கொத்து பருப்பு சாம்பார்

தேதி: January 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

 

பாசி பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
கத்திரிக்காய் - ஒன்று
கேரட், முட்டைகோஸ் - சிறிதளவு
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லி தழை - சிறிதளவு


 

பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு தாராளமாக தண்ணீர் விட்டு மஞ்சள் பொடியை அதில் சேர்த்து நன்கு மசிய வேக விடவும்.
வெங்காயத்தை தோல் உரித்து நன்கு அலசி விட்டு நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். முட்டை கோஸ், கேரட்டையும் அரிந்து கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்த பருப்பில் பாதியை இரண்டரை டம்ளர் தண்ணீருடன் கலந்து கொண்டு அதில் அரிந்த வெங்காயத்தில் முக்கால்வாசியும், மற்ற காய்களையும் ( பூண்டை தவிர்த்து) சேர்த்து மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
ஓரளவு வெந்ததும் மீதி உள்ள பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கி விட்டு, வேறு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், மீதி உள்ள வெங்காயம், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் அரை தேக்கரண்டி மிளகாய்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு சாம்பாரை அதில் ஊற்றவும். மல்லி தழையை நறுக்கி தூவி ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான கொத்து பருப்பு சாம்பார் தயார். இது சாதம், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் இவற்றிற்கு ஏற்றதாக இருக்கும்

மற்ற பருப்புகளை விட பாசிபருப்பு மிகவும் உடம்பிற்கு நல்லது. உருளைக்கிழங்கும், முருங்கைக்காய், மாங்காவும் கூட சிறிதாக அரிந்து சேர்க்கலாம். இதை எங்கள் வீட்டில் பலமுறைகளில் செய்வோம். முட்டை சாப்பிடுபவர்கள் இருந்தால் தாளிக்கும் போது மிளகாய்தூள் எல்லாம் போட்ட பிறகு முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி லேசாக கிளறி விட்டு பின்பு சாம்பாரை ஊற்றவும். இது ஒரு விதம். ஸ்பெஷலாக செய்வதாக இருந்தால் நிறைய சின்ன வெங்காயம் மட்டும் சேர்த்து காய்கள் இல்லாமல் கடைசியில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து இறக்குவோம். தாளித்த பின் முட்டையை மெதுவாக ஊற்றி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு இறக்கலாம். குழந்தைகளுக்கு சாதத்தில் நெய் ஊற்றி இந்த சாம்பாரை ஊற்றி முட்டையுடன் கொடுக்கலாம். மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எங்க அம்மா செய்வாங்க,கொத்துசாம்பார்,துவரம்பருப்பு,சிவெங்காயம் மட்டும் சேர்த்து,காய் எதுவும் சேர்க்க மாட்டாங்க,நெய்யில் தாளிப்பாங்க.இது வித்தியாசமா இருக்கு.சீக்கிரமா செஞ்சு பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

ஹாய் appufar

சாம்பார் பார்க்கவே அருமையாக இருக்கு ....செய்து பார்த்து அனுப்புகிறேன் பின்னுட்டம்......

nanriyudan

சலாம் அப்சரா,வாழ்த்துக்கள்.

இதுமாதிரி சாம்பார் நாங்கள் செய்தது இல்லை.

புதுசாக இருக்கு.இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக செய்துப்பார்கிறேன்.

ஹசீன்

எனது குறிப்பினை வெளீயிட்ட அட்மின் அவர்களுக்கு மிகவும் நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும் ரீம்...,
பாசி பருப்புக்கு இன்னொரு பெயர் கொத்து பருப்புன்னு எங்கள் ஊர் பக்கம் சொல்லுவாங்க.அதனால் தான் இந்த பெயர்..... நீங்க சொல்றாமாதிரி மருமகனுக்கு செய்தார்களேயானால்... நெய் சோறு, கோழி குழம்பு,இந்த வகைகளில்..,இந்த சாம்பாரையும் கொஞ்சம் திக்காக நெய்யில் வெங்காயத்தோடு முந்திரியையும் வறுத்து தாளிப்பார்கள்.(வெறும் வெங்காயமும்,முட்டையும் தான் அதில் இருக்கும்).நல்ல மணமாக இருக்கும்.
நீங்களும் முடிந்த போது செய்துபாருங்க....
தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ரீம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் விஜி...,தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
முடிந்த போது செய்து பார்த்துட்டு நிச்சயம் வந்து சொல்லுங்க....
நன்றி விஜி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ஹசீனா...,
தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி மா....
முடிந்த போது செய்து பாருங்க...நிச்சயம் பிடிக்கும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா,எப்படி இருக்கீங்க?

சாம்பார் கண்ணை கவருது,அப்ஸ்.எங்க வீட்ல காய்கறி சேர்க்காம செய்வோம்,அப்ஸ்.நீங்க நிறைய காய்கறிகளெல்லாம் சேர்த்திருக்கீங்க.ரொம்ப டேஸ்ட்டாயிருக்கும் போலிருக்கு,அப்ஸ்.முட்டையிலும் செய்யலாம் என்று சொல்லியிருக்கீங்க.விருப்பபட்டியல்ல சேர்த்துட்டேன்,அப்ஸ்.இரண்டு விதமாவும் செஞ்சு பார்க்கறேன்,அப்ஸ்.சத்தான குறிப்பு கொடுத்திருக்கீங்க,வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் அப்ஸ்:)

அன்புடன்
நித்திலா

வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள் அப்சரா......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கொத்துபருப்பு நல்ல இருக்கு அப்சாரா

Jaleelakamal

கொத்துபருப்பு சாம்பார் சூப்பரா இங்க வருது வாசம் ..படங்கள் அருமை வாழ்த்துக்கள் அப்சரா..நன்றி

வாழு, வாழவிடு..

ஹாய் நித்திலா...,நான் நலமாக உள்ளேன்.நீங்க எப்பைட் இருக்கீங்க?
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
முடிந்த போது நிச்சயம் செய்துபாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
தங்கள் பாராட்டுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றி நித்திலா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஸ்வர்ணா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தாங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி ஜலீலா அக்கா.
மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்சானா...,எப்படி இருக்கீங்க...?
வீட்டில் அனைவரும் நலம்தானே..?
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ருக்சானா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சலாம் அப்சரா நலமா??குழ்ந்தைகள் எப்படி இருக்காங்க மெயில் பண்ணினேன் வந்ததா? வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள்

சலாம் அப்சரா அக்கா , நலமா ..? வீட்டில் அனைவரும் நலமா ?
உங்கள் குறிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது ... இன்ஷா அல்லாஹ் விரைவில் செய்து பார்கிறேன் .. வாழ்த்துக்கள் அக்கா ..

Express Yourself .....

அப்சரா... சூப்பர். பார்க்கவே சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்துடறேன். பல விதத்தையும் இதிலேயே சொல்லி இருக்கீங்க, நிச்சயம் வித்தியாசமா இருக்கும் முட்டை சேர்த்தா. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வ அலைக்கும் சலாம் ஃபாத்தி அக்கா..,
நானும்,பிள்ளைகளும் நலமாக உள்ளோம்.
நீங்களும்,வீட்டில் அனைவரும் நலம்தானே...?
மெயில் அனுப்பியிருக்கீங்களா...?மிகவும் சந்தோஷமான விஷயம்....
ஆனால் வரவில்லையே அக்கா....
ஏன்னு தெரியலையே....
தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி அக்கா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வ அலைக்கும் சலாம் ஷாகியா....
நாங்கள் அனைவரும் நலம்... நீங்களும்,அண்ணன்,பிள்ளை நலம்தானே...?
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஷாகியா...
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வாங்க வனி எப்படி இருக்கீங்க..?
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி...
ஆமாம் சின்ன வெங்காயமும்,முட்டையும் மட்டும் சேர்த்து செய்வது நல்ல டேஸ்ட்டாக இருக்கும்.இந்த முறையும் நன்றாகவே இருக்கும்.
முடிந்த போது செய்து பாருங்க வனி....
வாழ்த்துக்களுக்கு நன்றி வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.