பட்டிமன்றம் - 34 : தொடர்கதையா?சிறுகதையா?

காத்திருந்து யாரும் நடுவரா வராம பட்டி துவங்காம இருந்த காரணத்தால் நானே துவங்குறேன். வாதிட கண்டிப்பா வந்துடுவீங்கன்னு நம்பறேன். :) ஏமாற்றாம வந்துடுங்க. நம்ம தலைப்பி :

சிறந்தது எது? தொடர்கதையா?சிறுகதையா?

சூப்பரான தலைப்பை தந்த பவித்ரா'கு மிக்க நன்றி.

இதில் கதை புத்தகம், டிவி சீரியல் என எல்லாமே அடங்கும். மற்ற பட்டியின் விதிமுறைகள் இதுக்கும் பொறுந்தும்.

எல்லாரும் பட்டிக்கு வாங்க. ஆரம்பிங்க சூடான வாதத்தை.... மாலை நேரம் டீ, காபியோட எல்லாரையும் வாங்க வாங்கன்னு அழைக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் கதைக்கும் ரொம்ப தூரம்,,,,,,,
//டிவி சீரியல் என எல்லாமே அடங்கும்.///// --- பதிவு போடலாமான்னு யோசுச்ச அப்ப, இந்த வார்த்தை பார்த்தேன். நமக்கு தான் டிவி பார்ப்போம் இல்ல. அப்ப பேசலாம்ன்னு வந்தேன்..சீக்கரம் எந்த பக்கம்ன்னு முடிவு பண்ணீட்டு , மீண்டும் வரேங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி முதல் ஆளாக வந்து பதிவிட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். பிடிங்க கும்பகோணம் பில்டர் காபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க மகிழ்ச்சி., எங்கே இந்த வாரம் பட்டி இல்லாமலேயே போயிருமோன்னு கவலைப் பட்டேன்.. முதலில், பட்டிக்கு வந்த நடுவர் இல்லை என்ற தடங்கலை கலைந்து,தானே முன்வந்து நடுவர் பொறுப்பை ஏற்று ஆரம்பித்த உங்கலுக்கும், அழகான தலைப்பைக் கொடுத்த தோழி பவித்ராவுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்;-)

பட்டியில் வாதத்திறமைகளை காட்டி சிறப்பிக்க தோழிகளை அன்போடு அழைக்கிறேன்;-)

Don't Worry Be Happy.

ஜெயலக்ஷ்மி மிக்க நன்றி. நீங்க எந்த அணின்னு சொல்லவே இல்லையே...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா தீர்ப்புக்காக நாங்க ஒரு வாரம் பொருத்திருக்கோம்ல;-)
அதனால நான் எந்த பக்கம் என்பதையும் ஒரு வாரம் இல்லை ஒரு நாள் மட்டும் பொருத்துக்குங்க, எப்பூடீ;-)

Don't Worry Be Happy.

நடுவர் அவர்களுக்கு எனதன்பு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.!!!எனக்கு பிடித்தது தொடர்கதையாய் இருந்தாலும் ரொம்ப ரொம்ப பிடித்தது சிறுகதைதான்.இது பாஸ்ட்புட் காலம் நடுவரே.இப்போதுபோய் தொடர்கதைன்னு சொன்னா அடிக்கத்தான் வருவாங்க.இப்போ உள்ள தொடர்கதைகள்(சீரியல்களை பார்ப்போர் எல்லாம் பிடித்துபோய் பார்கிறார்கள் என்று நினைத்தீரா என்ன !!வேறு வழி இல்லாமல் பார்கிறார்கள் நடுவரே:-> !!!ஒரு வார இதழை எடுத்து கொண்டால் அதில் ரெண்டு சிறுகதை ஒரு தொடர்கதை என்றுதான் இருக்கும்.அங்குகூட மெஜாரட்டி சிறுகதைதான் ...சிறுகதைதான் என்று எனது வாதத்தை சிறுகதை என்று தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

லேட்டா வந்தா எங்களுக்கு பில்டர்காபி இல்லையா? சிம்பிளான தலைப்பை எடுத்து சிவியரா வாதாடுவோம் நல்ல தலைப்பு நானும் எனதணியை விரைவில் முடிவு செய்து வருகிறேன் ...
வாழ்த்துக்கள் நடுவரே உங்களுக்கு..

வாழு, வாழவிடு..

நடுவரே, நல்ல தலைப்பு, பட்டி நன்கு நடைபெற வாழ்த்துகள் :), பட்டி தடைபெறாமல் இருக்க மீண்டும் பெரிய பொறுப்பை ஏற்றதுக்கு இப்பவே சால்வை, நறுமண மலர்களின் பூக்கொத்து பிடிங்க, நன்றி.

சந்தேகமில்லாமல் சிறுகதை தானுங்க சிறந்தது. எந்த ஒரு பெரிய கதையின் சாராம்சத்தையும் ஒரு சிறு வரியில் சொல்லலாம்னு சொல்லுவாங்க. ஒரு தொடர்கதையே கூட பல சிறுகதைகளின் தொகுப்பா இருக்கும் பொழுதுதான் அது அருமையா இருக்கும். அது மட்டும் இல்லாமல் தொடர் கதை ஒரு அடிக்ஷன் மாதிரி. அது மனதை ஆக்ரமிக்க கூடியது. ஏன் இன்றைய கவுன்சிலர்கள் சொல்றதெல்லாம் பெண்களை எப்பவும் மெகா சீரியல் பார்க்காதீங்கன்னும், ஆண்களை எப்பவும் செய்திகளையே பாக்காதீங்க என்பதும்தான். அந்த அளவுக்கு மெகா சீரியல் மனசை ஆக்கிரமிச்சு வேண்டாத விளைவுகளை ஏற்படுத்துது.

சிறந்த கதை என்பது நல்ல ஒரு விஷயத்தை, கருத்தை ஈசியா நமக்கு புரியும்படி சொல்லணும். இந்த வேலையை ஒழுங்கா செய்வது சிறுகதைகளே நடுவர் அவர்களே. அறநெறி கதைகள், பஞ்சதந்திர கதைகள், விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள், தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள், முல்லா கதைகள், fairy tales, மால்குடி டேஸ், பரமாத்மா குரு கதைகள்னு எத்தனை எத்தனை சிறுகதைகள் நமக்கு எத்தனை எத்தனை நல்ல நெறிகளை கத்து கொடுத்திருக்கு நீங்களே யோசிங்க. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தாலும், ஒவ்வொரு கதையும் தனியே தனியே சிறந்தவையா விளங்கி இருக்கு, நல்ல நெறிகளை சொல்லி இருக்கு. ஆனால், ஒரு தொடர் கதை ஒருத்தரோட வாழ்க்கையை பத்தி மட்டுமே திருப்பி திருப்பி சொல்லி இன்னொருவர் வாழ்கையை நாம் காலை முதல் மாலை முதல் கவனிக்கிற போன்ற உணர்வை தான் ஏற்படுத்துது, இது நல்ல உணர்வா சொல்லுங்க. எனவே சிறுகதைகளே சிறந்தது சிறந்தது சிறந்தது.

இதுவும் கடந்து போகும்.

குரித்த நேரத்தில் காத்திருக்காமல் பட்டியை ஆரம்பித்த நடுவருக்கு வாழ்த்துக்கள். நல்ல தலைப்பு கொடுத்த பவிக்கு நன்றிகள். போன இரண்டு பட்டிக்கு பதிவு போட்டதோடு சரி வாதாட முடியாம போச்சு இந்த பட்டியில் கண்டிப்பா கடைசி வரை என் வாதம் இருக்கனும்ன்னு நானே நினைக்கிரேன் சரி எந்த பக்கம்ன்னு யோசிச்சு சிருகதைகளே அப்படின்னு ஆரம்பிக்கரேன்.

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்