pcod ப்ராப்ளம் இருந்து குழந்தை பெற்றவர்கள்

pcod problem இருந்து குழந்தை பாக்கியம் பெற்ற தோழிகள் ,நீங்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகள் ,மற்றும் எவ்வளவு நாள் சிகிச்சை பெற்று கரு உருவாகியது என்று இங்கு வந்து பகிர்ந்துக் கொண்டால் ,என்னை போன்ற pcod ப்ராப்ளம் உள்ள தோழிகட்கு மிகவும் உதவிகரமாக இருக்குமென நம்புகிறேன் ,கண்டிப்பாக பதில் போடுங்கள் தோழிகளே ..

உங்களின் பயனுள்ள கருத்துக்களை போடுங்கள் தோழிகளே ...
நன்றி .....

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நீங்க எந்த இடத்தில இருக்கீங்க .எப்பயும் நடுராத்திரி ,இல்லைனா அதிகாலைல வாறீங்களே .அதனால கேட்டேன்.வேறொன்னும் இல்லபா.நீங்க சீக்கிரமா ஒரு(ரெண்டு )குட்டி பாப்பாக்கு அம்மா ஆக வாழ்த்துகிறேன்!!!.எந்த சுழ்நிளையிளையும் நம்பிக்கையோட இருங்க !!நல்லதே நடக்கும் கடவுளை வேண்டிகிறேன் சீக்கிரமா நல்ல செய்தி சொல்ல !!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

dont worry enakkum andha problom irundadu. but iam allright .edu patri vilakamaga earkanavae pasi ullom. tedi parkavum

சங்கீ உங்களுக்கு குழந்தை இருக்கா ?
சோனியா நீங்க பி.சி .ஒ இருந்து கர்ப்பமாக ஆகி இருக்கீங்க ?உங்க ஏஜ் என்ன ?திருமணமாகி எவ்வளவு நாள் கழித்து குழந்தை உருவானது ..
நீங்க எந்த மருத்துவரை அணுகினுங்க ,ப்ளீஸ் சொல்ல முடியுமா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

.\.ஹாய் அஸ்வதா நான் தமிழ்நாட்டிலேயே தான் இருக்கேன் ../.
மிக்க நன்றி மா எனக்காக கடவுள் கிட்ட வேண்டுவதற்கு .
....

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

யாருமே பதிலோ ,அட்வைசோ சொல்ல மாட்டிங்களா தோழிகளே ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

சோனியா ,நான் இப்ப டாக்டர் கொடுக்குற மருந்து லாம் எடுக்குறேன் ,அவங்களும் நல்ல கை ராசி காரவங்க தான் ..நிறைய பேர் நம்ம மாதிரி pcos அவங்க கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்து ,குழந்தை பெற்று இருக்காங்க லாம் ,,எனக்கு இன்னைக்கு
19 vadhu நாள் ,நேற்று செக் பண்ணாங்க ,கருமுட்டை உருவாகவே இல்லைன்னு சொன்னாங்க ,நான் evalon ,exermet -500,folic acid tablet எடுக்குறேன் ,எனக்கு மனசு கழ்டமா இருக்கு ..எனக்கு குழந்தையே பிறக்காதா ?நான் ட்ரீட்மென்ட் இந்த மாசத்துல இருந்து ரெகுலரா எடுக்கலாம்னு இருக்கேன் ..நீர்க்கட்டிகள் மாத்திரை கொடுத்து கரைக்கும் அளவில் தான் இருக்குனு சொன்னாங்க ,அது கொஞ்சம்
ஆறுதலா இருக்கு,என் வீட்டு காரருக்கு எல்லாம் நார்மல் ,,எனக்கு உங்க அட்வைஸ் தேவை ,,உங்க அனுபவம் பற்றி சொன்நீங்கன்னா எனக்கு ஆறுதலா இருக்கும்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

எனக்கு இத நினச்சு எத்தனயோ நாள் ,தூக்கம் கூட வர முடியாம இருக்கு ,,எல்லா கவலையையும் சிரிச்சு தூலாக்குற எனக்கு ,இது மட்டும் (குழந்தை இல்லாதது )பெரும் கவலையாய் இருக்கு ,பா ..
எனக்கு திருமணமாகி ஒரு வருடம் எட்டு மாதம் ஆகிறது ..இப்ப தான் ட்ரீட்மென்ட் எடுக்குறேன் //

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அன்பு பாரதி தயவு செய்து வருத்த படாதிங்க. சீக்கிரம் தாயாக வாழ்த்துகள். பிசிஓ ஒரு பெரிய பிரச்சனை இல்லைபா. அது சரி பன்ன கூடியவை தான். அதுவும் மாத்திரைல சரியாகும் பிரச்சனை தான். இது போய் கவலை படலாம. முதலில் சரியான ரீட்மெண்ட் எடுங்க. என் அனுபவத்தில் சொல்றேன். ஒரு மாதம் ஆஸ்பத்திரி போரது, அடுத்த மாதம் போகாமல் இருப்பது, நம்பிக்கை இல்லாமல் இருப்பாது இத முதலில் விடுங்கபா. முதலில் நம்பிக்கையா ரீட்மெண்ட் எடுங்க. அதுவும் தொடர்ந்து எடுங்க ஓகேவா. நான் உங்களை போல தான் ஒரு மாதம் போவேன் அடுத்த மாதம் ஏமாற்றம் ஆனவுடன் போக மாட்டேன். அப்புரம் யாராவது போக சொல்லுவாங்க மருபடியும் போவேன், அப்புரம் போக மாட்டேன். அதுக்க அப்புரம் தான் நல்ல ப்ரேயர் செய்துட்டு ஒரு மூன்று மாதம்பா தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்தேன்பா. நான்வது மாதம் கர்ப்பம் தரித்தேன். சோ நீங்க தொடர்ந்து மருந்து சாப்டுங்க. எல்லாம் நல்லதே நடக்கும். உங்க சிகினேச்சர் என்ன போட்டு இருகிங்க அத செய்ங்க ஓகேவா. அது தான் முக்கியம். நானும் உங்க நிலமையில் இருந்து இருக்கேன். இது எவ்வளவு கக்ஷ்டமாக இருக்கும்னி எனக்கு தெரியும்பா. ஆனால் மனதை தளர விடாதிங்க சீக்கிரம் தாயாக வாழ்த்துகள். எனக்கு டாக்டர் 3மாதம் கார்மோன்ஸ் மாத்திரை தைராய்ட் மாத்திரை கொடுத்தாங்க, அப்புரம் எக் வளர ஒரு 5மாத்திரை தான் கொடுத்தாங்கபா. அந்த மாத்திரையை தான் 4வது மாதம் பிரியட் வந்த 2வது நாள் சாப்ட சொன்னாங்க. அதன் பிறகு எந்த மாத்திரையும் கொடுக்கல. டாக்டர் சொன்னது போல கர்ப்பம் ஆனேன். சோ தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுப்பா அதான் நல்லது. நல்லா ப்ரேயர் பன்னு.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எனக்கும் pcos இருக்கிறது.நான் 8 மாதமாக சிகிச்சை எடுக்கிறேன்.எனக்கு கடந்த மாதம் மாதவிலக்கு சரியான தேதியில் வந்து விட்டது.கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது.நீங்களும் தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் பலன் கிடைக்கும் தோழியே.கூடிய விரைவில் நாம் தாய் ஆவோம்.கவலைப்படாமல் டாக்டர் ஆலோசனை படி நடங்கள்.

மேலும் சில பதிவுகள்