***** பிரயோசன அரட்டை - 15 *****

தோழிகளே, நான் படித்து, கேட்டறிந்த சில மருத்துவ குறிப்புகளையும், சில உபயோகமான தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். அதன்மூலம் அரட்டையை மற்றவர்களுக்கும் பயன்படுமாறு மாற்றவும் நினைக்கிறேன். ஆகையால், தோழிகளே உங்களுக்கு தெரிந்த, நீங்கள் உங்கள் பெரியவர்களிடம் இருந்து கற்ற, அனுபவமுறையில் கண்ட கைவைத்திய மருத்துவ முறைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். அதனூடே அரட்டையும் தொடரட்டும். ஒத்துழைப்பீர்கள் என நம்பும் உங்களுள் ஒருத்தி :)

தோழிகளே, நான் இல்லப்பணிகளை முடித்து உங்களுடன் இணைந்து கொள்கிறேன். அதுவரை உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஏன்டா இதற்கு தனி இழை தொடங்க போவதாக சொன்னதாக நியாபகம் .ஏன்பா அரட்டையில் தொடங்கி இருகிறீர்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மருத்துவ குறிப்புக்கு ஏற்கனவே பல இழைகள் இருக்கு டா.. அரட்டை பயனுள்ளதா இருக்கனும்ன்னு நீதானே சொன்னாய்.. இப்ப இத ஏன் அரட்டையோட சேர்த்திங்க அத ஏன் அரட்டை யோட சேர்க்கரிங்கன்னா நாம அப்ப அரட்டைல பேசவே முடியாது டா.. உன் தோழி என்ற முரைல உரிமையா கேக்கறேன் தவற இருந்தா மன்னித்து விடு

அஸ்சு, இதை தனி இழையாக தொடங்கினால் அதில் அந்த அளவிற்கு பதிவுகள் வருமா என்று தெரியாது. அரட்டையை கொஞ்சம் பயன்படுமாறு இருக்கட்டும் என்று இதில் தொடங்கினேன். மருத்துவ குறிப்புக்கென்று தனி இழை தொடங்கினால் அதில் அரட்டை அடிக்க கூடாது. அரட்டையில், அரட்டையில் உபயோகமான தகவல்களோடு, அரட்டையும் தொடரட்டும் என்று இங்கேயே தொடங்கிவிட்டேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஏன்னா என்னக்கு இங்க அரட்டை அடிக்க மனசே வராதுடா ...அரட்டை இங்கே அதிகமாகிடுமொன்னு தான் கேட்டேன்டா.வேற ஒன்னும் இல்ல .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் கல்ப்ஸ் நல்ல முடிவு சரி எனக்கு தெரிந்ததை சொல்ரேன் பா

சின்ன பசங்களுக்கு சளி பிடிச்சி இருந்தாள் இரவு தூங்கும் போது சரியா அவங்களாள தூங்க முடியாது அதுக்கு தேங்கா எண்னெயய் ஒரு சிரு கரண்டியில் எடுத்து அதில் ஒரு சிரு துண்டு கற்ப்பூரம் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயய் முதுகு மார்புப் பகுதி யி நல்லா தேச்சிவிட்டா சுகமா தூங்குவாங்க சளியும் குறையும்

அன்புடன்
ஸ்ரீ

ஆரம்பக்கட்ட சளி பிடிக்கும்போது லேசா தொண்டைல அறிப்பு மாதிரி ஒரு அறிகுறி தெரியும்ல அப்ப நான் உடனே ஒரு கப் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பெப்பர் சிறிய அளவில் போட்டுக் கலக்கி குடிச்சிடுவேன். அடுத்தநாள் நார்மலா ஆயிடும். சரி என்னதான் ஆகுதுன்னு பாக்கலாம், அப்படின்னு அந்த அறிகுறிய கண்டுக்காம விட்டா... அப்புறம் மாத்திரை மருந்துன்னு ஓடுவேன்;(

இதே மாதிரி ரன்னிங் நோஸ் ஸ்டார்ட் ஆச்சுனா விரலி மஞ்சளை விளக்கு தீபத்தில காட்டி எரிய வைச்சு அதன் கனலில் இருந்து வரும் புகைய சுவாசிப்பேன். இந்த முறையிலும் எனக்கு பலன் கிடைச்சிருக்கு.

குழந்தைக்கு காய்ச்சல், சளி பிடிச்சதுனா தேங்காய் எண்ணெயில் மஞ்சள் கலந்து கால்பாதம், உள்ளங்கை போன்றவற்றில் சூடு பரக்க தேய்ச்சு விட்டுடுவேன். நெஞ்சிலும், முதுகிலும் இதமா அதே எண்ணெயை தடவிடுவேன். இதனால என் குழந்தைக்கு காய்ச்சல் சளி விட்டிருக்கு. இதெல்லாமே ஆரம்பத்திலேயே கவனிச்சு பண்ணினாதான் பலன் கிடைக்கும். சளி ரொம்ப முத்தி, அதிக காய்ச்சல் என்றால் டாக்டரை அனுகுவதே நல்லது.

Don't Worry Be Happy.

நலம் பா..விவசாயம்..? ? ? ?...ஏதோ போகுது பா..சுவர்...வந்தாச்சு பா...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

உங்க லாலி பப்புக்கு ரொம்ப நண்றி பா

அன்புடன்
ஸ்ரீ

நலம்...வீட்டுல அனைவரும் நலமா?

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

மேலும் சில பதிவுகள்