ஈஸி தந்தூரி சிக்கன்

தேதி: January 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (15 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
தந்தூரி மசாலா - 5 தேக்கரண்டி
வினிகர் - 3 மூடி
உப்பு - தேவைக்கு
தந்தூரி அடுப்புக்கு:
செங்கல் - .4
மணல் - சிறிது
அடுப்பு கரி - சிறிது (1/2 கிலோ)
சைக்கிள் கம்பி - 8
கெரோசின் - தேவைக்கு


 

முழு கோழியை நான்கு துண்டாக வெட்டி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். பின் அதில் தந்தூரி மசாலா, வினிகர், உப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும்.
வீட்டின் பின்புறம் கொஞ்சம் மணலை பரத்தி அதன் மேல் செங்கலை வைத்து அதனுள் கரிதுண்டை போட்டு கெரோசினை ஊற்றி பற்ற வைக்கவும். நல்லா கனலாக(கங்காக)வேண்டும்
பின் செங்கலின் மேல், கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக படத்தில் உள்ளது போல் அடுக்கவும்.
கம்பியின் மேல் மசாலா தடவி ஊற வைத்திருக்கும் கோழி துண்டுகளை வைத்து அடுக்கவும்.
ஒரு அகலமான பாத்திரம் கொண்டு மூடவும். இரு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்
இப்பொழுது சிக்கன் தந்தூரி ரெடி. (கோழி வேக 20 நிமிடம் ஆகும்)


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கலா இருக்கு,சூப்பரோ சூப்பர்.பார்பிக்யூ செட் வாங்கி இங்க யூஸ் பண்ணாமல் வச்சு இருக்கேன்,இங்கு பார்க்குகளில் இப்படி சிக்கனை சுட்டு சாப்பிடும் வசதி இருக்கும்.

ரொம்பவும் ஈசியா இருக்கு. விருப்ப பட்டியில் சேர்த்துவிட்டேன் செய்து பார்த்துவிட்டு குறிப்பு கொடுக்கிறேன்.

வாழு இல்லை வாழவிடு

சலாம் ஃபாத்திமாம்மா , நலமா ..? என்ன ஒரு அருமையான யோசனை ... வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே க்ரில் செய்துடீங்கலே ... சூபெர் மா .. வாழ்த்துக்கள் மா ...

Express Yourself .....

தொடரட்டும்..................

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி(என் மருமகள் ஐடியா)

ரீம் முதல்ல வந்து பதிவிட்டதுக்கு நன்றி
வருகைக்கு நன்றிடா

சுமி வருகைக்கு நன்றி செய்துட்டு சொல்லுங்கள்

வலைக்கும் சலாம் நலம்.
நீ நலமாடா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்தி அக்கா...
சிம்பிளான முறையில் அசத்தலான க்ரில் சிக்கனா...?
கலக்கிட்டீங்க அக்கா....
பார்க்கும் போதே சூப்பரா...யம்மி யம்மியா இருக்கு......
வாழ்த்துக்கள் அக்கா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆஹ்ஹா சிக்கன் ...........

பார்க்கவே சாப்பிட தோனுகிறது.இது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் செய்ததில்லை.

கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம்.

வாழ்த்துகள்மா.

ஹசீன்

i have oven how come i will use tell me the temp.also pls

அய்யோ பார்க்கவே சாப்பிடனும்னு தோண வச்சிட்டீங்க. எவ்வளவு அழகா செங்கலில் அடுப்பு போல செஞ்சுருக்கீங்க. ஆனா என் பையன் கிட்ட நான் எப்படி செய்ய? (நேரா வந்து கையை உள்ள விடனும்னு கத்துவான்). ஆனாலும் எப்படியாவது செய்து பார்த்திட்டு சொல்றேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

nalla kurippu.mikka nanri...

Tharifa.

அஸ்ஸலாமு அழைக்கும் பாத்திமா அக்கா நல்லா இருக்கீங்களா ரொம்ப அருமையா செய்து இருக்கீங்க ஓவன் இல்லாதவர்கள் இனி இந்த சிக்கனை பார்த்து ஏங்க வேண்டியது இல்லை உங்க முறை சுப்பர்

தந்துரி மசாலா செய்வது எப்படி?உங்கள் தந்துரி மசாலா வீட்டில் செய்ததாஇல்லை கடைல வாங்கியதா ?? கடைகளில் கிடைக்குமா ..........

veniraj.

LIFE IS NOT A RACE
IT IS A JOURNEY!

Smile is the best medicine in the world,so keep smiling.

என்ன அருமையான தந்தூரி சிக்கன் சூப்பர்மா படங்கள் மிகத்தெளிவா இருக்குமா வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

hi ,we can set your oven for broil and 350 degree and preheat for 5 minutes.then keep the pieces inside (use gloves ).after 30 minutes turn the pieces after it become reddish brown u can switch off.

hi

அஸ்ஸ்லாமு அலைக்கும் பாத்திமா.ரெம்ப அழகா அருமையா இருக்கு.நல்ல உபயோகமான குறிப்பு

நினைப்பவை எல்லாம் நல்லவையானால்
நடப்பவை அனைத்தும் நன்மையாகும்.

ரொம்ப வித்தியாசமான வளிமுரை.ரொம்ப நன்றி. இது தான் நான் முதல் முறை எழுதும் தமிழ்.தப்பு இருந்தால் மன்னிக்கவும்.

hi

ரொம்ப அருமை தோழி, எங்கள் வீட்டில் எல்ல்லோருக்கும் பிடித்தது.

Jaleelakamal

வலைக்கும்சலாம் அப்சரா
அப்சரா உனக்கு மெயில் பண்ணினேன் வந்ததா?
ஊருக்கு போய்ட்டேன் அதான் லேட்டான பதிவு சாரி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஹசினா வருகைக்கு நன்றி

ஹசினா வருகைக்கு நன்றி

உமா வருகைக்கு நன்றி செய்துட்டு சொல்லுங்கள்

mrs.Hanifa நன்றி

வலைக்கும் சலாம் நஸ்ரின் நலமா?
நான் நலம் வருகைக்கு நன்றி

கடைகளில் கிடைக்கும் நான் கடையில் வாங்கியதுதான் வருகைக்கு நன்றி

ருக்சானா ஊருக்குப்போய்ட்டேன் அதான் லேட்டான பதிவு சாரிடா
வருகைக்கு நன்றி

feroza நன்றி

saheli வருகைக்கு நன்றி

ஜலீலா வருகைக்கு நன்றி

பாத்திமா... தந்தூரி அடுப்பு அமைக்கும் முறை சூப்பர். கலக்கிட்டீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சலாம் ஃபாத்தி அக்கா...,
உங்க மெயில் எனக்கு வரவே இல்லையே.....
மறுபடியும் இந்த ஐடிக்காவது அனுப்புங்க....அக்கா...
ஆவலோடு காத்திருக்கின்றேன்.
apsarasaleema@gmail.com

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

wow hameed fathima,thank u so much.u 've showed it in such an easy way to make thanthoori.thank u soooo much.

Enaku Thandhoori Chicken Romba Pidikum. Aana Epdi Seiradhunu Doubta Irundhuchu. Idha Padichi Pathadhum Enaku Romba Simplea Iruku. Paka Arumaiya Iruku. Super. I Will Try . Thank You.