என் பழைய அருசுவை அக்காமார்கள்,ஒரு மாமி,அனைத்து தோழிகளையும் தேடி இந்த இழை!!!

அனைவரும் நலமா?உங்களிடம் பேசி வருடங்கள் மாசங்கள் ஆகின்றது..எனக்கு தெரிஞ்சு இப்பொழுது பழைய உருப்பினர்கள் பலர் இப்பொழுது வருவது இல்லை என நினைக்கிரேன்....புதிய அருசுவையை பார்த்தால் அருசுவை மட்டும் இல்லை தோழிகளும் புதியவர்களே பழைய நண்பிகள் யாரேனும் இருக்கின்றீர்களா? அருசுவையின் புதிய தோழிகள் அனைவரும் நலமா?வாங்க பழகலாம்...முன்பு சமீபத்திய பதிவு என இருக்கும் இப்பொழுது அது இல்லை எனது பழைய பதிவை எங்கே போய் பார்க்க?சொல்லுங்கப்பா மண்டை காயுது...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கு :)

\\\\\\இல்லைன்னா மறுநாள் அதை பார்ப்பாங்களா இல்லையான்னு கூட தெரியாது. ஆனா கண்டிப்பா பதில் இருக்காது.///////
என்னபா பன்ரது இன்னைக்கு அரட்டை பத்து போய்ட்ருந்தா அதுல கேள்வி கேட்ருந்தா நாளைக்கு அரட்டை 12 அல்லது 13 கூட ஆரம்பிச்சிடராங்க அதுல எங்க எப்போ கேள்வி கேட்டது பதில் போட்டத பாக்கர்துக்குள்ள இவங்க 15 20 துன்னு போய்டராங்க பா

அன்புடன்
ஸ்ரீ

ஆமாம் பா நான் கூட பார்த்து இருக்கிறேன் எனக்குள் ஒரு சந்தேகமும் கூட ஒரு அரட்டைன்னு ஆரம்பிச்ச எத்தனை பக்கம் வரை போவாங்க ..டெய்லி ஒரு அரட்டைன்னு 10,11,12,13 நு போய்கிட்டே இருக்கங்களே எல்லோரம் இஷ்டத்துக்கு ஓபன் பண்ணலாமா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

யழினிமுகில் நலமா டிப்ரண்டான செந்தமிழ் பெயர் நல்லா இருக்கு...அன்பான விசாரனைக்கு தேங்ஸ்மா நான் நலம்...நீங்கள் நலமா?எங்கேப்பா எல்லாம் தனி குடித்தனம் போகிட்டாங்க :) பார்கலாம் இன்னும் யாரெல்லாம் வாராங்கன்னு.... டியர் ஆமினா அஸ்ஸலாமுஅலைக்கும் எப்படி இருக்கீங்க?அதே அதே அதே மர்ழியாதான் என் பையனுக்கு அப்துல் காதர் அஷ்ஃபாக் ன்னு பெயர் வைத்து இருக்கேன் நல்லா இருக்கா? :)சும்மா சொல்லகூடாது உங்க புரொபைல் அருமை போங்க ஹா ஹா உமா நானும் அப்பப்ப உங்க மகனை நினைப்பது உண்டு...அர்ஜூன் அட்டகாசம் ரொம்ப சூப்பர் மனசுக்கு நிம்மதியா இருக்கு இவன் மட்டும்தான் இப்படின்னு இருந்தேன் அங்கே பார்த்தா தளிகா பையனும் செம ஆட்டம் இப்ப நீங்களும் ஹையா ஹையா குதிக்கலாம் போல இருக்கு உமாக்கு பிரஷர் ஏறும் முன் மர்ழி கலண்டுக்க :D எனக்கு எங்கேப்பா அரட்டையை முதலில் நாந்தான் ஆரம்பிச்சேன் இப்ப அதுக்கு போய் எட்டி கூட பார்க்க முடியல எப்படியோ நான் ஆரம்பிச்சது இன்னும் பிரேக் டவுன் ஆகாம ஓடிட்டு இருக்கே அது போதும் போய் பார்கவே டைம் இல்லை இதுல எங்கே பதிவு போட :):)

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி,
எப்படி இருக்கிங்க? குழந்தைங்க எப்படி இருக்காங்க? உங்களை அறுசுவையில் பார்த்தே ரொம்ப நாளாச்சே?! அதுக்கு பதிலும் நீங்களே சொல்லிட்டிங்க.. குட்டி பையன் சேட்டை ரொம்ப ஜாஸ்தி போல! ஆனா, ஒண்ணு சொல்லட்டுமா? அடிக்கக்கூடாது. : ) குழந்தைங்கன்னா குறும்பு பண்ணனும், அப்பதான் ஒரு ஜாலியே. இதையே நான் என் திருமணத்திற்கு முன் என் சித்தியிடம் எல்லாம் சொல்லி, இரு இரு உனக்கு கல்யாணமாகி குழந்தைகங்க பிறக்கட்டும், அப்ப என்ன சொல்ரேன்னு பார்க்கறேன்னு சொல்வாங்க. அதே மாதிரி, பர்ஸ்ட் பொண்னு, அவ குறும்பு எல்லாம் ரொம்ப பண்ண மாட்டா, அடுத்து என் பையனோட கம்பேர் பண்ணரச்சே... அது என்னமோ பையனுக்களுக்கே ஒரு ஸ்பெஷல் திறமைப்போல... ஆனாலும் நான் அவனோட எல்லா சேட்டையும் ரொம்ப ரசிப்பேன்! அதெல்லாம் ஒரு ப்ரியட்தான்! அதனால் எஞ்ஜாய் பண்ணுங்க... (சரி, சரி, குறும்புக்கார பிள்ளைகளின் அம்மாக்கள் எல்லாம், பல்லை நற நறன்னு கடிக்கிற சத்தம் கேட்குது...) ஒகே, அப்ப நான் எஸ்கேப்! : )

அன்புடன்
சுஸ்ரீ

how r u? howz ur kids?
i spoke with u long time back,i think when ur 2 kid was born.
regards
jayanthivinay

வாம்மா மர்ழி,ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க.மரியாதையா மீண்டும் பழைய படி தினமும் ஆஜராகி,ஒளிந்திருந்து அறுசுவையை படிப்பவர்களை எல்லாம் பழைய படி அறுசுவைக்குள் கொண்டு வந்துடுங்க.சும்மா வீட்டில் உட்கார்ந்து ஓசி சவர்மாவை கட்டு கட்டிக்கொண்டு இராமல் தினமும் ஒரு ஐம்பது பதிவாவது போடுங்க.ஒகேவா?

arusuvai is a wonderful website

enaku help panuga. baby kids story,rhymes yepadi download pananaum. website yanaku sollunga. pls

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

சுஸ்ரீ எப்படிப்பா இருக்கீங்க ரொம்ப சந்தோசம் உங்க பதிவை பார்த்து...ஆமாம் சுஸ்ரீ குழந்தைகள் குறும்பு சுகமான சுமைகள் வயிற்றுல் இருக்கும் போதும் சரி மழலை பேசுறப்ப கை,கால் அசைத்து பார்ப்பது,பிஞ்சு கையால் நம்மை தொடுவது இப்படி சொல்லிட்டே போகலாம்....முன்பு நேரம் இருக்கும் இப்ப சுத்தம் அதும் என் 2 ஆவது பையன் இருக்கானே குறும்புதனத்தில் வெளுத்து கட்டுறான் என்னை...வீடியோ எடுத்துட்டேதான் இருக்கேன்..யாரும் உங்களை அடிக்க வர மாட்டாங்க.... எல்லோருக்கும் அவங்கவங்க குழந்தை சுகம் தான் அப்படிதானெ அம்மா அம்மம்மா மார்களே அப்பாலே என்னை நடு ரோட்டுல உட்டுறாதீங்கோ இல்லை ன்னு சொல்லி.... ஹாய் ஜெயந்தி அனைவரும் நலமே நீங்கள் நலமா உங்க அன்பான பதிவிற்க்கு தேங்ஸ்மா........ அட பாருங்க்கப்பா நான் பாட்டுக்கு சும்மா இருந்தாலும் ஷாதிக்கா லாத்தா விட மாட்டாங்க போல இருக்கு புது தோழிகளிடம் நல்ல பெயர் வாங்க விடமாட்டிங்களா?? முதல்ல என் புரொபைல்ல மாற்றனும்....பேஸ் புக் ல இருந்து இதுல வரைக்கும் என் மானம் போகுது ஷவர்மான்ன பெயரில் எப்பவோ போட்டதிற்க்கு இப்படி பழிவாங்க கூடாது உங்களாலதான் இப்ப ஆசையே போய்ட்டு :( கண்டிப்பா 50 இல்லை 500 பதிவு போடறேன் என் பிள்ளைகளை கவனிக்க இங்கே வந்துட்டீங்கன்னா நான் ரெடி நீங்க ரெடியா???? kirbalini முன்பு இதில் இது பற்றி பகிர்ந்துள்ளோம் குழந்தைகள் இணைய தளம் என்ற தலைப்பில் இருக்கும் போய் பாருங்க எல்லாமே அதில் இருக்கும்

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா...,மறுபடியும் அறுசுவையை தேடி ஓட்டோடி வந்திருக்கும் உங்களை நாங்கள் அனைவரும் வரவேற்க்கின்றோம்.
வந்ததோடு எல்லோரையும் அன்போடு கூப்பீட்டு பேசுறீங்களே.... யாரும் வராமல் இருப்பாங்களா என்ன....
ம்ம்ம்...ஆரம்பம் ஆகட்டும் மர்ழியின் பொன்னான எழுத்துக்கள்,பேச்சுக்கள்...
(என்னை உங்களுக்கு நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன்... இல்லையென்றால் இப்போது புதுபித்து கொள்ளுங்கள் சரியா....)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மர்ழி ஏன் ஏன் இப்படி?!!! அவன் ப்ரஷர் ஏத்துறது பத்தாதா?

ஹாய் சுஸ்ரீ எப்படி இருக்கீங்க? ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு. ரசிக்கிறதா எதை. நேத்து தண்ணி குடத்தை கழுவி வச்சிருக்கிருக்கேன். அதில் இருந்த கொஞ்ச தண்ணியை தலையில் ஊத்திக்கிட்டு அம்மா தலைக்கு குழிச்சிட்டேன்னான் பார்க்கனும் ரெண்டு மொத்து மொத்திட்டு தான் துடைச்சேன். சும்மாவே எப்ப பார்த்தாலும் சளி. இப்ப புது விளையாட்டு ஸ்டவை ஆன் பண்ணிட்டு அம்மா ஃப்ளேம் வரலைன்றான். எனக்கு பக்குன்னு போச்சு. நல்ல வேளை கீழே ஆப் பண்ணியிருந்தேன். இப்போல்லாம் நல்லா கவனமா பார்த்திட்டு தான் ஆன் பண்ணுறேன். மர்ழியும் நானும் முதல்ல புலம்புவோம். இப்போ அதுக்கு கூட டைம் இல்லை. இதில நாங்கெல்லாம் எங்கிட்டிருந்து எஞ்ஜாய் பண்றது. நீங்க எஸ்கேப் ஆனாலும் நான் துறத்துவேன் ஆமா.

(ஆனாலும் அவன் தூங்கும் போது ஏன் குழந்தையை அடிச்சேன்னு அழுவேன். அவன் செஞ்ச சேட்டையை அவர்கிட்ட சொல்லி சிரிப்பேன். நாளையில் இருந்து அவனை அடிக்கவே கூடாதுன்னு நினைச்சுப்பேன். காலையில் எழுந்ததும் பால் குடிக்க கீழ விழுந்து அழுவான். என்னை அறியாம ஒரு போடு காலில் போடுவேன்).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்