அட்மின் அவர்களுக்கு , """ ஒரு சின்ன வேண்டுகோள் "

அட்மின் அவர்களுக்கு வணக்கம் ,
உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்க ஆசைபடுகிறேன் ,
"""" கடந்த சில நாட்களாக நமது அறுசுவை இணையத்தில் பல "மனம் கஷ்டம் கொள்ளும் அளவிற்கு நமது அறுசுவை தலைப்புகள் போய்கொண்டு உள்ளன ,
அதும் கணவன் மனைவி இடையே உள்ள அந்தரங்ககள் சில வெளிபடையாக வெளி இடபடுகிறது ,
இது சில சகோதரிகளுக்கு மனக்கசபாக குட இருக்கலாம் , இதை தவிர்ப்பது உங்களிடம் தான் உள்ளது, கடந்த 2 நாட்களுக்கு முன் நான் ஒரு சகோதரியின் தலைப்பான """ please help to get pregnant """ கொஞ்சம் எதோ ஒரு தலைப்பு கொடுத்து உள்ளார் ,அதில் இல்லற உறவை தவறாக பொதுவாக வெளிகட்டுவது தவறுதானே ,
தனது கருத்தை வெளியிடலாம் ஆனால் எதற்கும் ஒரு வரம்பு இருக்கு இல்லையா>? அதை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மேலும் நான் விடுக்கும் ஒரு கோரிக்கை என்ன என்றால் இனி நமது சகோதரிகள் "புதியதாக சேர்க்கும் தலைப்புகளை சற்று தணிக்கை செய்ய வேடுமாய் கேட்டுக்கொள்ள விருபுகிறேன் ,
மேலும் அதேனும் தவறாக சொன்னால் மன்னிக்கும் ,
உங்களிடமிருது பதிலை எதிர்பார்கிறேன் ,

என்றும்
அன்புடன்
யளிநி கார்த்தி ,

admin,
Ungal pathilukaga kathirukiren

நாலு பேரிடம் முகம் காணாமல் பேசி தெரிஞ்சுக்கனும் சரி தான்..அதுக்காக சுத்தமாக வெக்கமே இல்லாம எப்படி செய்றது என்ன செய்றது எப்ப செய்றது என்ற கேள்வியெல்லாம் ரொம்ப ஓவெர்.தாமாக திருந்தினால் சரி தான்.
அதும் முன்னயாவது எப்பவாவது தான் இப்படியெல்லாம் வரும்..இப்பல்லாம் இருக்கிற மொத்த த்ரெட்டும் இப்படியா தான் இருக்கு..கேட்கும் விதத்தை ஓரளவு டீசென்டா மாத்திட்டாலும் கூட போதும்
சிலர் வேறெதுவுமே இல்லாமல் மொட்டையாக எனக்கு எப்படியாச்சி குழந்தை வேண்டும்னெல்லாம் தலைப்பு போடுவது..இதற்கு ஏடாகுடமா யாராவது பதில் போட்டால் என்னவாகும்?

மிகவும் சரியான பதிவுதான் போட்டிருக்கீங்க யாழினி....
உதவி வேண்டும் என்ற பெயரில் வரம்பு மீறி சிலர் கேள்விகளை கேட்கதான் செய்கிறார்கள்.என்ன செய்வது சில நேரம் நாசுக்காக சொல்வோம்... சில நேரம் கண்டும் காணாமல் போய் விட வேண்டியதாக உள்ளது...அப்படியாவது இது போன்று மீண்டும் யாரும் கேட்க மாட்டார்கள் என்று ஒரு நினைப்புதான்.அப்படியும் சிலர் விடுவதாய் இல்லை.
இப்ப நீங்க சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான்....
பார்க்கலாம் அட்மின் அண்ணா என்ன சொல்கிறார் என்று.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எப்பவாவது வந்து மன்றத்தில் என்ன தலைப்புன்னு பார்த்தா, எல்லாமே வாரத்துக்கு 3 பதிவு இந்த தலைப்பு தான், சரியான டாக்டரை அனுகாம இப்படி உலகமே உங்களை உற்று நோக்கும் இடத்தில் இப்படி கேட்பது சரியா?
சரியா தான் போட்டு இருக்கீங்க யாழினி.
ஜலீலா

Jaleelakamal

நான் பலமுறை குறிப்பிட்டுள்ள விசயம்தான். தயவுசெய்து அட்மினுக்கான கேள்விகளை, அட்மின் அறிய வேண்டும் என்று நினைக்கும் தகவல்களை arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்பவும். அல்லது "தொடர்புக்கு" பக்கம் வாயிலாக அனுப்பவும். 'அட்மின் கவனிக்க' என்று மன்றத்தில் எல்லோரும் பார்க்கும்படி வரும் பதிவுகளுக்கு நான் பதில் அளிக்க விரும்புவதில்லை. அட்மின் கவனிக்க என்பதை அட்மின் மட்டுமே கவனிக்க வேண்டும். அதற்கு மன்றத்தைவிட மின்னஞ்சல்தான் சரியான வழி. மன்றத்தில் நான் கவனிக்காத நேரத்தில் வரும் பதிவுகள் என் கண்ணில் படாமலே சென்று விடுவது உண்டு.

அதேபோல், சிறு தவறுகள் நடந்தால்கூட, உடனே பாய்ந்து ஓடி வந்து, 'அய்யோ அறுசுவை மொத்தமும் அசிங்கப் பதிவுகள்.. எல்லாமே ஒரே அரட்டை பதிவுகள்..' என்று அறுசுவையே அசிங்கம் என்பதுபோல் முலாம் பூச முயற்சி செய்பவர்களையும் நான் விரும்புவதில்லை. இவர்கள் மற்ற நேரங்களில் பேசுவதில்லை. அக்கறை கொண்டோர் என்னுடன் தனிப்பட்ட முறையில், சாட்டிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு பேசுகின்றார்கள். பிரச்சனைகள், தவறுகளை சுட்டிக் காட்டுகின்றனர். அதுதான் சரியான அணுகுமுறை என்பது எனது கருத்து. தயவுசெய்து ஒத்துழைக்கவும்.

மேலும் சில பதிவுகள்