ஹா

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி வணக்கம் நலமா? இன்னக்கி எப்படி பையன் விட்டான் எங்க அவரு உங்க பொண்ணு நல்லா இருக்காளா. உங்களை போலவே மற்ற பழைய அறுசுவை தோழிகளும் வந்துட்டாங்கனா எவ்வளவு நல்லா இருக்கும் அறுசுவை. நீங்க தான் எல்லாரையும் கூட்டிட்டு வரணும். அறுசுவைய புதுப்பிக்கனும். உங்க பதிவுகள் எல்லாம் படிச்சிருக்கேன் உங்கள் குறிப்புகள் எல்லாம் யாரும் சமைக்கலம்ல பார்த்திருக்கேன். வாங்கோ சீக்கிரம் அதே போல ஒரு பொலிவோடு பார்க்கலாம்

மர்ழியா

நீங்க தானே உங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க சொல்லி இழை திறந்த தோழி?? பழைய இழை பார்க்கும் போது கண்ணில் மாட்டியது.. என்ன பெயர் வச்சீங்க 2 வது குழந்தைக்கு?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மர்ழி எப்படி இருக்கீங்க? குழந்தைகள் என்ன பண்றாங்க? பையனுக்கு 2 பர்த்டே வருதா என்ன பிளான் பண்ணியிருக்கீங்க? அர்ஜுனோட பர்த்டே அப்பெல்லாம் நான் உங்க பையனை கண்டிப்பா நினைச்சிப்பேன். உங்க குட்டி சார் என் பையனை முந்திக்கிட்டு பிறந்தவராச்சே.

நான் உங்க பதிவை காணோம்னதும் சரி இந்த பதிவையும் தொலைச்சிட்டாங்க போலன்னு நினைச்சிட்டேன். பையன் தானே என்னை போல நல்லவனா இருப்பான்னு பார்த்தா சேட்டை அப்பப்....பா. அவன் கிட்ட நீ குட் பாயா என்னன்னு கேட்டாலே இல்லை நான் பேட் பாய் ரொம்ப கெட்டவன்னு தான் சொல்வான். பக்கத்தில் பிள்ளைகள் இவனை கெட்டவனேன்னு பயங்கர கேலி பண்ணுங்க. ஏன்னா எல்லாரையும் (அவங்க அப்பாவை கூட) கெட்டவன்னு தான் சொல்வான். அம்மா மட்டும் நல்லவளாம் (பாருங்க என் பிள்ளைக்கு கூட தெரிஞ்சிருக்கு).

அப்புறம் பழகாலாம்னு அரட்டை பக்கம் போயிடாதீங்க. அப்பல்லாம் அவங்கவங்க டைம் கிடைக்கும் போது வந்து பதில் பதிவு போட்டுட்டு போவோம். இப்ப மக்கள் கேள்வி கேட்பாங்க. நாம பொறுப்பா பதில் சொன்னா ஆன்லைன்ல இருந்தா மட்டும் தான் பதில்போடுவாங்க. இல்லைன்னா மறுநாள் அதை பார்ப்பாங்களா இல்லையான்னு கூட தெரியாது. ஆனா கண்டிப்பா பதில் இருக்காது. (இப்படிக்கு - அரட்டை பக்கம் தலையே காட்டக்கூடாதுன்னு முடிவெடுத்தவர்கள் சங்கம்).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்