பரிசு

தோழிகளே உங்களுக்கு கல்யாணம் ஆனா உடன் கணவன் வாங்கி கொடுத்த முதல் பரிசு என்ன ?

அனுபவங்களை பகிர்துகொள்ளலாமே...அல்லது பரிசு எப்படி கணவனிடம் வாங்கலாம்னு ஐடியா சொல்லலாம்

மத்தவங்களுக்கு பயனுல்லதா இருக்கும்....

குமாரி எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? நல்ல இழை போட்டிருக்கீங்க.பார்த்தவுடன் என்ன என்னவோ ஞாபகம் வருது.எங்களுடையது பெரியவர்கள் பார்த்துவச்ச கல்யாணம்.எங்க கல்யாணத்திற்கு முன்னாடி எனக்கு 2 செட் சுடிதார் எடுத்து கொடுத்தாங்க.எங்க வீட்டிற்கு வராமல் என்னை ஒரு இடத்திற்குவர சொல்லி கொடுத்தாங்க.கல்யாணத்திற்கு முன்னாடி எனக்கு பிறந்த நாள் வந்தது.நாங்க இரண்டு பேரும் வேலைக்கு சென்றதால் அன்று காலையில் என்னை பார்த்து பூ வாங்கி கொடுத்து, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றோம்.என்னை பிறந்த நாள் அன்று அவர் பார்க்க வருவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.எல்லாம் இப்பொழுது நினைத்தாலுமே ஒரு இன்ப நிகழ்வாகவே உள்ளது. குமாரி மிக்க நன்றி அதை ஞாபகப்படுத்தியதற்கு.

Expectation lead to Disappointment

குமாரி ஒரு இழையை தொடங்கிட்டு என்ன காணாம போய் விட்டீங்க. உங்க அனுபவத்தை சொல்லுங்க.

Expectation lead to Disappointment

ஹா ஹா ஹா

என் கதையை செருப்பு கதை

என் தோழி ஒருத்தி சொன்னா உன் கல்யாணத்துக்கு பிறகு உன் கணவரிடம் முதல் முதல் வாங்கும் பரிசு செருப்பாதான் இருக்கணும் அப்போ தான் அவர் காலம் முழுக்க உன் காலடில கிடப்பார்னு சொல்லிட்டா ...அதை கேட்டுகிட்டு நானும் என் கணவர்கிட எனக்கு உங்க கையாள செருப்பு வாங்கி குடுங்கன்னு கேட்டேன் இதற்கு எனக்கு எடுத்த அவகாசம் 3 மாதம் ...அதற்கு இதில் எவ்ளோவோ வாங்கி குடுக்க முயற்சி செய்தார் (அப்போ புது மனைவிள்ள) ..இல்லை முடியாதுன்னு அடம் பிடிச்சி செருப்பையே கிப்ட வாங்கிட்டேன்

தோழிகளே உங்கள் நினைவுகளையும் பகிர்துகலமே...நீங்க என்னலாம் வங்கி குடுத்து இருக்கீங்க

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வணக்கம் மீனா நான் நலம்...நான் நல்லா இருந்தா என் கணவரும் நலமே...:)

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தோழி நான் என் மனைவிக்கு திருமணம் ஆன புதிதில் புடவை வாங்கி தந்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் .சௌமியன்

மனைவிக்கு செய்வது பத்தி என் கணவருக்கும் சொல்லி கொடுஙக சௌமியன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என் கணவர் நிச்சயதார்த்தம் அன்று செல்பேசி பரிசளித்தார்

நானும் வந்துவிட்டேன்

என் கணவர் முதல் முறையாக என்னை பார்க்க வரும்போது மோதிரம் வாங்கிக்கொடுத்தார்.

நானும் என் கணவரும் திருமணதிற்கு முன்பே சந்தித்தோம் ...அன்னில இருந்து இன்னைக்கு வரை நான் தான் அவருக்கு ஏதாவது வாங்கி கொடுத்துகிட்டு இருக்கேன் ..அவர் ஏதும் வாங்கி கொடுத்தது இல்லை...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்