கோதுமை இடியாப்பம்

தேதி: January 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (12 votes)

 

வறுத்த கோதுமை மாவு - 2 டம்ளர்
தண்ணீர் அளவு - 2 1/2 டம்ளர்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்காமல் வெதுவெதுப்பாக சுட வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மாவு, உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். (மாவு கையில் ஒட்ட கூடாது)
இடியாப்ப தட்டிலும், உரலிலும் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
பிசைந்த மாவை தட்டில் இடியாப்பமாக பிழியவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதன் மேல் இடியாப்ப தட்டை வைத்து அதன் மேல் ஒரு கிண்ணம் வைத்து மூடவும். (இட்லி சட்டியிலும் வைக்கலாம்)
இடியாப்பம் வேகுவதற்கு 5 நிமிடம் ஆகும். வெந்தததும் இடியாப்பத்தை எடுக்கவும். கோதுமை மாவு இடியாப்பம் ரெடி. இதனுடன் தேங்காய் பூ, சீனி வைத்து சாப்பிடலாம்.

முழு கோதுமையை வாசம் வரும் வரை வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் அம்மா. முயற்சி செய்கிறேன். கோதுமை இடியாப்பத்தில் இனிப்பை தவிர உப்பு இடியாப்பம் செய்யலாமா? சப்பாத்தி பதத்திற்கு பிசைய வேண்டுமா அல்லது குழைய பிசையணுமா? தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

Expectation lead to Disappointment

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்றமாதிரி ஈசியான குறிப்பா குடுக்கிறீங்க ,வாழ்த்துக்கள் அம்மா.
உங்க விருதுநகர் ப்ரோட்டா செய்தேன் நல்லடேஸ்ட்,நல்ல பாராட்டு வாங்கினேன்,அதெல்லாம் உங்களுக்கே ரொம்ப தேங்க்ஸ்

அம்மா, இதற்கு ரெடிமேட் கோதுமை மாவை வறுத்து செய்யலாமா? ராதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் நன்றி

மாவுல உப்புபோட்டுத்தான் பிசையனும் இனிப்பைதவிர காய்கறி குருமா வைத்து சாப்பிடலாம்

லெமன் சாதம் செய்றமாதிரியும் செய்யலாம்

இடியாப்பத்தை உதிர்த்து வெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டுபேஸ்ட்,முட்டைசேர்த்து வதக்கியும்செய்யலாம்

சப்பாத்தி மாவுமாதிரி பிசைந்து கொள்ளுங்கள் ரொம்ப இருக்கமாக இருந்தால் தண்ணீரை லேசாக தெளித்துக்கொள்ளுங்கள்

ரீம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

பரோட்டா செய்தீர்களா நன்றிடா(இனி அடிக்கடி பரோட்டாவா??)

ராதா ரெடிமேட்கோதுமை மாவை வறுத்து நான் செய்ததில்லை நீங்கள்முயற்சி செய்துபாருங்கள் வருகைக்கு நன்றி

இடியாப்பம் சூப்பர்..விதம்விதமா செய்து அசத்துரீங்க வாழ்த்துக்கள்மா ..நன்றி.

வாழு, வாழவிடு..

பாத்திமா, நானும் உங்கள் முறைப்படிதான் கோதுமை இடியாப்பம் செய்வேன்.
ஆனால் கோதுமை மாவை ஆவியில் அவித்து இடியப்பம் அவிப்பேன்.
நீங்கள் வறுத்த மாவில்இடியப்பம் அவித்துள்ளீர்கள் இடியப்பம் வாசனையாக இருக்கும் என நினைக்கின்றேன்.
உங்கள் முறைப்படி செய்து பார்க்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ருக்சானா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

யோகராணி வறுத்து செய்தால் வாசனையாக இருக்கும் செய்துபாருங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இதுபோல் தான்மா நானும் செய்வேன்.ஊரில் இருந்து மாவு அரைத்து எடுத்து வந்துவிட்டேன்.

வாழ்த்துகள்மா.

ஹசீன்

தொடரட்டும்............

புதுசாக அருமையாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வருகைக்கு நன்றிடா

வருகைக்கு நன்றி

சலாம் பாத்திமாம்மா
இது புதுவிதமா இருக்கு

செய்து பார்த்துட்டு சொல்றேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக அருமையான எளிதான சத்தான குறிப்பு தோழி

Jaleelakamal

சலாம் அம்மா நலமா இருக்கிங்கலா? இடியாப்பம் நல்ல இருக்குமா வாழ்த்துகள் நான் இப்படி செய்தது இல்லமா கோதுமை மாவில் செய்த வாடை வாராதமா?

வலைக்கும் சலாம் வருகைக்கு நன்றிடா செய்துட்டு சொல்லுடா

வருகைக்கு நன்றி தோழி

வலைக்கும் சலாம் நான் நலம் வருகைக்கு நன்றிடா
கோதுமையை வறுத்து செய்யும் பொழுது வாடை வராதுடா

Hi naan arusuvaiku puthiyaval idiyaappam seydhaen super kurippu..vazhthugal

சகோதரி,ஹமீது பாத்திமா, நான் உங்கள் குறிப்பைப் பார்த்து கோதுமை இடியாப்பம் செய்தேன்.(மாவை வறுத்தால் தீய்ந்து போனது.அதனால் வேகவைத்து செய்தேன்) மிக நன்றாக வந்தது சேவை. நன்றி

idhuvum kadandhu pogum.

அக்கா எப்படி வேக வைக்கனும் கோதுமை மாவை?

shagila

Hello, I tried Wheat idiyappam... But i cant able to press it as Idiyappam. It is very hard! I dont know why! :( Any suggestion plz?

ரேகா