பச்சை கத்திரிக்காய் பொரியல்

தேதி: January 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பச்சை நிற நீள கத்திரிகாய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
ஆப்பிள் தக்காளி - 1
வரமிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
உப்பு


 

பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும் கத்திரிக்காயை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்

கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், வெங்காயம் சிறிது வதங்கியவுடன், நறுக்கிய கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.5 நிமிடம் மூடி வதக்கவும். கத்திரிக்காய் வெந்ததும் இறக்கவும்.

விரும்பினால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான கத்திரிக்காய் பொரியல் ரெடி


மேலும் சில குறிப்புகள்