செய்திகளை பகிர்ந்துக்கலாமா?...

ஹாய் தோழிகளே எல்லாரும் நல்லாருக்கீங்களா? ரொம்ப நாளுக்கு அப்பறம் புது இழை...

டீக்கடை பெஞ்சு மாறி நாம அறுசுவை பெஞ்சு ஆரம்பிக்கலாமா? நம்ம வீட்டு ஆட்டுக்கல்லுல விரிசல் விழுந்ததுல இருந்து அமெரிக்கால திடீர்னு பள்ளம் ஆனவரைக்கும் அலசலாம். அடடா இப்படி ஆய்ருச்சே! இந்த சேதி தெரிமா??? அச்சச்சோ அப்படியா ஆச்சு? இப்படித்தான் ஆகனும், இப்படி ஒரு பிரச்சனை ஆய்ருச்சுன்னு என்னல்லாம் நினைக்கறீங்களோ அதைல்லாம் பதிவு பன்னுங்க. எல்லாம் ஒரு ஜெண்ட்ரல் நாலேட்ஜ் வளர்த்துக்கறதுக்கு தான்...:)

ரெடியா? வாங்க வாங்க...

அன்புடன்
லதாவினீ.

முதல்ல நானே ஆரம்பிக்கறேன்;)

ஸ்பெக்ட்ரம்-ல எந்த இழப்பும் இல்லைன்னு செய்தி படிச்சேன்...

ஹாஹாஹா எனக்கு முதல்லயே தெரியும் இப்படித்தான் ஆகும்னு சோ நானே எனக்கு ஒரு சபாஷ் சொல்லிக்கறேன் அதான் முதல்லயே எனக்கு தெரிஞ்சுருச்சுல்ல அதுக்குத்தேன்..... வேற எதுக்கு???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

திருப்பதிக்கு போக முடியாதவங்க கவலையே படவேணாம். நம்ம கன்னியாகுமரில திருப்பதி தேவஸ்தானம் புதுசா கோவில் கட்டப்போறாங்க. அதுவும் திருப்பதி மாறியே சோ இனி நம்ம ஊர்லயே வெங்கடாசலபதி சாமியை தரிசனம் பன்னிக்கலாம்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ரேசன் கடைகள்ள காய்கறிகளை விக்க ஆரம்பிச்சுருக்காங்களே உங்களுக்கு தெரிமா? இங்க இன்னிக்கு தான் கேள்விப்பட்டேன் பட் கடைகள்ள விக்கறதுக்கும் அங்க விக்கறதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.:(

பேப்பர்ல எல்லா காய்கறிகளும் விலை குறைஞ்சுருச்சுன்னு போட்ருக்காங்களே தவிர எங்க ஊர் கடைகள்ல இப்பவும் ஒரு கிலோ வெங்காயம்40 தான் தக்காளி 35 தான்... மத்ததை வேற சொல்லனுமா???:(

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

உங்க ஊர்ல யாவது வெங்காயம் கிலோ 40 ரூவா, தக்காளி 35 ரூவாதானே,
நீங்கல்லாம் எவ்வளவோ பரவால்லைப்பா, இங்க மும்பைல இப்பவும் வெங்காயம்
கிலோ60- லேந்து இறங்க மாட்டேன்னு சண்டித்தனம் ப்ண்ணுது. தக்காளி 50 ரூவா, கொத்தவரங்கா இங்க, யாருமே திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க, அதுக்கே
கிலோ40 ரூவா. காய் வாங்க மார்க்கெட் போனா பாதி சொத்தை எழுதி வச்சுடனும்போல.

ஹாய் லதா,கோமு,நலமா.

நல்ல இழை...

நாங்க இருக்கும் இடத்தில நல்ல மழை
வந்து அதன் தண்ணீர் வடியாமல்

வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது பா.

ஸ்கூல் போன குழந்தைகள் ,.ஆபீஸ் போனவர்கள், அங்கயே தங்கிவிட்டார்கள்.(ஸ்கூல்,ஆபீஸ்).

கார்கள் அடித்து ஓடுகிறது.

முடிந்தால் இதைப்போய் பாருங்கள்.

www.youtube.com-(jeddah flood 26th jan 2011)search இதை கொடுத்துப் பாருங்கள்.

ஹசீன்

ஹாய் லதா வினி...

நல்ல இழை...
நாங்க இப்போ பாண்டிச்சேரில இருக்கோம்...
இங்க கவர்மென்ட்டே காய்கறி கடை (பாசிக்), மளிகை கடை (அமுத சுரபி), நர்சரி கார்டன்,உரம் (பாப்ஸ்கோ), மினரல் வாட்டர், பால்(பாண்ட்லே), கைதறி துணிகள்(பாண்-டெக்ஸ்) இன்னும் நிறைய கவர்மென்ட் கடைகள் இருக்கு...
இதெல்லாம்...சாதாரண ரேஷன் கடைகள் மாதிரி இருக்காது.. சூப்பர் மார்கெட் தரத்தில் ஏ சி வசதியுடன் இருக்கும்...
விலையெல்லாம் கேட்கவே வேண்டாம்... கோஸ், சௌசௌ, பீட்ரூட்,உருளை,....(Rs10- 15)கேரட்,பீன்ஸ் (Rs26)..வெங்காயம் (30) பச்ச பட்டாணி(Rs26)....(கிலோவில்) இதுவும் இந்த ஒரு மாதத்தின் விலை நிலவரம் தான்... அதற்கு முன்பு எதுவும் Rs20 ஐ தாண்டாது...
பிறகு திருவிழா (தீபாவளி,பொங்கல்...) காலங்களில் அரசே பெரிய திருமண நிலையங்களில் மிக மிக குறைந்த விலைகளில் அனைத்தும் (வெடி,கரும்பு உள்பட) கிடைக்கும்... அதுவும் இங்கு எங்கு இருந்தாலும் நடந்தே சென்று வாங்கி கொள்ளலாம்... அத்தனை கடைகள் இருக்கும்...பஸ்சில் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் 3 ரூ மட்டுமே... இன்னும் நிறைய இருக்கு பிறகு சொல்கிறேன்....

அட இதுவும் நம்ம இந்தியா வில தாங்க இருக்கு....

God bless us.

நவ திருப்பதிகள் அமைந்துள்ள இடத்திற்கு பக்கத்தில் ஏரல் என்னும் ஊருக்கு மிக அருகில் திருப்பதியில் உள்ளது போலவே வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது.

அன்புடன்
THAVAM

தோழி ஹசீனா இப்ப தான் வீடியோ பார்த்தேன் .மிகவும் மனதிற்கு கஷ்டமாக உள்ளது .விரைவில் இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்தனை saikirayen இப்படிக்கு சௌமியன்

//ஸ்பெக்ட்ரம்-ல எந்த இழப்பும் இல்லைன்னு செய்தி படிச்சேன்...//
அப்படியொரு விஷயமே நடக்கலன்னு சொன்னாலும் சொல்லுவாங்க லதா. எந்த இழப்பும் இல்லைன்னு சொன்ன வாய் எதுவும் நடக்கலன்னு சொல்றதுக்கு ரொம்ப நாளாகாது. அதுக்காக தான் காத்திருக்கேன். அப்படி மட்டும் சொல்லிட்டாங்கன்னா எனக்கு நானே சபாஷ் சொல்லிகுவேன் உங்கள மாதிரி ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//உங்க ஊர்ல யாவது வெங்காயம் கிலோ 40 ரூவா, தக்காளி 35 ரூவாதானே,
நீங்கல்லாம் எவ்வளவோ பரவால்லைப்பா, இங்க மும்பைல இப்பவும் வெங்காயம்
கிலோ60- லேந்து இறங்க மாட்டேன்னு சண்டித்தனம் ப்ண்ணுது//

இப்ப தான் மார்க்கெட் போய்ட்டு வந்தேன் கோமு.

வெங்காயம்- 20 ரூபாய்
பட்டாணி- 15 ரூபாய்
தக்காளீ- 15 ரூபாய்
பஜ்ஜி மிளகாய்- 1/2 கிலோ 8ரூ ;)

ஆனா நம்மூர் சைட் கிடைக்குற வெண்டைக்காய் 1/4 கிலோ 15, பீன்ஸ் 15, அவரைக்காய் 15 :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்