கோபி மசாலா

தேதி: January 31, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

காலிஃப்ளவர் - பெரிய பூவாக ஒன்று
வெங்காயம் - 4
தக்காளி - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வரமிளகாய் - 4
தாளிக்க - கடுகு, உளுந்து, தட்டிய பூண்டு, கடலைப்பருப்பு
அரைப்பதற்கு:
தேங்காய் - கால் மூடி
நிலக்கடலை - 2 கைப்பிடி
தனியா - ஒரு கைப்பிடி
மிளகு - அரை தேக்கரண்டி
வர மிளகாய் - 6
பூண்டு -ஒன்று
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4


 

அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், பூண்டு தவிர அனைத்தையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். நிலக்கடலையை தோல் நீக்கி நீர் சேர்த்து மைப்போல் அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காலிஃப்ளவரில் ஒவ்வொரு பூவாக பிரித்து வெந்நீரில் 5 நிமிடம் வைக்கவும்.
அரைப்பதற்கு கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்துக்கொள்ளவும்.
பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய கிளறவும்.
பின் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவைக்கு நீர் சேர்த்து வேக விடவும்.
கிரேவி பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான கோபி மசாலா தயார். சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்தும், வெறும் சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதை கண்டிப்பாக செய்துபார்த்துவிட்டு சொல்கிறேன் .இன்னும் வித்யாசமான நல்ல குறிப்புகளை கொடுக்க வாழ்த்துகிறேன்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவினர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முதலாலாய் பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி அஸ்வதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா... சூப்பர். கைவசம் கோபி ரெடி... செய்துடறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முகப்பில் பார்த்தவுடன் நினைத்தேன் இது உங்க குறிப்புன்னு ..சூப்பர் ஆமினா
வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

ஆஹா....எனக்கு பிடித்த கோபி மசாலா.

சூப்பர் ஆமினா.ரொம்ப நல்ல இருக்கு.

வாழ்த்துக்கள்.

ஹசீன்

ஆமி

சூப்பர்ப் வாழ்த்துகள் சண்டே செய்துபார்க்கிறேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் ஆமினா. நேற்று காலிப்ளவர் வாங்கினேன்.{வாங்கிய நோக்கம் வேறு.பஜ்ஜிகாக}உங்க குறிப்பு பார்த்து ப்ளான் மாற்றி இன்று மதியத்துக்கு செய்துவிட்டே உங்களுக்கு கருத்திடுகிறேன்.நல்லாவந்திருக்கு. டேஸ்டும் சூப்பர்.நன்றி.{படமும் எடுத்து வைத்திருக்கிறேன்.}

மிக்க நன்றிக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//முகப்பில் பார்த்தவுடன் நினைத்தேன் இது உங்க குறிப்புன்னு//
;)

மிக்க நன்றீ ருக்‌ஷானா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி ஹசினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி மஞ்சுளா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி அம்முலு...

சிக்கிரமா போட்டோ அனுப்புங்க... நாங்களும் பாக்கணும் ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா உங்க காரட் அல்வா போட்டோ அண்ணாவுக்கு அனுப்பினேன்.ஆனால் போடுவார்களா தெரியவில்லை.உங்களிடம் என் ஐடி இருக்குதானே.அதில் பதில் போடுங்க.நான் அனுப்புகிறேன்.

உங்க ஐடி என்னிடம் இல்லையே......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்க எல்லா சமையலுக்கும் நிலக்கடலை சேர்க்கிரீங்க வித்தியாசமாக இருக்கு.
இதுவும் ஹோட்டல் முறையா?

Jaleelakamal

அக்கா இது ஆந்திரா சமையல்... ஆந்திராவில் எல்லாத்துக்கும் நிலக்கடலை சேர்ப்பாங்க. தாளிப்புல பூடு இல்லாம இருக்காது, கோழி குழம்புக்கும் புளி ஒரு உருண்டை போடுவாங்க ;) என் வீட்டுக்கு சமீபத்தில் ஆந்திராவிலிருந்து வந்த உறவினரின் சமையல்கள் இது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

amina akka gopi masala supera irunthathu. nan ippathan samayal kathukiren. so ithe mathiri niraya kurippu sollunga ok.

மிக்க நன்றி விஜி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆமினா இன்று கோபி மசாலா செய்தேன் நல்லா இருந்தது நன்றி