தோழிகளே என் சகோதரிக்கு உதவுங்கள்

தோழிகளே இதற்கு முன் அறுசுவையில் உங்களிடம் கேட்டு பயன் பெற்றிருக்கிறேன், எனக்கு அடிக்கடி Computer repair ஆவதால் உங்களிடம் நான் நினைத்த நேரத்துக்கு வர இயலவில்லை. இப்போது ஒரு problem த்தில் என் சகோதரி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் குழந்தை june 14 2010 பெற்று எடுத்தாள் குழந்தைக்கு இப்போது 7 மாதம், 5வது மாதத் துடக்கத்திலேயே அவளுக்கு பால் குறைந்து கொஞ்சம் கொஞமாக நின்று விட்டதும் 6மாதம் கூட complete ஆக கொடுக்க முடிய வில்லை, குழந்தயிம் பால் ஒழுங்காகக் குடிக்காது, 6வது மாதத்தில் இருந்து weaning food குழந்தைகுத் தொடங்கி விட்டாள், அதுவும் அவள் கஷ்டப்பட்டுத்தான் கொடுப்பாள் ஆனால் பாலை விட அது கொஞசம் சுலபமாக இருந்தது. கொஞ்சம் சந்தோசமாய் இருந்தது, ஆனால் இப்போட்க்ஹு கொன்ச நாளாக பாப்பாவுக்கு எதை வாயில் வைத்தாலும் வோ...வோ. vomit வருகிற மாதிரி பண்ணுகிறாள், ஒரு 4 அல்லது 5 போனதும் வாந்தி பண்ணி விடுகிறாள், ஆனால் பசிக்கிற மாதிரி வாயைத் திறப்பாள், ஆனால் வாயில் வைத்ததுமே வோ...வோ. என்று வொமிட் வருகிற மாதிரி பண்ணுவாள். மேற்கொண்டுக் கொடுத்தால் வாந்தி பண்ணி விடிகிறாள். குழந்தையால் அவளும் சாப்பிட மாட்டேன்கிறாள், இங்கே நிறைய அனுபவ சாலிகள் இருக்கிறார்கள், எனக்குத் உங்களுடைய தெலிவான பதிலைத்தந்தீர்கள் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும். பால் அவளுக்கு அறவே பிடிக்கவில்லை, தானாக பாலை சப்பிக் குடிப்பதை நிறுத்தி 3 மாதங்களாயிற்று, கரண்டியால் தான் புகட்டுவாள், half வெளியே சிந்தி அவளுக்கு மிகவும் குறைவாகத்தான் உள்ளே செல்லும், காலை 8 மணிக்கு ஆக 60 ml approxmately கொடுக்கிறாள் 10.30 க்கு கேழ்வ்ரகு கூழ் அல்லது பார்லி அல்லது கோதுமை கூழ், அலது ஓட்ஸ் இப்படி ஏதாவதை கொடுக்கிறாள், மதியம் 1.30க்கு அப்ப்லெ juice அல்லது வழைப்பழம் மசித்து, அல்லது பழச்சாறு, 2.30 மணிக்கு brown rice 2 table spoon ஒருநாள் with உருளை கேரட் ஒருநாள் சதாரண புலுங்கல் அரிசி 2 table spoon சீனிக்கழங்கு, பூசனிக்காய் வேக வைத்து அடித்துக் கொடுக்கிறாள். அப்புறம் குழந்தயை தூங்க விட்டு 6 மணிக்கு முதல் 6.3ஒ வரை வெறுந்தண்ணீர் கொடுக்கிறாள், 7 மணிக்கு வெஜிடபிள் soup கொடுக்கிறாள், இரவு 8.30 iddly அல்லது தோசை பாலில் அடித்துக் கொடுக்கிறாள் இரவு 12மணிக்கு பால் 120ml approxmately. அவ்வளவுதான் தோழிகளே தெலிவான பதிலைத்தாருங்கள் இதை குடுக்க்க ஒரு ஒரு feedக்கும் குறைந்தது 1மணி நேரம் ஆகும், இங்குள்ள மனோஒகரி அக்கா, தாளிகா, செந்தமிழ்ச் செல்லி அக்கா எனக்க்கு நல்ல பதிலத் தாருங்கள் என் சகோதரிக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி மீண்டும் எழுதுகிறேன்

இது ஒரு பெரிய ப்ரச்சனையாகவே தெரியவில்லை.சில குழந்தைகளுக்கு கொஞ்சம் வளரும் வரை இப்படி வாந்தி எடுப்பது போல் செய்வார்கள்..என் மூத்த மகள் 6 மாதத்தில் சாதம் கொடுத்தால் கூட விழுங்குவாள்..என் மகனோ 11 மாதத்தில் கூட சின்னதாக எதாவது தட்டினாலும் வாந்தி தான்..எனக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது என்றாலும் தண்ணியாகவே பழக்கினால் கஷ்டம் என்று மெல்ல மெல்ல கட்டியாகவும் பருக்கைகளாகவும் கொடுத்து இப்பொழுது 16 மாதம் ஆகிறது இந்த ப்ரச்சனை 13 மாதத்தில் மாறியது.அதுவரை பொறுமையாக இருங்கள்.
மருத்துவரிடமு ஒரு முறை கேட்டு அவரும் எதுவும் இல்லையென்றால் பொறுமையாக மெல்ல பழக்கப்படுத்தினால் வளர வளர சரியாகிடும்..இதெல்லாம் ஒரு அனுபவம் தானே..பிள்ளைகள் சடார் என்று வளருவார்கள் ஒரு ஆறோ ஏழோ வயதானால் எல்லாம் தாமாக செய்வார்கள் அன்று இதெல்லாம் வெறும் ஒரு நினைவாக தான் இருக்கும்.
அதுக்காக அம்மாவும் உடம்பை கெடுத்துக் கொண்டால் பிறகு பிள்ளையை யார் கவனிப்பது.பசி என்ற ஒன்று எல்லோருக்குமே இருக்கும் அது குழந்தையானாலும் அதன் தேவையறிந்தே கொடுக்க வேண்டும் மறுத்தால் விட்டு விடலாம்.

நன்றி தளிகா, இப்போதான் பார்த்தேன் computer வேலை செய்யவில்லை, அதனால்தான், sorry for late reply இப்போது தங்கை குழந்தைக்கு doctor acid reflux இருப்பதாகச் சொல்கிறார்கள், அதனால்தான் அடிக்கடி vomit பண்ணுகிறாள், எப்போதும் active வாக விளஒயடுபவள், விளையாடும்போதே நை...னை என்று அழுகிறாள், neck கை streach பண்ணி வளைப்பாள். இதைப்பற்றி உங்கள் யாருக்காவது தெரியுமா? இதனால் அவளுக்கு sore throat வந்து 2 நாட்களாகக் காய்ச்சல், டாக்டர் இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம் என்றிருக்கிறார். சரியாகத் தூங்குவதில்லை, யாருக்காவது இந்த experience இருந்தத/ சொல்லுங்கப்பா, என் சகோதரிக்கு உதவியாக இருக்கும், please help பண்ணுங்க. நான் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி

senthamilselvi

மேலும் சில பதிவுகள்