என் பழைய அருசுவை அக்காமார்கள்,ஒரு மாமி,அனைத்து தோழிகளையும் தேடி இந்த இழை!!!

அனைவரும் நலமா?உங்களிடம் பேசி வருடங்கள் மாசங்கள் ஆகின்றது..எனக்கு தெரிஞ்சு இப்பொழுது பழைய உருப்பினர்கள் பலர் இப்பொழுது வருவது இல்லை என நினைக்கிரேன்....புதிய அருசுவையை பார்த்தால் அருசுவை மட்டும் இல்லை தோழிகளும் புதியவர்களே பழைய நண்பிகள் யாரேனும் இருக்கின்றீர்களா? அருசுவையின் புதிய தோழிகள் அனைவரும் நலமா?வாங்க பழகலாம்...முன்பு சமீபத்திய பதிவு என இருக்கும் இப்பொழுது அது இல்லை எனது பழைய பதிவை எங்கே போய் பார்க்க?சொல்லுங்கப்பா மண்டை காயுது...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கு :)

உமா ஒன்னை வைத்துட்டே இப்படியா இன்னும் பல பலபல பலபலபலபலபல பெறனுமே :D சுஸ்ரீ சொல்லுவது சில டைமில் சரிதான் உமா பாருங்க ரொம்ப அறிவு பூர்வமாகலாம் செய்வாங்க ரசிக்கும்படி இருக்கும்...ஆனாலும் அவங்க நம்மை வெளுத்துகட்டுவது அதிகமே சுஸ்ரீ இன்னும் 5,6 பெற்றெடுக்க நான அதிகம் பிரே பண்ணிக்கலாம் அப்பதான் ரொம்ப பேசுறதை அடக்கிகுவாங்க :D :)

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ மர்ழி அக்கா,

எப்படியிருக்கீங்க? குட்டீஸ்கள் என்ன செய்கிறார்கள்?

ரொம்ப நாளா அறுசுவைபக்கம் வருவதேயில்லை ரொம்ப பிஸியா? நான் கேட்க மாட்டேன்.

என்றும் அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹலோ உமா & மர்ழி,

யாருப்பா அது? என் மேல இவ்வளவு பிரியமா இருக்கிறது?!
என்ன‌ மர்ழி, எனக்கு 5,6 பிறக்கனுமா?! போதுமா?!! :) பரவாயில்லை, 10,15 என்று சொல்லாமல் விட்டிங்களே! :D )

எனக்கு சின்ன வயசிலேயே, குட்டி குழந்தைங்க கூட இருப்பது, விளையாடுவது என்றால் எப்பவுமே ஒரு அலாதி ப்ரியம் மர்ழி. என் சித்திக்கு அடுத்தடுத்து ஒரு வருட இடைவெளியில் இரண்டு ஆண் குழந்தைங்க. இரண்டும் சரியான வாலு. பாவம் சித்தி, இரண்டாவது பிரசவம் வேறு ஆபரேஷன் செய்து வந்து ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அதனால் முதல் பையன் ரொம்ப நாள் எங்க வீட்டிலதான் இருந்தான். அம்மா, சித்திக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு, இப்படி கொண்டு வந்து வைச்சிருந்தாங்க. அதனால எனக்கு அவனோட ரொம்ப ஒட்டுதல். என்னோட சின்ன வயசில என்னோடதான் ஸ்கூல் வருவான், என்கூடத்தான் சாப்பிடுவான். அதனால எப்பவும் நான் அவனோட குறும்புக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிட்டே இருப்பேன். அப்பதான் என் சித்தி விளையாட்டுக்கு, அப்படி சொன்னாங்க. இரு, இரு உனக்கு குழந்தை வந்து அது வால்தனம் பண்ணும்போது பார்த்துக்கிறேன் என்று!. :) அப்புற‌ம் என்னோட இன்னொரு சித்திக்கு, நான் ப்ள‌ஸ் ஒன் படிக்கும்போது இரண்டாவது ஒரு குட்டி பாப்பா பிறந்தது. பாப்பாவை குளிப்பாட்டி என் கையிலே கொடுத்து விடுவாங்க என் சித்தி. அப்புறம் அதுக்கு பவுடர் போட்டு, பொட்டு வைத்து, அதை தூளியிலே போட்டு ஆட்டி தூங்கவைப்பது எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டமான வேலையா இருக்கும்!

அப்புறம் உமா, உங்க செல்ல மகனோட வால்தனம் பற்றி எழுதி இருந்திங்க. ரொம்ப குறும்புதான் போங்க! அவங்க அப்படி பண்ணும்போது கடுப்பாதான் வரும். அப்பப்ப கொஞ்சம் கோவம் வந்தாலும் அப்புறம் இப்ப‌டி நினைச்சுக்குவேன். சே, இதெல்லாம், ஒரு வயது வரைதானே. அப்புறம் நம்ம பண்ண சொன்னாலும் பண்ணுவாங்களா என்று! ஆனால் ஒன்று, எனக்கு எவ்வளவு கோவம் வந்தாலும், அப்படி பண்ணாதே என்று கொஞ்சம் அதட்டி சொல்வேனே தவிர அடிக்கவே மாட்டேன். மனசே வராதுப்பா. நீங்க சொன்னமாதிரிதான், திட்டிட்டு அப்புறம் அதுக்கே உட்கார்ந்து ஃபீல் பண்ணுவேன்! என் ப்ரண்ட்ஸ், மாமியார் எல்லாம்கூட‌ சொல்வாங்க ரொம்பதான் பொறுமை உனக்கு என்று. (ம்ம்...ம்ம் , ஆனால், இப்பப்பதான் எனக்கு நிறைய கோபம் வரமாதிரி இருக்கு :( அப்ப இருந்த பொறுமை எல்லாம் குறைஞ்சிடுச்சிபோல என்று எனக்குள் நானே நினைத்து, மாத்திக்கனும் என்று நினைச்சுக்கிறேன்.)

சின்ன வயசில, கோவில்ல இருக்கும் தீபத்தில் விரலை வைத்து சுட்டுக்கொண்டது, கிண்டர்கார்டன் படிக்கும்போது, ஆர்ட் வொர்க் பண்ண சின்ன கத்திரிகோலை எடுத்து, அழகா போட்டுட்டு இருந்த புது டீஷர்ட்டை கட் பண்ணி வைச்சது, நான் மிக்ஸியில் தேங்காய் சட்னி அரைத்துவிட்டு, மூடியை திறந்து கலந்து விடும்போது தெரியாம ஸ்விட்ச் ஆன் பண்ணிவிட்டது (நல்லவேளை, நான் படாரென்று கையை வெளியே எடுத்துவிட்டேன், இல்லைன்னா, என் கை சட்னி ஆகியிருக்கும்! :)), இப்படி நிறைய இருக்கு அவனோட சின்ன வயசு குறும்புகள். இப்ப 7 வயதாகிற்று. குறும்புகள் எல்லாம் கொஞ்சம் குறைஞ்சி, மாறா அடம் ஜாஸ்தியாட்டு இருக்கு, ஹோம்வொர்க் பண்ண சொன்னா பர்ஸ்ட் டீவி பார்க்கிறேனே என்று அடம், எப்பவும் கம்யூட்டர், இல்லை விடியோ கேம்ஸ் விளையாட வேண்டும் என்று ஒரு அடம். பத்தாதற்கு சிவனே என்று இருக்கும் அக்காவுடன் வம்பு வேற நைசா பண்ணவேண்டியது, அப்புறம் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டு வீடே இரண்டுபடறாப்போல கத்தவேண்டியது. அப்பதான் கொஞ்சம் கோவம் வந்து, நல்லா இரண்டையும் திட்டிட்டு அப்புறம் வருத்தப்ப‌டுவேன். ஆனாலும் உடனே எல்லாம் அவங்க நல்லதுக்குதானே சொல்கிறோம் என்று சமாதானமும் ஆகிவிடுவேன்.

ச‌ரி, ச‌ரி, நான் விட்டா எழுதிட்டே இருப்பேன் போல‌. இப்ப‌வே ப‌திவு ரொம்ப‌ பெரிசா ஆகிடுச்சி. ஓகே, மர்ழி, உங்க பையனும் என்னவெல்லாம் வால் பண்ண‌றான்னு எழுதுங்க. மீண்டும் பிற‌கு பேச‌லாம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

மர்ழி 2 என்ன 10 கூட பெத்துப்பேன்.ஆனா பார்த்துக்க ஆள் வேணுமே?!!!? எனக்கும் குழந்தைகள், அவங்களோட சேட்டைகள் எல்லாம் ரொம்பவே பிடிக்கும். ஆனா இவங்களோட சேட்டை ஆபத்தா இருக்குங்குறது தான் நம்ம கவலையே.

சுஸ்ரீ நீங்க சொல்றது சரிதான். நானும் கோவத்தை குறைச்சிக்கனும். அய்யோ இவனும் இப்படி தான்பா மிக்சியில் நான் ஜாரை வச்சிட்டு லேசா தான் நகந்தேன். ஆன் பண்ணிட்டான். நான் வேகமா போய் ஆப் பண்ணேன். அம்மா அர்ஜூன் அரைச்சிட்டேன்றான். அதே போல் ஒரு முறை ஜாரில் உள்ள தக்காளி சட்டினியை எடுக்குறேன்னு தலையில் கொட்டிட்டு அய்யோ அம்மா கொட்டிட்டேங்குறான். சில சமயம் நான் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிடுவேன். அம்மா அழாதே நான் சேட்டை பண்ண மாட்டேன்னு தலையை ஆட்டி சொல்லும் போது எனக்கு ரொம்ப அழுகை வரும். நீங்க சொல்றது போல தான் நானும் நினைசுப்பேன் பெரிசானா இதெல்லாம் பண்ணவா போறான் நாம தான் பொறுமையா இருக்கனும்னு. ஆனா சில சமயம் வேலை கெடுதேன்ற கடுப்பில் தான் அடிக்கிறது.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

இதுவரை காணாமல் போயிருந்த ஹேமா இதோ வந்துவிட்டார் சிங்கைக்கு, அனைத்து தோழிகளும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹேமி

மை காட்.. வருக வருக.. நிறையா பதிவை தருக தருக..;)

அம்மா உடல் நலம் சரியில்லை எனக் கேள்விப்பட்டேனே? இப்போது எப்படி உள்ளார்கள்.. நீங்கள் நலமா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிகவும் சந்தோசமா இருக்குடா உன்ன மீட் பண்ணினது, மெயிலில் உன்னுடைய போட்டோ பார்த்தேண்டா, பொருத்தமான ஜோடி இருவரும், வாழ்த்துக்கள்
எப்படி போய்ட்டு இருக்கு, நான் நலம் பா, என் அம்மாவுக்கு இப்ப உடம்பு பரவாயில்லை, அனைவரும் நலமாக உள்ளோம் கடவுள் கிருபையால், என்னடா யாராவது அரட்டைக்கு வராங்களா?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் ஹேமா வாங்க வாங்க எப்படி இருக்கீங்க? ஊரிலிருந்து வந்தாச்சா? கிரஹப்ரவேஷம் நல்லப்டியா முடிந்ததா? அம்மா எப்படி இருக்காங்க? இப்ப அம்மாவ யார் பார்த்துக்கறாங்க?

ஹேமி

முதல் மாதிரி அரட்டை இப்போ இல்லை.. மேலும் நானும் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே வருகிறேன்.. என் நல்ல நேரம் நீங்க இப்போ வந்திங்க. அதனால் பிடிக்க முடிந்தது..

அனைவரும் நலம் என்பதில் மகிழ்ச்சி..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எப்படி இருக்கீங்க, நான் நல்லருக்கேன்பா, கிரஹபிரவேசம் நல்லா முடிந்து, வீட்டிற்கும் குடி வந்துட்டாங்க, அம்மாவுக்கு இப்ப ஓகே, அவங்களே மேனேஜ் பண்ணிக்கிறாங்கப்பா. உங்களையெல்லாம் ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பண்ணறது ரொம்ப சந்தோசமா இருக்கு.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்