ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது.

ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது.புக்ஸ் பல படித்தேன் புரியவில்லை.விவேகானந்தா கோர்ஸோ அல்லது ஈசியா கத்துக்கிறதுக்கு ஏதெனும் வழி இருக்கிறதா?(வீட்டிலிருந்தபடியே)சொல்லுங்கள் தோழீஸ்.விவேகானந்தா கோர்ஸ் தபால்வழி கத்துக்க என்ன பன்னனும்னு சொல்லுங்க தோழிஸ்.PLS HELP ME.

ஆங்கிலத்திலுள்ள நிகழ்ச்சிகள் நல்ல படங்கள் டாக்யுமென்டரிகள் பாக்க தொடங்குங்க..அல்லது வெறுமனே வலைதளங்களில் உலா வாங்க ..கத்துக்கலாம்.
எது ஒன்றையும் மனதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்லி சொல்லி பாருங்க...யாராவது பேச ஆளை கண்டுபிடிங்க ரொம்ப சீக்கிரம் கத்துக்கலாம்

இனியா !!!!விவேகானந்தா கத்து கொடுப்பாங்க .ஆனா பள்ளி மாதிரி நடத்திகிட்டே போவாங்க .அவங்களுக்கு கோர்ஸ் முடிக்கணும்.ஆனா நாம பிக்குப் ஆக நாள் ஆகும் .இதுக்கு நீங்க இந்திய டைம்ஸ் வாங்கலாம் .தினமணி இந்திய டைம்ஸ் ரெண்டும் ஒன்னுநு கேள்விபட்டேன்,இது தமிழில் இருக்கும்.அது இதன் ஆங்கில பதிபுன்னு கேள்விபட்டேன்.நீங்க ஆங்கில NEWSPAPER படிங்க .பக்கத்துல டிக்டயொனரி வச்சுகோங்க .தினமும் DICTIONARY இல் பத்து வார்த்தையாவது கத்துகோங்க .வார்த்தைகள் பழகிட்டா புருஞ்சிகிறது ரொம்ப ஈஸியா இருக்கும்,அப்புறம் பேசிடலாம்.ஆங்கில படங்கள் கேழே ஆங்கில வரிகள் வருமே அது மாதிரி படங்கள் பார்த்தால் .அவர்கள் பேசுவதை புரிந்துகொள்ளலாம்.ஆங்கிலம் பேசுவதை புரிந்து கொண்டால் பேசுவது ஈஸி.சீக்கிரம் கத்துக்க வாழ்த்துக்கள் .நியூஸ் பார்ப்பது ,படிப்பது, படம் பார்ப்பது ரொம்ப முக்கியம்.கூச்சம் தவிர்க்க வேண்டும்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்களுக்கு ஆங்கிலம் கற்று கொள்ளணுமா ஒரு ஈசியான வழி சொல்றேன் கேளுங்க......தினம் ஆங்கில பேப்பர் படிங்க.....உங்களுக்கு தெரியாத வார்த்தையை அகராதியில் தேடி அதன் பொருளை தெரிந்து கொள்ளுங்கள். அப்படியே "wren and martin" புத்தகம் வாங்கினால் இலக்கணம் கற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு புது வார்த்தை கற்றுக் கொண்டு அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அந்த வார்த்தையை அன்றைக்கே 5-6 தடவையாவது பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் பொம்மை படம் (ஆங்கிலத்தில்) மற்றும் ஆங்கில கதை புத்தகம் அல்லது படம் பார்த்துகூட கற்றுக் கொள்ளலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆங்கிலம் கற்றுக்கொள்ள தினமும் சரியோ தவறோ பேசிக்கொண்டே இருந்தால் எளிதில் கற்றுக்கொள்ளலாம். இலக்கணம் மிக முக்கியம். உதாரணமாக "நான் 2000 ஆம் ஆண்டு பெரிய கோவிலை பார்த்தேன்" என்றால் பலருக்கும் நான் - I , பெரிய கோவில் - Big Temple , பார் - see, ஆண்டு- year என எல்லா வார்த்தைகளும் தெரியும் ஆனால் சிலருக்கு இலக்கணம் சரிவர தெரியாது. முதலில் இலக்கணம் கற்றுகொண்டால் நன்று. நமக்கு சரியாக பேசுகிறோம் என்ற நம்பிக்கையும் மேலும் ஆர்வமும் உண்டாகும்.

ஆங்கில இலக்கணம் முறையாக கத்துக்க ஏதாவது புக்கோ,இனையதளமோ இருந்தால் சொல்லுங்கபா.(மன்டயில ஏர மாதிரிருக்கனும்).பதில்ளித்தthalika,aswatha,vrscorp,vis5 நன்றி.

ஆங்கில இலக்கணம் முறையாக கத்துக்க simple website
http://tamiltospokenenglish.blogspot.com/

ஹாய் இனியா நலமா.

இரவு தான் உங்களை நினைத்துகொண்டிருந்தேன்.காலையில் பார்த்தல் ஹா,ஹா,ஹா.

குட்டிமா நலமா.பேசி ரொம்ப நாள் ஆகுதுபா.

www.learnrealenglish.com
இதைப்போய் பாருங்கள்.வாழ்த்துக்கள்.

ஹசீன்

மிக்க நன்றி சுனி.அந்த இனைய தளத்தையும் பார்த்துட்டு சொல்ரேன்.

ஹாய் ஹசினா எப்படி இருக்கீங்க.லுலு குட்டி நலமா.ரொம்ப நன்றி பதிலளித்ததுக்கு.சந்தோசமாய் இருக்கிறது உங்களுடன் பேசியதர்கு.

Dont worry Iniya. English is a language like other language. so no need to be scared. In this section I am planning to write an article abt how to speak English very soon. I will help you.

மேலும் சில பதிவுகள்